திங்கள், 29 ஜூன், 2015

வந்துவிட்டான் எமது ஆபத்பாந்தவன்.....

மெட்ரோ ரயில்கள் ஒரு வழியாக (?), பல்வேறு அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி, ஓடத் தொடங்கிவிட்டன... சந்தோஷம்....

சனி, 27 ஜூன், 2015

மனிதாபிமானத்தின் விலை 30 கோடி....

முதல்வர் வசுந்துரா ராஜே அவர்கள் ல்லித் மோடி குடியேற்றப் பத்திரத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தில் முதலில் தான் கையெழுத்திடவில்லை என்றார்.. பிறகு ஆமாம் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டேன்... ஒரு மனிதாபிமான முறையில் என்றார்... தற்போது ராஜேயின் மகன் துஷ்யந்திற்கு கிட்டத்தட்ட 31 கோடி  அளவிற்காக ஷேர்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.. கேட்டால் அது ஒரு கிப்ஃட் போலவாம்......


மனிதாபிமானத்தின் விலை 30 கோடி போலும்....(டெல்லி வந்த வசுந்துரா அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டாராம்...)

====================
எமர்ஜென்சி

 ஜூன் மாதம் என்றால் எம்ர்ஜென்சியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.... இந்திராகாந்தி அவர்களால் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்lடது.25 ஜூன் 1975…  நள்ளிரவில் அன்றைய ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமத் இதற்கான ஒப்புதலை அளித்தார். விடிவதற்குள் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மொராஜி தேசாய் ஜெயபிரகாஷ்நாராயணன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்திற்கும் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டது.   அவசரநிலை காலத்தில் கடுமையான அடக்குமுறைகளும்
சொல்லி மளாதவை,,, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன......சஞ்ஜய் காந்தியின் அதிகார ஆட்டம் மிகப் பிரசித்தம்... மத்திய அரசாங்க அலுவலகங்களில் கெடுபிடி பற்றி இன்னமும் பலர் கூற கேட்டிருக்கிறேன்...

கலைஞர்  துணிந்து (அன்றய கலைஞர்நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட ஆட்சியதிகாரத்தை இழந்தார்...  26.6.15 அன்று டிவியில் ஸ்டாலின் எமர்ஜென்சி கொடுமைகளைப் பற்றிப் பேசினார்... சிட்டிபாபுவுக்கு ஏற்பட்ட கொடுமை அனைத்தையும் சொன்னார்... மனம் பதைபதைத்தது.. 

அன்றய திமுகவை உருவாக்கியது அதை வளர்த்த்த பல தலைவர்களில் கலைஞர் ஒருவர்... ஆனால் திமுகவிற்காக கொட்ட்டியில் அடிபட்டவர் ஸ்டாலின் என்று தோன்றியது....

செவ்வாய், 16 ஜூன், 2015

பழையன கழிதல்...

ரயில்வே  துறையை தனியார் மயமாக்கப்போவதாக  செய்திகள் வருகின்றன.... பலம் வாய்ந்த   ரயில்வே தொழிற் சங்கங்கள் இப்போதே  போர்கொடி  தூக்க  தொடங்கியுள்ளன   ... அரசு சற்று அடக்கித்தான் வாசிக்கும் என்று தெரியும்... பொதுவாக இந்த விசயத்தில் பல்வெரு கருத்து மாறுபாடுகள் எனக்கு உண்டு.. எங்கள் துறையை சார்ந்த மறைந்த தலைவர் ஓ பி குப்தா  பேசும்போது  சொல்வார் "நீங்கள் உடல் சரியில்லை என்றால்  தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்களா... அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்வீர்களா...." பலர் அவர் கூறுவதை  கேட்டு கோபப்படுவார்கள்..  மனசாட்சியுடன் பதில் சொன்னால் நாம் தனியாருக்குத்தான் போவோம்... உயிர்ப் பிரச்கனை ஆயிற்றே..

காய்தல்  உவத்தல் இல்லாமல்  பார்த்தால் ... இரன்டும் இன்றய சுழலில் தேவை என்றே தோன்றும்.....  BSNL   இல்லையா... ???    நாம்  கூடாது என்று சொல்லும் போதே நம்மிடம் weakness உள்ளது என்பது தெரியும்...கால தேச வர்தமான  மாற்றங்களுக்கு ஏதுவாக  மாற வேண்டிய கட்டாயம் உள்ளது..


முற்போக்கு என்ற  பார்வையில் சில கோட்பாடுகளை கொண்டு பழைய முறை சமாச்சாரங்களை பார்த்து விட்டோம்...  எனக்கு அதில் நம்பிக்கை இல்லை... உண்மையில்  அவை வெற்றி பெறவில்லை என்பதே எனது துணிபு