வியாழன், 30 மார்ச், 2017

பின் தொடரும் நிகழ்வின் குரல்கள் ...

எனது இளம் பருவக் கோளாறின் வயதில் பொது உடமை பூதம் என்னை ஆட்டிப்படைத்து .. அப்போது பெரியார் திடலில் ஆந்திர புரட்சிகர பாடகர் கத்தர் நிகழ்ச்சி நடைபெற்றது ..  தெலுங்கில் அவர் பல பாடல் பாடினார் .... அனைவரும் கைதட்டினர் .. CPI CPM  உள்ளிட்ட பல முற்போக்கு தோழர்கள் வந்திருந்தார்கள்.. தற்போது வந்த செய்தி இது 
    http://www.hindustantimes.com/india-news/maoist-idealogue-singer-gaddar-turns-to-spirituality-politics/story-izo2KYCq1ebyr8btHPCIqI.html


அவர் வேதம் படிக்கச்சொல்கிறார் ஆங்கிலம் படிக்கச்சொல்கிறார் ...மழை வேண்டி கோவில் கோவிலாக செல்கிறார் முற்றிலும் ஆன்மீகவாதியாக மாறியே விட்டார்...  எனக்கு ஜெயமோகன் தான் நினைவுக்கு வருகிறார் அவரின் பின் தொடரும் நிழலின் குரலில் நாயகன் அருணாச்சலம் நினைவுக்கு வருகிறார். ஜெயமோகனை பலர் விமர்சனம் செய்வதை விட வசை பாடுவதே அதிகம் அவர் சில சமயம் உண்மையை போட்டு உடைப்பதால் கூட இருக்கலாம் 

ம்ம்ம் ...
என்னத்தை சொல்ல ...

ஞாயிறு, 26 மார்ச், 2017

மாநகரம்....

Maanagaram Movie

மாநகரம் மற்றொரு இளம்புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயன்றிருக்கும் ப்ளாக் காமெடி வகை படம்..

சமீபகாலமாக பல ப்ளாக் காமெடி வகைப்படங்கள் பார்க்க நேர்கிறது.. பெரும்பாலும் புது இளம் இயக்குனர்கள்... சூது கவ்வும் நடுவில கொஞ்சம் பக்கத்தக்காணோம் மூடர்கூடம் போன்றவை.. கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் அந்த வகைதான்..

இந்தப் படத்தைப் பொருத்த வரையில் எத்தனை புதிய நாயகர்கள் வந்தாலும் உண்மையான கதாநாயகன் சார்லிதான் என்பேன்.. படத்தின் மையமே அதுதான் என்று கூறத் தோன்றுகிறது... உலகில் எத்தனை அயோக்கியர்கள்  அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன என்றாலும் நாம் அவற்றை பார்க்கும் விதம் என்கிற கோணம் என்கிற ரீதியில் சார்லியின் வசனம் இதயத்தை தொடும் சங்கதி... படம் முழுவதும் சார்லி சிறு நேரமே வந்தாலும் அவரின் பாடி லாங்வேஜ் அசத்தல்.. உலகம் எப்படி இருந்தால் என்ன.. நான் நேர்மையாக இருப்பேன் என்கிற வெள்ளேந்திப் பார்வை..

பலே..
தமிழ்ப்படங்கள் முன்னேறி வருகிறது என்பதற்கு சாட்சி என்றே சொல்லத் தோன்றுகிறது 

வெள்ளி, 24 மார்ச், 2017

அசோகமித்திரன் ....

என்ன சொல்வது மனுஷ்யபுத்திரன் அஞ்சலியைவிட வேறு வார்த்தை இல்லை     நன்றி  மனுஷ்யபுத்திரன் 
=================================================
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப வர முடியாத அளவு
அவ்வவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை எனில்
சிறிய அன்பும்
சிறிய வருத்தங்களும்
சிறிய திருட்டுகளும்
நமக்குப்
போதும்தானே..(மனுஷ்யபுத்திரன்)"
Image result for ashokamitran


ஞாயிறு, 12 மார்ச், 2017

தேர்தல் பாடம்....

வட மாநில தேர்தல்கள் சற்றே ஆழமாகப் பார்த்தால் பெரிய வியப்பெல்லாம் இல்லை....

அதே சமயம் பாஜகவினர்கள் கூறும்படி அவர்களுடைய demonitizationக்கு ஆதரவான அலையாகவும் தெரியவில்லை,,

முதலில் உ.பியில் அந்த முலயம் குடும்பம் போட்டுக் கொண்ட குழாயடிச் சண்டை... அப்போதே இது வெறும் யாதவ் குடும்ப பிரச்சனையாக சந்தி சிரித்தது.. மக்கள் இவர்களை நம்பவில்லை .. அதனால் வேறு வழியில்லாமல் பாஜக என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.. மாயாவதியின் வாக்கு எந்திரக் குற்றச்சாட்டு நமது புரட்சித் தலைவி பாணியில் சொல்லி முடித்துக் கொண்டார்.   ஆக இப்படித்தான் உ,பியைப் பார்க்க வேண்டும்.. 

உத்தரகாண்டில் ANTI INCUMBANCY என்பதுதான் காரணம் எனலாம்

பஞ்சாப்பில் காலூன்ற இயலவில்லை.. காரணம் அதன் தனித்துவம்..

கோவாவில் இழுபறி மற்றும் அதே ANTI INCUMBANCY பிரச்சனை

மணிப்பூரில் தனித்துவமான தன்மை..

அதனால் இது பாஜகவின் கொள்கைகான வெற்றி  என்று எடுத்துக் கொள்ள முடியாததான்...

அதே சமயம் சில விஷயங்கள் சற்றே ஆச்சரியமும் அதிர்ச்சியும் 

முதலில் உ,பியின் முஸ்லிம்களின் ஓட்டை பாஜக பெற்றது எப்படி என்பது... முழுக்க முழுக்க முஸ்லிம் மக்கள் ஜனநாயகத்தை விரும்புவதைத்தான் இது காட்டுகிறது..

இரண்டாவது ஐரோம் ஷர்மிளா - அவர் ஏதோ நாளை மணிப்பூர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.. 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம்... அப்படியென்றால் மக்களுடன் CONNECT ஆகாமல் அவர் ஏதோ வீம்புக்காக இருந்ததைப் போன்றே தோன்றுகிறது...

மூன்றாவது.. வடிவேலை வைத்து மீம்ஸ் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... அதாவது.. இந்த மாநிலங்களில் இன்னமும் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஓட்டை எண்ணவே ஆரம்பிவில்லை என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது..

 இதிலிருந்து அரசியல் இயக்கங்கள்  பாடம் கற்கவேண்டும்