புதன், 25 நவம்பர், 2015

அன்று கமலஹாசன் சொன்னது சரிதானே...?

விஸ்வரூபம் பிரச்சனையை ஒட்டி கமலஹாசன் மனம் நொந்து “நான் ஏதாவது வெளிநாட்டில் குடியேறப் போகிறேன்..“ என்று சொன்னார்.. அதையொட்டி எத்தனை கேலிகள் கிண்டல்கள் சமூக வலைதளங்களில் வலதுகள் மட்டுமன்றி SO CALLED புர்ச்சி  இடதுகள் முர்ற்போக்காளர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்வர்கள் வெளியிட்டுத் தீர்த்தார்கள்...


ஞாயிறு, 15 நவம்பர், 2015

யாரை குறைகூறுவது...?

Image result for chennai rain imagesImage result for chennai rain imagesImage result for chennai rain images
ஊரிலுள்ள ஏரிகளையும் குட்டைகளையும் பிளாட் போட்டார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்... ஆற்றையே ஆக்கிரமித்து வீடு கட்டினார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.. ஆற்று மணலை கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. தடுத்தவரை கொலை செய்தார்கள்..... அதையும் பார்த்துக் கொண்டிருந்தோம்... மழை நீர் எங்கே போவேன் என்று ஊருக்குள் வந்து மிரட்டுகிறது...

பிளாஸ்டிக் பைகளை பாவித்தோம்.. அதை பூமியில் அப்படியே போட்டோம்...புவியை மாசு படுத்தினோம்.. வெப்பமடைய வைத்தோம்... கடலிலிருந்து  வானம் செல்லும் நீர்த் துளிகளை அதிகமாக்கினோம்... அதனால் வெப்ப மண்டலத்தில் மாற்றம் வரக் காரணமானோம்... பொய்த்தும் கெடுத்தது தற்போது பெய்தும் கெடுக்கிறது என்று இயற்கையை குறை சொல்கிறோம் ... வெள்ளத்தைக் குறைகூறுகிறோம்... 

எந்த ஆள் பவர்களை குறை சொல்வது...
 நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டால்....

புதன், 11 நவம்பர், 2015

தூங்காவனம்....

Image result for thoongavanam images


ஒரு வரிக் கதைக்கு ஒரு வரி விமர்சனம்....


 just super.....

தமிழில் ஒரு நல்ல திரைப்படம்... தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்...

வரவேற்பார்களா என்பது படத்தின் வெற்றியில்தான் தெரியும்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

மீண்டும் ஒரு உதாரணம் …

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மார்கண்டேய கட்ஜூ  கோவன் கைதை கடுமையாக சாடி   தமிழக முதல்வர் ஜெ க்கு எச்சரிக்கை விட்டுள்ளார்.   அரசியல் சாசனத்திற்கு  முரணான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.. 

மேலும் ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசர்கள்... மன்னாராட்சி காலம் போல நடந்து கொள்ள முடியாது என்றிருக்கிறார். மேலும் கோவன் கைதில் ஈடுபட்ட காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.. 

நல்ல வேளை அதிமுகவின் அதிருஷ்டம் கட்ஜூ  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசராக இல்லை..  அவன் சொன்னதை போல நடந்து கொண்டிருந்தால் என்னவாகும்.. பெரும் சட்டச் சிக்கலில் இந்த விஷயம் சென்றிருக்கும்...

யாரை மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று மகஇக போன்றவர்கள் கிண்டலடிக்கிறார்களோ அதே இந்து நாளேடு கைதை கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது..

இது ஒரு புறம் ...ஒரு பாடல் பாடினார் என்பதால் தேசத் துரோக வழக்கு தொடுக்கப் பட்டதா என்பதை நம்ப முடியவில்லை... ரசனைக் குறைவாக பாடினார் அவதூறாக முதல்வரை பற்றிப் பாடினார் என்பதும் நம்ப முடியவில்லை...  காரணம் அதிமுக திமுக கேப்டன் ராமதாஸ் வைகோ என்று (கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து) ஒருவரையொருவர் மேடையில் பேசாத பேச்சுக்களா.. இதற்காகவே தனியாக சில நபர்களை அமர்த்திக் கொண்டு அவரவர் மேடைகளில் நாகூசும் வகையில் வசைபாடுவதை நாடே அறியும்…

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  IAS அதிகாரி ஒருவரும் மகஇகவின் பொதுச் செயலர் மருதையன் அவர்களும் தெளிவாக கூறிவிட்டார்கள்… கைதின் எதிரொலி இவர்கள் ஒரு ANTI-ESTABLISHMENT என்பதற்காகத்தான்…
ஆக அது மட்டுமே உண்மை…

ஆனால் இந்த விஷயங்களை தொகுத்துப் பார்க்கும் போது நாம் புரிந்து கொள்வது இவைதான்… 

கைது என்பதும் தேசத் துரோக வழக்கு என்பதும் தேவையற்றது.. 

மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவும் பாஜக வும் அவர்கள் மீதான  விமர்சனத்தை சற்றும் சகிக்காத தன்மை உடைய கட்சிகளாக இருக்கிறது. 

என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் மகஇக கூறும் புதிய ஜனநாயகத்தைக் காட்டிலும் கட்ஜூ   இந்து நாளேட்டு ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட பன்முக இந்திய ஜனநாயகமே சிறப்பாக இருக்கிறது.. 

மேலும் ஒரு உதாரணம் தற்போது கோவனை  போலீஸ் காவலில் விசாரிப்பதை தடை செய்து உத்தரவிட்ட நீதியரசர் சி,டி செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவை ஒரு எடுத்துக் காட்டாக நாம் காணலாம்..