சனி, 6 ஆகஸ்ட், 2016

நம்மிடம்தான் பிரச்சனை....

தமிழ்மணத்தின் பல ஆண்டு கால வாசகன் நான்..  ஆனால் வலை தளம் தொடங்கியது மே 2013தான்… 

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தையலை உயர்வு செய்கிறாயோ இல்லையோ... காப்பாற்று....

தஞ்சை அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை...
விழுப்புரம் அருகே இளம் பெண் மண்ணென்ணை ஊற்றிக் கொலை...
வட இந்தியாவில் டெல்லி கான்பூர் பிரதான சாலையில் காவல் நிலையம் அருகே தாயும் மகளும் கற்பழிப்பு....

உண்மையில் உலகெங்கும் அதிகம் கற்பழிப்பு நடக்கும் நாடு நமது நாடுதானா... ( இதில் முதல் இரண்டு ரேங்கா... கேவலம்..)...

என்ன ஆயிற்று நம் நாட்டு ஆண்களுக்கு... உண்மையில் ஏதோ போதாமை குறைபாடு இருக்கும்... உடனடியாக ஒரு கவுன்சலிங் அனைத்து தரப்பு ஆண்களுக்குத் தர வேண்டும் என்றே தோன்றுகிறது...

ஊடகம் பெருகியதால் இத்தனை செய்திகள் என்பதில் ஒரளவு உண்மைதான்... முன்பு நடந்ததை வெளிக் கொண்டு வராத காரணத்தால் இதைப் பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை....

ஆனால் உண்மையில் உடனடியாக ஒரு நல்ல கல்வி ஆண்களுக்கு அவசியம்... பெண்கள் என்றால் சக மனிதர்கள்தான் என்று....

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கபாலிடா.....(ன்)

தற்போதுதான் கபாலி பார்க்க முடிந்தது... மிகப் பெரிய வணிகப் புயல் வணிக சுனாமியால் உடனடியாகப் பார்க்க இயவில்லை....
Image result for kabali


ரஜினி, ரஞ்ஜித், தலித் அடையாளம், பெரும் பட்ஜெட் என்று மாறி மாறி ரஜினியின் எந்தப் படத்திற்குமில்லாத ஒரு ஹைப்  இந்தப் படத்திற்கு        உருவாகிவிட்டது... ஒரு சாதாரண ஆனால்உ ண்மையான ரஜினி ரசிகனால் படத்தை பார்க்க முடியாமல் ITகாரர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்கிற குற்றச் சாட்டை வினவு உட்பட பல ஊடகங்கள்  ஆதாரத்துடன்    வெளியிட்டன... 

எல்லாம் ஒரு புறம் இருக்க...

ஒரு படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று பார்த்தால், இந்தப் படம் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர முடியவில்லை... ஒரு புறம் ரஞ்ஜித் என்கிற புதுமை இயக்குனர்....... மெட்ராஸ் என்கிற கலைப்படைப்பை தந்தவர். 

மறுபெரும் ரஜினி என்கிற பெரிய பிம்பம்...  இன்ன பிற பிரபல நடிகரைவிட          உண்மையில் ரஜினி முறைப்படி நடிப்புக் கலையை பயின்றவர்... அவரின் உண்மையான திறமையை இது வரை  எந்தப் படமும்  வெளிக் கொண்டு வரவில்லை என்பதுதான் என் எண்ணம் ... காரணம் அவர் விரும்பியோ விரும்பாமல் அவரைத் தொடர்ந்த அந்த மாஸ் ஒளிவட்டம் ...   

அதையும் மீறி   ரஞ்ஜித்  கலைப் படமாக்க முயற்சித்திருக்கிறார்... ஆனால் வெற்றி பெற வில்லை என்பதுதான் உண்மை...  ஆக கலைப் படத்திற்கும் மசாலாவிற்கும் இடையே படம் அல்லாடுகிறது...

இன்னமும் முயற்சி தேவை ......