திங்கள், 24 அக்டோபர், 2016

உலக அதிபர் (?) போட்டி...

என்றுமில்லாத வகையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டி விசித்திரமாகச் சென்று கொண்டிருக்கிறது..  ஹிலாரி ட்ரம்ப் போட்டி என்பது   ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே போட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது..

ஆரம்பத்திலிருந்து ட்ரம்ப் பற்றி வந்த செய்திகள் வினோதமானவை.. முதலில் இந்தியர்களை கேலி செய்து பேசினார்.. முஸ்லிம் மக்களை இருக்க விடமாட்டேன் என்றார்.. தற்போது ஒரு பெண் அதிபரானால் ராணுவம் எப்படி சல்யூட் அடிக்கும் என்கிற படு மோசமான பிற்போக்கு வாதத்தை உதிக்கிறார்...  பொதுவாக அமெரிக்கா ஜனநாயகம் பரந்துபட்ட மக்களுக்கானாது என்றாலும் அவற்றில் தீவிர வலதுசாரி அம்சம் சற்று உறுத்தும்.. அதிலும் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் அதிகம் என்கிறார்கள்.. மேலும் ட்ரம்பின் வயது 70.. அவர் நிச்சயம் 15 வயதில் மதவாதக் கருத்துக்களுக்கு ஆளானாவர் என்பது அவரின் தற்போதையே பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...  லிங்கன் வழிவந்தவரா இவர் என்கிற எண்ணத் தோன்றுகிறது...
Image result for hillary and trump photos

அமெரிக்கா தன்னுடைய   அதிபரை    ஏறத்தாழ உலக அதிபர் என்கிற நிலையில்தான் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.  உலகெங்கும் கம்யூனிச அரசுகள் மண்ணைக் கவ்வியவுடன் அமெரிக்கா மேலும் அனைவர் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்நிலையில் ட்ரம்ப் போன்ற குடியரசு கட்சியின் வேட்பாளர்களின் பேச்சுக்களின் தொனி சற்று விசித்திரமாகவும் ஆபத்தாகவும்தான் உள்ளது.. ஹிலாரி ஈமெயில்களை அழித்தார் போன்ற புகார்கள் இருந்தாலும்     ட்ரம்பின் எதிர்மறை அம்சத்தாலேயே ஹிலாரி   வெற்றி பெற்றுவிடுவார் போல் உள்ளது.. .

இந்தியாவை பலர் படு பிற்போக்கு நாடு என்றும் மத நம்பிக்கை       பெண்ணடிமைத்தனம் நிறைந்த நாடு என்றுதான் பலர் கூறுகிறார்கள்.. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில்தான் ஒரு பெண் விதவை  - நேரு சாஸ்த்ரிக்குப் பிறகு - சர்வ வல்லமை பொருந்தியவராக பெரிய தலைவராக இருந்திருக்கிறார்.. அதை சராசரி இந்திய மனம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

தண்ணிரில் தள்ளாடும் உண்மை...

பல் இளித்துவிட்டது  நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்... 

 காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது..  இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது... 

இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு  போட்டுவிட்டார்கள்...  அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..

மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...