சனி, 5 டிசம்பர், 2015

whatsAppம் facebookக்கும்.....

பெரிதாக எள்ளி நகையாடப்பட்ட  இரண்டு சமூக பிணையங்கள் அதாவது social network  நமது காலத்தில் whatsapp facebook ஆகியவை... 

“எப்ப பாரு whatsappல எதாவது நோண்டிக்கிட்டே இருக்கா ...”என்கிற புலம்பல்கள் அவ்வவ்போது கேட்க நேரும்... பல பெரியவர்கள் தங்களால் இயலவில்லை என்ற நோக்கில்கூட அலுத்துக் கொள்ளவதை பார்க்க நேர்ந்திருக்கிறது...

ஆனால் சென்னை பெருவெள்ளத்தில் பலரை ஒரே மேடையின் கீழ் கூட வைத்து அனைவரையும் பின்னிப் பிணைந்து தனி ராஜாங்கமே நடத்திக் காட்டியிருக்கிறது  அதன் மூலம் பலரை  காத்திருக்கிறது whatsapp மற்றும் facebook...

எத்தனை  தேவைகள் பரிமாறப் பட்டிருக்கின்றன.. எத்தனை உதவிகள் கேட்கப் பட்டிருக்கின்றன.. எத்தனை பேரிடர் செய்திகள் அதை களையும் செய்திகள் உடனுடக்குடன் அனைவரும் காணும் வண்ணம் பகிரப் பட்டிருக்கின்றன...

அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய ஒரு விஞ்ஞான வளர்ச்சி...
விஞ்ஞானத்தின் இந்த  வளர்ச்சியை நாம் போற்றுவோம்..

வாழ்க whatsapp...

வாழ்க facebook....

3 கருத்துகள் :

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

உண்மைதான் நண்பரே! எத்தனை பேர் இதை இழிவாகப் பயன்படுத்தினாலும், கடந்த 2,3 நாள்களில் இவற்றின் சக்தியை பாதிக்கப்பட்டோர் நலன்காக்கப் பாடுபட்ட நண்பர்கள் அறிந்து செயல்பட்டது மறக்க முடியாது. அறிவியல் இருவகையிலும் கூரான கத்திபோலத்தான். யார்கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன்! நன்று சொன்னீர்கள். நன்றி

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு MUTHUNILAVAN...
WELL SAID