வெள்ளி, 19 ஜூலை, 2013

”வாலி” பன்

தமிழ் உலகைச் சுற்றிய ”வாலி” பன்


அரை நூற்றாண்டுகளாய் தமிழர்களுக்கு தன் பாடல் வரிகள் மூலம்
தமிழை கற்றுத் தந்த பேராசான் மறைந்தார்..
ஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்

வியாழன், 18 ஜூலை, 2013

எங்கே தவறு செய்கிறோம்...

பீகார் மாநிலத்தில் நேற்று (17.7.13) ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் (அதற்கு மேலும் என்கிறது ஒரு செய்தி) பலியாகியிருக்கின்றனர். பொதுவாக சுகாதாரமற்ற உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருக்கிறோம் ஆனால் நேற்று நடந்த விஷ(ய)ம் மிக மிகக் கொடுமையானது.. என்ன மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.. இந்த பூமிப் பந்தில் எந்தப் பகுதியிலும் இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை கேட்டிருக்க முடியாது.. ஆமாம்.. அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் ஏதோ பல்லியோ பாம்போ விழுந்திருக்கவில்லை (அதுவும் நேற்றே - ஒரு சம்பவம் பீகாரிலும் இன்னொன்று ராஜஸ்தானிலும் நடந்திருக்கிறது). 

அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் organic phosphorous என்கிற விஷம் கலந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாக பயன் படுத்துவதாகும்... அதெப்படி உணவில் அந்த விஷம் கலக்கப் பட்டிருக்கும். அதுவும் சாதாரண ஏதுமறியா ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம்  இருக்க முடியும்..அவர்கள் ஏதாவது யாருக்காவது அரசியல் எதிரிகளா.. வியாபாரப் போட்டியில் கலந்து கொண்டவர்களா..  எந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும் ? அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா...? இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில்கூட காண முடியாதே...சகிக்கவே முடியாத விஷயம்தான் நம் நாட்டில் நடக்குமா..  கொடிய விலங்கைக் கூட அடக்க அது சாப்பிடும் உணவில் மயக்க மருந்ததானே கலப்பார்கள்.. அய்யோ...  மனது ஆறவேயில்லை.. உத்தரகாண்டில் நடந்த பேரழிவை விட  இது மகா கொடுமையாக உள்ளதே...

எங்கே தவறு செய்கிறோம்...

புதன், 10 ஜூலை, 2013

THE OSAMA FILES

பாகிஸ்தானியர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தரமாட்டர்கள் போலிருக்கிறது.  அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்களே தவிர பிறரிடம் விட்டுத் தர மாட்டார்கள்.  எதை வைத்துச் சொல்கிறேன் என்கிறீர்களா… நேற்று நடந்த ஒரு தொலைக் காட்சி விவாதத்தைப் பார்த்துத்தான் சொல்கிறேன். TIMES NOW தொலைக்  காட்சியில் நேற்று (9.7.2013) ஒரு நிகழ்ச்சி.. அதில்  ஜி பார்த்தசாரதி முதல் மூன்று பாக்கிஸ்தானிய கர்னல்கள் வரை கலந்து கொண்டார்கள். விஷயம் இதுதான்...
ஓசாமா பின் லேடன் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். Abbottabad பகுதியில் அவர் அந்தப்  பெரிய வீட்டில் தங்கியிருந்து  அந்த வீட்டிற்கு  எந்த ஒரு வரி கட்டாமல்   வாழ்ந்திருப்பது முழுக்க முழுக்க ISI மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின்      சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்காது என்று தெளிவாக    பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட  நிபுணர் குழு 300 பக்கஅறிக்கையில்  புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.   

அதைப் பற்றி அர்னாப் அந்த மூன்று பாகிஸ்தானியரிடம் கேட்க,  அவர்களோ அந்த அறிக்கையை  தூக்கிப் போடுங்கள்.. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அதற்கு பல சால்சாப்புகளை அடுக்கிக்  கொண்டிருந்தார்கள்.  ஒரு பாகிஸ்தானி கர்னல் ”இந்தியரே இப்படித்தான்... நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள்...you are biased...“என்று அர்னாப் மீது பாய்ந்தார்..
அர்னாப் மீண்டும் மீண்டும் சொல்லிக்  கொண்டே இருந்தார்”அய்யா இது ஏதோ எனனுடைய ரிப்போர்ட் இல்லை..உங்கள் அரசாங்கம் அமைத்த குழுவின் ரிப்போர்ட்”, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்..
ம்ம்.. அந்த பாகிஸ்தானி  காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார்.. அதில் ஒரு பாகிஸ்தானியர் மைக்கை விட்டு எறிந்து விட்டு வெளிநடப்பே செய்து விட்டார்.

இப்போது  சொல்லுங்கள்.. நான் சொல்வது சரிதானே....

சனி, 6 ஜூலை, 2013

இளவரசன் திவ்யா

”ஊருல ஒலகத்தில எங்க கத போலவும் நடக்கலயா...”

இளையராஜாவின் கிராமிய மணம் கமழும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்..
 இளம் உள்ளங்கள்...... குறிப்பாக பதின்பருவம் என்பது மிகவும் சிக்கலானது. உள்ளங்கள் இடமாறும் வயது.. அதற்கான காரணங்கள் எவை என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல இயலும்.. 20 - 30 வருடங்களுக்கு முன்பே நமது பார்வைகள் மாறித்தான் போயிருக்கின்றன.. சாதி மதம் மொழி இனம் பேதம் என்று எத்தனையோ விஷயங்களில் much water flow under the bridge என்றே சொல்ல வேண்டும். காரணம் உலகம் மேலும் மேலும் ஜனநாயகப் பட, நமது பொதுப் புத்தி என்பது கணிசமான அளவிற்கு மாறித்தான் போய் உள்ளது.

இந்த நேரத்தில்தான்.. அரசியல் ஒரு தனிப்பட்ட வாழ்க்கைவரை பாய்ந்திருக்கிறது. 

வயது அந்தஸ்து சமூகக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை அந்த ஜோடி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவது எளிதுதான்.. அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டும் உரிமை என்பது அந்தந்த குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தது..  முழுக்க முழுக்க private affair.....

என்னவென்று சொல்வது... அந்தச் சின்னப் பையனின் மரணம் உண்மையில் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை...