வெள்ளி, 26 டிசம்பர், 2014

லிங்கா....


Image result for lingaa

லிங்கா படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக படிக்க நேர்ந்தது...

அதனால் பார்க்கவே தயங்கினேன்...  ஆனால் நேற்று பார்த்தேன்...

குறைகள் என்று பெரிதாகச் சொல்ல ஒன்றும்  இல்லை...  வழக்கமான மசாலத்தனங்கள் இருந்தாலும் குறுகிய காலத்தில் நேர்த்தியாகவும் எடுக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்லுவேன்..

உண்மையில் ஒரு நல்ல படம்தான்....

பாலச்சந்தரும் கமலும்

பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
Image result for balachander

K. Balachander directed and Kamal Haasan appears in Moondru Mudichu, Ek Duuje Ke Liye, and other movies.

அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்

"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..

சற்று நேரம் குறுகுறுத்தது..   கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்

வியாழன், 18 டிசம்பர், 2014

கற்பனையில் நடக்குமா....?

கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் பேஷாவர் நகரின்  ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141
  பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கிற செய்தியை நம்பவே முடியவில்லையே..

வியாழன், 4 டிசம்பர், 2014

மாபெரும் ஜனநாயகவாதி கிருஷ்ணய்யர்

மாபெரும் ஜனநாயகவாதி, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி,  மிகப் பெரிய மனிதாபிமானி திரு கிருஷ்ணய்யர் இன்று மறைந்தார்..


V.R.Krishna Iyer.jpg

 கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மந்திரிப் பதவி வகித்தவர் - எத்தனை பெரிய அரசியல் பண பலம் பொருந்தியவர்களையும்  நீதியின் முன் சமம் என்றவர்   - மரண தண்டனைக்கு எதிரான பலமான குரல் எழுபபியவர்...

அன்னார் மறைந்தாலும் அவர் எழுப்பிய ஜனநாயகக் குரல் தொடர்ந்து மக்களால் எடுத்துச் செல்லப்படும்... அவர் கனவை மக்கள் வருங்காலத்தில்  நிறைவேற்றுவார்கள்..

அன்னாருக்கு அஞ்சலி