வியாழன், 30 மே, 2013

ஒரு மைக்ரோ கதை

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம். சாலைகளில் அதிக எண்ணிக்கை வாகனங்கள்.  பிரதான சாலையில் திரும்பும் போது என்னுடைய வண்டியை இன்னொருவன் உரசிவிட்டான். இருவருக்கும் அடிபடவில்லை. வண்டியிலும் கூட சேதம் இல்லைதான்.. சிறிய உரசல் தவிர. 

இதுதான் மேட்டர்..

அதை இரண்டுவிதமாக ’டீல்’ செய்வோம்...

முதல் வகை

”யேய்... பார்த்து வர மாட்ட...பெரிய ஏரோபிளேன்ல வர்றதா நினைப்பா...” நான்
”நீ பாத்து வா முதல்ல.. ராங்கல கட் பண்ணது யாரு.. நீயா நானா...” அவன்
”யேய்.. மரியாதயா பேசு... அப்பறம்....”நான்
”யேய்.. என்ன பெரிய இவனா நீ....”அவன்
”டேய்..பெரிய தாதாவா நீ...” வண்டிய விட்டு அவனை நெருங்க....
”என்னடா பெரிசா பேசற...”, அவனும் கித்தாய்ப்பாக முன்னேற...
நான் முன்னேற அவன் முன்னேற...
கிட்டத்தட்ட வடிவேல் கதை போல ”சண்டையில கிளியாத சட்ட உண்டா...”ரேஞ்சுக்கு செல்ல
களேபரம்.. பிறகு வேடிக்கை பார்த்த கூட்டம் கொஞ்ச நேரம்  எங்கள் சண்டையை enjoy செய்துவிட்டு போலீஸ் வந்ததும் பஞ்சாயத்து.. மறுபடியும் இரண்டு பேர் வண்டியையும்  காவல் நிலையம் எடுத்துச் சென்று.. அபராதம்... அறிவுறுத்தல்.. மிரட்டல் இத்யாதி. இத்யாதி...

இரண்டாம் வகை.

” சாரி.. சார்.. சட்டுனு வந்துட்டேன்..” நான்
”பரவாயில்ல..” அவர்
”எக்ஸ்ட்ரீம்லி சாரி எகெய்ன்...” புன்னகையுடன்
” இட்ஸ் ஓக்கே சார்..” அவரும் புன்னகையுடன் சென்றார்.

===
இதுதான் கதை..
நான் இப்போதெல்லாம் இரண்டாம் வகையைத்தான் விரும்புகிறேன்...
”எங்கும் சாந்தி நிலவவேண்டும்...”
===
பிகு
இந்த சம்பவம் என் நண்பர் ஒருவர் சொன்னார்... ஆனால் 1975 லில்   Abbas Kiarostami என்கிற ஈரானிய இயக்குனர் Two Solutions For One Problem என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.. யூடியூப்பில் இருக்கிறது.. முடிந்தால் பாருங்கள் எத்தனை அழுத்தமான விசயத்தை நான்கு நிமிடத்தில் சொல்லியுள்ளார்..

சனி, 25 மே, 2013

நீரின்றி அமையாது உலகு…..

வள்ளுவன் இன்றிருந்தால் குறளை வேறு மாதிரிதான் பாடியிருப்பான்,,, அதாவது நன்நீரின்றி அமையாது உலகு என்று……
சமீபத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன்…(குடும்பத்தினருக்காகதான் எல்லாம்)… இயன்ற வரை திருப்பதிக்கு வீட்டுத் தண்ணீர்தான் கொண்டு சென்றோம்.. இரண்டாவது நாள் தீர்ந்து விட்டது…  ஆந்திர வெயிலுக்கு கேட்க வேண்டுமா…?  கீழ் திருப்பதியில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ 5க்கு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர்…  அட… என்று வாங்கிக் குடித்தேன்…  திருமலையிலும் அதேதான்….
அவ்வளவுதான்…
இரண்டு நாள்கள் படாத அவஸ்தை…
நீயா நானா கோபிநாத் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்… water borne disease  என்று… அதை பார்த்தபின்னரும் … சரி……
ஒரு வழியாக மருத்துவர் உதவியுடன்…. மீண்டும் இந்தப் ப்ளாக்கை சந்தோசமாக எழுதுகிறேன்….
ஆக அன்பார்ந்த மக்களே….
நன் நீரின்றி அமையக்கூடாது உலகு……


சனி, 18 மே, 2013

WHERE THERE IS LOVE.....

இந்த பரபரப்பான உலகில் எதுவும் இன்ஸ்டெண்ட்டாகச் சொன்னால்தான் எடுபடுகிறது... சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாணி திருக்குறள் காலத்தயது என்றாலும்.. தோழர் பட்டாபிராமன் தன் மகனுக்கு அழைப்பிதழ் தந்தார்.  முகப்பில் இருந்த வாசகம் சட்டென்னு மனதை பற்றிக் கொண்டது.
அவை
”WHERE THERE IS A LOVE,  THERE IS LIFE...“

அய்யன் வள்ளுவன் வாக்கும் அதுதான் அன்பும் அறனும் என்று கூட ஒரு ”அற”த்தையும் சேர்க்கிறான்..

எத்தனை உண்மை பாருங்கள்....
உலகில் the GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH
நிசர்தனம்தானே.....

வியாழன், 16 மே, 2013

தண்ணீர் பட்ட பாடு


தற்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் தண்ணி அடிப்பது என்னவோ உலகமகா விசயமாக காட்டுகிறார்கள்,, அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற படங்களில் இதைப் போல நடக்கிறது….
ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானம் அடிக்கடி  தண்ணி அடிப்பதைப் பற்றி லெக்சர் கொடுப்பார்,
எதிர்நீச்சல்  படத்தில் சிவகார்த்திகேயன் தன் நண்பரிடமிருந்து கூலிங் பீரை நைசாக எடுத்துக் கொள்வார்..
சூது கவ்வும் படத்தில் அடிக்கடி தண்ணி அடிப்பதை முக்கியமான காட்சிகளாக வரும்…
மக்கள் என்ன அத்தனை சந்தோசமாக இந்தக் காட்சிகளை ரசிக்கிறார்களா….? 

தேர்தலும் சிரிப்பும்


சமீபத்தில் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்து, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  அதன் காரணம் பற்றி பலர் பலவிதமாக வியக்யானம் செய்தாலும், புதிய தலைமுறை தொலைகாட்டிசியில் காலை நேரத்தில் பேசியவர் (பெயர் தெரியவில்லை)  சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் மெலிதாகச் சிரித்துக் கொண்டே ஒரு வார்த்தை சொன்னார்.. “இது பிஜேபி காங்கிரசுக்கு தந்த ஒரு பரிசு“  என்றார், 
வெகு நேரம் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.. மேற்கொண்டு பேட்டியை பார்க்கவே முடியவில்லை.

ஞாயிறு, 12 மே, 2013

மகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன


தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான படைப்புகள் வருவது குறைவுதான்,  அவ்வப்பொழுது சில படங்கள் நிச்சயமாக முக்கிய படைப்புகள்தான் திகழ்கின்றன.  அதே சமயம் மக்கள் ஆதரவும் பெறும் படங்களாக ஆவது சில படைப்புகள்தான்.  இந்த இரண்டு குணாதிசயங்களுடன் வந்த படங்கள் வரிசையில் முக்கியமானவை
1)   மகாநதி
2)   அங்காடித் தெரு
இரண்டையும் சற்று காலதாமதமாக பரிசீலிக்கலாம்,  பட விமர்சனமா என்று சிலர் சிரிக்க வேண்டாம்.....
மகாநதி


1)முதலில் கிருஷ்ணசாமியின் மனைவி மண்டையைப் போடுகிறாள் (தாய் தந்தை மாமனார் முன்பு டிக்கெட் வாங்கியிருப்பார்கள்,, பரவாயில்லை)
2)   பிசினஸ் டெவலப்மெண்ட்க்காக (நியாயமான ஆசைதான்) .ஊரிலிருக்கும் வீடு நிலம் நீச்சுக்களை விற்றுவிடுகிறான்
3)   அவன் ஒரு ப்ராடிடம் (fraud)  மாட்டிக் கொள்கிறான்
4)   பிசினஸ் புட்டுக் கொள்கிறது
5)   மக்களால் அடித்து துவைக்கப் படுகிறான்
6)   சிறைக்கு சென்று விடுகிறான்
7)   வீடு பறிபோய்விடுகிறது
8)   பெண் கெடுக்கப்பட்டு விபசார விடுதியில் மாட்டிக் கொள்கிறாள்
9)   பையன் காணாமல் போகிறான்
10) மாமியார் வியாதிக்கு பணமில்லாமல் மவுத் ஆகிவிடுகிறாள்
11) சிறையில் தாக்கப் படுகிறான்
12) சிறைவாசம் நீட்டிக்கப் படுகிறது
13) மீண்டு வந்தால் ஏக பிரச்சனையில் மகள் மகனை மீட்கிறான்
14) மீண்டும் செய்யாத குற்றத்துக்காக தண்டனை
15) அதனால் கொலை செய்கிறான்
16) மீண்டும் சிறை
தொடர்ந்து ஒருவனுக்கு நிஜமாகவே இப்படி நடந்தால் அவன் எப்படி இருப்பான் என்றே நினைக்கவே பயமாக இருக்கிறது.. கமலுக்கு ஒரே படத்தில் அனைத்து அக்கிரமங்களையும் சொல்ல ஆசைப் பட்டு செய்திருக்கலாம்,

சரி…. அடுத்த படம்

அங்காடித் தெரு

அந்த தென்பாண்டி சீமையில் பிறந்த லிங்கத்துக்கு நடந்தது என்ன
1)   நன்றாகப் படிப்பான் ஆனால் வறுமை
2)   பிளஸ் டூ வில் அதிக  மதிப்பெண் வாங்கிய சமயம், அப்பா அவுட்… ஆக்சிடெண்ட்
3)   அந்த சமயம் வந்த அண்ணாச்சி கடை ஊழியர்களிடம் மாட்டிக் கொள்கிறான்
4)   அங்கே கடையில் அண்ணாச்சியால் கசக்கிப் பிழியப் படுகிறான்
5)   அவனின் காதலியின் கதை சுருக்கம் இதைவிட மோசம்
6)   சூபர்வைசரால் வதைக்கப்படுகிறான். அதே சூபர்வசைர் பலரை அப்படி வதைக்கிறான்
7)   காதலியின் தங்கை நாயைப் போல நடத்தப் படுவது
8)   காதலிப்பதால் வேலையை விட்டு விரட்டப்படுகிறான்
9)   போலிசில் வேறு பொய் கேஸ்
10) அதிலிருந்து வெளிவந்து இருவரும் தங்குவதற்கு வீடில்லாமல் ரோட்டில் படுத்து லாரியால் விபத்து
11) காதலியின் கால் அவுட்.
இந்த இரண்டு படங்கள் சொல்ல வந்த கதைகள் நிஜத்தின் பக்கமாக இருக்கிறதா… sweeping tragedy யாக சொல்லிக் கொண்டே சென்றால் அது நிஜமாகி விடும் என்று நினைத்திருக்கலாமா.....


அப்படி என்றால்......... நான் ஒரு கதை சொல்கிறேன்..
ஒரு மனிதன் நடந்து போகிறான்
1)   அவனுக்கு கால் சுளுக்கிக் கொள்கிறது
2)   தடுக்கி விழ்கிறான்
3)   அவனை நாய் பிறாண்டி விடுகிறது
4)   பக்கத்தில் ஒரு தேள் கடித்துவிடுகிறது
5)   அதே பக்கம் சென்ற பாம்பு……………………………….

இது சரியாக இருக்குமா…………………

புதன், 8 மே, 2013

சில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன்
 விரைவில் உங்களுக்காக, உங்களுடன் பகிர
வருகிறேன்
பத்ரி