வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகத்தின் குரு....

2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ஊழியர் படுகொலை 
என்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்.  அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

ஏன் இப்படி...?

 ///நியதி.-  வளரும் வரை புரட்சியாளர்களாக திகழ்கிறவர்கள், வளர்ந்து விட்டால் நம்ப முடியாத எதிர்புரட்சிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்///

புதன், 20 நவம்பர், 2013

1000 (அசாரே) குழப்பம்

குழப்புகிறார் அன்னா அசாரே...
முதலில் அன்னா அசாரே பிரகடனம் செய்தது லோக் பால் மசோதா வேண்டும் என்று.  அதற்காகத்தான் பாடுபடுகிறேன் என்றார்.. பின்னர் அனைத்து கட்சிகளும் ஃபிராடுகள் என்றார்.. அர்விந்த கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்ததும அது தவறு என்றார்.

என் பெயரையும் சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு அர்விந்த் பெரும் பணம் 
திரட்டுகிறார் அதுதான் தவறு என்றார்.

காங்கிரஸ் பிஜேபி போலத்தான் அர்விந்தின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி என்றார். 

இன்றய  Times of India நாளேட்டில் (20/11/13) அர்விந்த் நல்ல மனிதர்.. ஆனால் அவர் ஆரம்பித்த கட்சி ஆம் ஆத்மியை நான் ஆதரிக்க மாட்டேன்.. வேண்டுமானாலும் கட்சியைக் கலைக்கட்டும்.. கலைத்துவிட்டு சுயேச்சையாக தேர்தலில் நிற்கட்டும்.. அப்போது அர்விந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்..
http://articles.timesofindia.indiatimes.com/2013-06-16/india/40006407_1_political-parties-anna-hazare-clean-image

ஓரே குழப்பமாக இருக்கிறது.. சுயேட்சையாக நின்றாலும் கட்சியாக நின்றாலும் அதே கெஜ்ரிவால்தானே..அரசிய்ல் கட்சியாக வந்தால் அயோக்கியர்களாகிவிடுவார்களாம்.......எனக்குப் புரியவில்லை..  யாராவது அன்னா என்னா சொல்ல வர்றார் என்பதைப் பற்றி விளக்குங்கள்..

பெர்னாட்ஷா-வாக மாறுவோம்...

சில தினங்களாகவே இணைய உலகில் பாரத் ரத்னா பற்றி சர்ச்சைகள்  தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  சச்சின் தான் இதில்(கூட) கதாநாயகர்.. ”எப்படியா போச்சு அந்த ஆளுக்கு பாரத் ரத்னா“ பலர் சண்டமாருதம் செய்கிறார்கள்..

செவ்வாய், 12 நவம்பர், 2013

கல்லில் நார் உரிக்கும் கலை

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நாசர் அந்தப் படத்தில் ஒரு முதலாளியாக நடிப்பார்... அவர் ஒரு காட்சியில் இப்படிச் பேசுவார், ” இந்த அரசியல்வாதிங்க தொழிலாளர் பக்கம் சைட் எடுக்கற மாதிரி நடிப்பாங்க... ஆனா அவங்க நம்ம பக்கம்தான்.. பின்ன அன்னிய செலவாணி கொட்றது யாரு... நாமதான... தொழிலாளர்களா கொட்றாங்க...”

திங்கள், 11 நவம்பர், 2013

Dynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்

ஜெ மோ, ந, மோ. நாடாளுமன்ற தேர்தல், கூடங்குளம், CHOGM இலங்கை, செஸ் போட்டி, ஸ்மால் பஸ் சர்ச்சை என இணையத்தில் ஏராளமான விவாதங்கள் மற்றும் counter விவாதங்கள்  கொட்டி கிடக்கின்றன.. அவற்றை எல்லாம் படித்து படித்து மன நோயே வந்து விடும் போல இருக்கிறது.. சற்று ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா...? சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா..? ஆகையால் யான் பெற்ற இன்பத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதற்குத்தான் இந்த பில்ட்ப்..

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெமோவின் எழுத்துரு

இந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார்  அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன..  எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...

புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்

''மங்களகரமான மங்கள வாரத்தில் மங்கள்யான்
மங்கலான வான்வெளியில் மந்தகாசத்துடன்...."

சரி.. சரி.. கவிதையை நிறுத்திக் கொள்கிறேன்.. மங்கள்யான் போகட்டும்... மங்கள்யான் கடந்த கடிமான பாதை வான்வெளியில் மட்டுமல்ல.. பூவுலகிலும்தான் அதாகப்பட்டது.. முதலில் மங்கள்யான் மீதான விமர்சனங்கள்....
(1) தீபஓளித் திருநாளில் இந்த  costly வாண வேடிக்கை தேவையா...? 
(2) உலகில் பட்டினியால் வாடும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கிற போது இது      எதற்காக?
(3) முன்னாள் ISRO பெரும்புள்ளி மாதவன் நாயரே இந்த திட்டத்தை குறைகூறிவிட்டாரே
(4) நமது பக்கத்து வீட்டு பெரும்புள்ளி நண்பர் சீனா வேறு ‘இதெல்லாம் ஏழை இந்தியாவுக்குத்      தேவையா‘ என்று கருத்துரைக்கிறது...

என்று ஏக களேபரம்.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மங்கள்யான் விண்ணில்  பாய்ந்து விட்டது.. so far so good என்று சென்று கொண்டிருக்கிறது.. நாமும் வாழ்த்துவோம்..

நேற்று (5.11.13) timesnow விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..  கிட்டத்தட்ட 450 கோடி செலவு செய்து செவ்வாய்கிரகத்திற்கு அப்படி அனுப்ப இப்போது என்ன தேவை வந்துவிட்டது என்கிற திசைவழியில் சிலர் பேட்டியளித்தனர்.. ஐன்ஸ்டீன் இப்படி நினைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சியே வந்திருக்காது எனவும்.. சரியாக பேசுங்கள் ஐன்ஸ்டீன் தன் சொந்த பணத்தைத்தான் செலவழித்தார் எனவும் வாதப்பிரதிவாதங்கள்....இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... 

நமது நாட்டில்  தேவையற்ற விசயத்திற்கு செலவு செய்தேயில்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியைத் தொட்டு சொல்லிப்பார்ப்போம் ... எத்தனை ஆடம்பர விழாக்கள் எத்தனை ஊழல்கள் எத்தனை விரயங்கள் நடத்தியிருக்கிறோம்... ஒரு விஞ்ஞான வளர்ச்சிக்காக நாட்டில் வரிப்பணத்தை செலவு செய்தால் அதை எத்தனை பேர் குறை சொன்னாலும் நான் சொல்வது  ஒரேயொரு வார்த்தைதான் ‘சாரி...‘ 

நாளை சந்ததிகள் நன்றாக இருக்க நாம் நமது குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.. வெறும் சம்பாதிக்கும் மிஷினை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. ஒருவன் ஆளுமை வளர்ச்சிக்கும்  அந்தப் படிப்பு தேவை என்பதை பலர் கூறுவார்கள்.. அதைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த மங்கள்யான்...  குறை சொல்லுங்கள்.. அதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.. தயவு செய்து கம்பீரமாக வான் வெளியில் விரையும்,  எதிர்கால சந்ததியினரின் ஆளுமையை வளர்க்க உதவும்  அந்த மங்களயானைத் தவிர என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்..
=====================
சரி ஒரு டெயில் பீஸ் வேண்டாமா...?
அர்னாப் சொன்னார்.. ஒரு சமயம் 50 -60களில் ஆர் கே லக்ஷ்மண் ஒரு கார்ட்டுன் போட்டிருந்தாராம்.. அதில் அவருடைய வழமையான மிஸ்டர் பொதுஜனம் ஒட்டுத் தையல் போட்ட கோட்டை அணிந்து கொண்டு பாவமாக நிற்பாராம்.. பக்கதில் இருக்கும் இன்னொருவர், ஒரு   அமெரிக்கரைப் பார்த்துச்  சொல்வாராம்.. ’நீங்கள் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்பனும்னு சொன்னிங்களே.. அந்த மனிதன் எதையும் தாங்கும் ஒருவராக இருக்கணும்னு சொன்னிங்ளே.. அதாவது அவருக்கு நல்ல தண்ணி கிடைக்கக்கூடாது நல்ல சாப்பாடு கிடைக்கக்கூடாது, நல்ல சுகாதாரம் கிடைக்ககூடாதுன்னு.. அப்படி பட்ட ஒருவர்தான் இவர்’ என்று அந்த மிஸ்டர் இந்திய பொது ஜனத்தைக் காட்டுவாராம்...