ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வியாழன், 23 ஏப்ரல், 2015

ராகுல் காந்தியும் net neutralityயும்


Image result for ராகுல் காந்தி

ராகுலை பிறகு பார்ப்போம்... முதலில் net neutrality
சமீப காலமாக net neutrality என்கிற பதத்தை கேள்விபட்டிருக்கலாம்... net neutrality என்றால் என்ன என்பதைப் பற்றி தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடலாம்... அதாவது ஒரே வரியில் இணைய சமத்துவம். 

தற்போது நாம் பார்க்கும் பல இணைய தளத்தில் அதன் வேகம் நாம் கொடுக்கும் காசுக்கு ஏற்வாறு மாற்றுவது என்பது முதல் திட்டம் பிறகு  செல்பேசிகளில் பிரபலமாக விளங்கும் APP கள் மூலமாக அந்த APPகாரர்கள் டேட்டாவுக்கு தக்கவாறு இணைய நிறுவனங்கள் காசு வாங்கும்... அந்த APPகாரர்கள் அந்தக் கட்டணத்தை உபயோகிப்பவர் தலையில்தான் கட்டுவார்கள்... இப்படியே ஃபேஸ்புக்  whatsapp என்று இந்த இணைய சேவைக்காரர்கள் நாளை விஸ்தரிப்பு செய்து  ஆக்கிரமிப்பு செய்வார்கள்..

சுருங்கச் சொன்னால் எங்கும் காசு எதிலும் காசு என்பதுதான்... net neutrality பற்றி மேலதிகமாக நாம் இணையத்திலேயே தெரிந்து கொள்ளலாம்... 

சரி.. இப்படி வணிகமயப்படுத்துதல் காரணமாக இணையத்தை மேலும் மேலும் அதிகமாக பாவிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இளைஞ்ர்கள் பாதிப்படைவார்கள்....

இந்த அயோக்கியத்தனத்தை எதிரத்து ஒரு குரல் அதுதான் யாரை இளவரசர் ராஜாதிராஜா என்றெல்லாம் கிண்டலாக பிஜேபிக்காரர்கள் கூறி வந்தார்களோ அந்த ராகுல் காந்தி குரல் எழுப்பியிருக்கிறார்..

அது மட்டுமா... விவசாயிகள் தற்கொலை net neutrality என்று இரண்டு நாட்கள் முன்பு பாராளுமன்றத்தில விளாசித் தள்ளியுள்ளார்....

பல இளைஞர்கள் எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்திருந்தாலும், .ராகுல் அதைப் பற்றி பேசும் போது இந்தியாவெங்கும் ஒரு முக்கியத்வம் பெறுகிறது... நமது தொலைத் தொடர்பு மந்திரியையும்  "இந்த அரசும் net neutrality பாதுகாக்கும் அரசுதான்..அதற்கு நாங்கள் என்றும் ஆதரவாகயிருப்போம்..." என பேசவே வைத்துவிட்டது...

எத்தனை குறைகள் இருக்கட்டும்.. இதற்காகவே....

ராகுலை மனதார பாராட்டுவோம்....

புதன், 22 ஏப்ரல், 2015

’சில நேரங்களில்.....’

’யானை இறந்தாலும் ....’ என்கிற கதையாக தொடர்கிறது  ஜெயகாந்தன் மறைவு.....சர்ச்சையும் அவரும் எப்போதும் ஒட்டிப் பிறந்தவர் போலும்...  ஜெயமோகன் தளத்தில் நிறைவான  அஞ்சலியை படிக்க நேர்ந்தது சற்று நெகிழ்வாக இருந்தது..  அதற்குள் வைரமுத்து சர்ச்சை.... ’கள்ளிக் காட்டு இதிகாசம்’ ’எல்லா நதியிலும் எனது ஓடம்’  ஆகியவற்றை எழுதியவரா அப்படி செய்வார் என்பதை நம்ப முடியவில்லை... ஜெயமோகன்  சொன்னாலும்.... வேறு ஏதோ நடந்திருக்கலாம்... வைரமுத்துவை இதில் இழுப்பது சரியாகப் படவில்லை....
========

கேரளா அரசு, தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாரைப் பார்வையிட அனுமதி மறுக்கும் மனுவை உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கிறது...மேக்கேதாண்டுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகம் மறுபக்கம்...தமிழக மீனவர்கள் பிரச்சனை எப்போதும் இன்னொரு பக்கம்
போதாத குறைக்கு செம்மரக் கடத்தல் என்கிற பெயரில் அப்பாவி தமிழர்களை சுட்டுத் தள்ளியிருக்கும் ஆந்திர காவல்துறை (இது ஒரு படுகொலை என்று தமிழக போலீசே சொல்லியிருக்கிறதாக இந்துவில் செய்தி வந்திருக்கிறது)

என்ன நடக்கிறது... இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது .. உடனடி தலையீடு வேண்டும் நிலைமைகள் கட்டுக் கடங்காமல் போகும் முன்... மத்திய அரசே...’இளைதாக  முள் மரம் கொல்க...’ என்றே கேட்கத் தோன்றுகிறது

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

அந்த நாலு பேருக்கு நன்றி....

Image result for jeyakanthan pictures


உள்ளத்தில்   இருப்பதெல்லாம் சொல்ல ஒர் வார்த்தை இல்லை
நான்  ஊமையாய்   பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கு ஒரு பந்தம் இல்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ராமானுஜ கலைஞர்

நேற்று புதிய தலைமுறையில் கலைஞர் வசனம் எழுதப் போகும் ராமானுஜர் நாடகம் பற்றிய சர்ச்சை  நேர்பட பேசு நிகழ்ச்சியில் காண நேரிட்டது...

கலந்து கொண்ட அனைவரும் மிகச் சரியாக sober ஆகப் பேசியதாகத்தான் தோன்றியது... பிராமண சங்க நிர்வாகி பேசியதுகூட அவர் கோணத்தில் நியாயமாகத்தான் தோன்றியது...

பேசியதில் பத்ரி சேஷாத்ரி பேசியது ரசிக்கும்படி இருந்தது... சிறப்பான நிகழ்ச்சி..

கமல் தசாவதாரத்தில் காட்டியது போல பெரும் எதிர்ப்பின் எதிர் நீச்சல் அடித்தவர் ராமானுஜர்...  சாதி பாகுபாட்டை அன்றே எதிர் கொண்டு  அனைவருக்கும் பிரம்ம ரகஸ்யம் தெரியட்டும் என்றவர்... வைணவமும் தமிழும் மிக நெருக்கமானது... (சுஜாதா இதைப் பற்றி  பல விஷயங்கள் எழுதியுள்ளார்)

இருப்பினும்  தோழர் அருணன் கூறியது போல ” இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு தற்போது எழுத வேண்டியதில் சில காரணங்கள் இருக்கிறது...” என்றார்..

மிகச் சரி...அதுதான் யோசிக்க வேண்டிய விஷயமே தவிர மற்றபடி அவர் எதைப் பற்றி எழுதுவதற்கு  தகுதி உடையவர்தான்... நாடகம் வந்த பிறகுதான் அதைப் பற்றி விமர்சனம்  செய்ய முடியும்.......