வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சரியான பதிலடிதான்..

காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த  நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான்  ஆதரவுத் தீவிரவாதிகள்     தாக்குதல் நடத்தியது படு கேவலமானது.

இந்தத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை..   அநியாயமாக  நமது 18 ராணுவ வீரர்களை பலி கொடுக்க  நேர்ந்துவிட்டது,,

அதற்கு பதிலடியாக நேற்று நமது ராணுவ வீரர்கள் POKயில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்திருக்கிறார்கள்.. அதில் பாக் ராணுவ வீரர்களும் உண்டு..

ஏற்கனவே சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் சார்க் மாநாடே காலியானது.. இத்தனை பட்டும் பாக் திருந்தாமல் காஷ்மீரத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது..

நேற்று நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதல் போன்ற மொழிகள்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதை தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே தோன்றுகிறது..
                                   

திங்கள், 19 செப்டம்பர், 2016

என்னத்தை சொல்ல...?

எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் நீரூபிக்க வேண்டும்… நீதிமன்றம் அப்படி இல்லாவிட்டால் முற்றிலுமாக நிராகரித்துவிடும்… அப்படி செய்ய முடியாத சூழலில் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமா…,?

நம்முடைய புலனாய்வு ஒரு காலத்தில் பிரமாதமாகப் பேசப்பட்டது…  தற்போது இந்தத் துறை மட்டுமல்ல எல்லா  துறையும் பின்னடைவாகத்தான் இருக்கிறது… காரணம்…

அதிகார துஷ்பிரயோகம்..
லஞ்ச லாவண்யம்..
மெத்தனம்… அசிரத்தை..
அரசியல் தலையீடு..
சாதிப்பாகுபாடு..

இத்தனையும் மீறித்தான் நாம் வாழவேண்டியிருக்கிறது…  சில சமயங்களில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறது…


நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தெரிகிறதா… காவிரி பிரச்சனையைத்தான் சொல்கிறேன்… நீங்கள் வேறு எதையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளாதீர்கள்…

வியாழன், 8 செப்டம்பர், 2016

இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது...?

இன்று டெல்லியில் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதித்தார்கள்..

அனைவரும் - கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து - ஒருமித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் எந்த முடிவையும் ஆதரிக்க முடியாது என்று கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள்..

உண்மையில் ஆதரிக்கப்பட வேண்டிய செய்திதான் ..

ஆனால் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு மாண்டியாவில் கூடிய கன்னட வெறி அமைப்பினர் காவிரி தாவாவின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக லாரிகளை அடித்து நொறுக்குவதும்  சாலைகளை துண்டிப்பதும்  தொடர் பந்த் செய்வதும் முதலில் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பதை அதே தேசிய கட்சிகள் கூற வேண்டும்,,,,

செய்வார்களா...?