வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இது ஒரு கால கட்டம்....

கமல்ஹாசனின்  திடீர்  பேயாட்டம் காரணம் விளங்கவில்லைதான் ….

“நான் ஹிந்தி எதிர்ப்பு காலத்திலே அரசியலுக்கு வந்து விட்டேன்…” என்பதும் ஜெ உயிருடன் இருந்த போது ஏன் பேச வில்லை என்பதற்கு கமல் கூறும் விளக்கம் எல்லாம் காதில் பூ தான் ….

திரைப்படத்திலேயே தான் இன்னமும் பல முயற்சிகள் செய்யவில்லை என்கிறார் …. அதை ஏன் அம்போ என்று விடவேண்டும்  என்பது புரியாத புதிர்தான்….  பலர் பல காரணங்களை சொல்கிறார்கள்….. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன் தான் வந்துவிட வேண்டும் என்பதுதான்  காரணம் என்று பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்…. இருக்கலாம் …..

ஆனால் இந்த திடீர் பிரவேசம் என்பது ஜல்லிக்கட்டால் வந்த வினை என்றே கூறத்தோன்றுகிறது…. சில நேரத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தமோ பெரும் போராட்டமோ நடந்தால் அதன் உணர்ச்சி வேகத்தில் சில திடீர் தலைவர்கள் தோன்றுவார்கள்….. அதை போல ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்….. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த இளைஞர்கள்  அரசியல் சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்பினார்கள்…. மேலும் மத சாதி அடையாளத்தைக்கூட துறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது….. ஸ்டாலின் கூட அங்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை..

  "இது APOLITICALதனம் .. எந்த திட்டம் கொள்கை இல்லை.." என்று வழமையான IDEALISTகள்  கூக்குரலிட்டார்கள் .. ஆனால் அப்படிதான் அது நடந்தது… ஆனால் இந்த லட்சியவாதிகள் நிகழ்ச்சி நிரலை இளைஞர்கள் பின்பற்றவே இல்லை…… அவர்கள் தங்கள் குறிக்கோளுடன் இருந்தார்கள்.. இது சற்று வியப்பாகவே இருந்தது உண்மைதான்..

இது கமலை உசுப்பேற்றிருக்கலாம்

சோவியத் காலகட்டம் ,  இந்திய சுதந்திர போராட்டகாலம் போன்றவை பல தலைவர்கள் உருவாக காரணமாக இருந்தது….  அது ஒரு PHASE ….. IDEALIST PHASE….. ஆனால் தற்போது தலைவர்கள் இல்லாமல் மக்கள் கூடுகிறார்கள் …..  எந்த தலைவரையும் நம்ப முடியவில்லை என்பது ஒரு காரணம்…. அந்தளவு மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள்… இதை கமல் பயன்படுத்த நினைக்கலாம் என்று தோன்றுகிறது…

ஜெயித்தலாலும் ஜெயிக்கலாம்… ஜெ- யை  மக்கள் ஏற்கவில்லையா அதை போல கமல்….

ஆண்டவா…



திங்கள், 18 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும்...

தமிழில் Offbeat படங்கள் தற்பாேது அதிகம் வருவது நல்ல டிரண்ட்  அவை வெற்றிபெருவது நம்பிக்கையூட்டுகிறது..


அந்த வகையில் மகளிர் மட்டும்
 இழையாேடும் மெல்லிய நகைச்சுவை
தேவையற்ற பரபரப்பின்றி இயல்பான காட்சி அமைப்பு ... நட்சத்திர பந்தா இல்லாத படம்...ஆனால் அழுத்தமில்லாத  திரைக்கதை ஒரு குறை...


வெள்ளி, 15 செப்டம்பர், 2017

உச்ச கட்ட குழப்பம் ...

அதிமுக ஜெக்கு பிறகு மூன்றாக உடைவதற்கு முன்பாக  சசியை பொது செயலாளராக நியமனம் செய்தார்கள் . உடைந்த மூன்றில் இரண்டு சேர்ந்து கொண்டு சசியை பொது செயலாளர் இல்லை என்கிறார்கள் அவரை கட்சியை விட்டு நீக்கினார்களா என்றால் அதுவும் இல்லை  .. 

அதிமுக சட்டப்படி பொதுக்குழுதான் முழு அதிகாரம் படைத்தது .. அதனால் இதில் உள்ள குழப்படியால் என்ன செய்வது என்று முடிவு செய்யாமல் இனி ஜெக்கு பின் பொது செயலர் பதவிக்கு யாரும் இல்லை என்ற  தீர்மானத்தை போட்டுள்ளார்கள்.. 

 தினகரன் அணியோ GOVERNORரிடம் முதலமைச்சரை மாற்றுங்கள் என்று கோருவார்களாம்..  அதை கவர்னர் எப்படி செய்ய முடியும்..? அந்த கட்சியின் உள் கட்சி விவகாரம் இல்லையா போன்ற பல இடியாப்ப சிக்கலுடன் தமிழக அரசியல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது.. 

அதிமுக வின் உச்ச கட்ட குழப்ப நிலைக்கு என்ன காரணம் என்று அலசவே தேவையில்லை காரணம் அது M.G.R- ன் வழி வந்த இயக்கம் முழுக்க முழுக்க தனி நபர் கவர்ச்சி தனி நபர் துதியால் ஆன ஒரு கட்சி எந்த தத்துவோமோ கொள்கையோ இல்லாத ஒரு கட்சி ...

திமுக வும் ஏறத்தாழ அப்படி வந்து விட்டாலும் சமூக நீதி மாநில உரிமை என்று சொல்லும்படியாக உள்ளது ...

ஆனால் MGRக்கு   அடுத்து வந்த ஜெ முழுக்க முழுக்க அதை தனி நபர் செல்வாக்குடன் ஆட்டோகிராடிக் -தனமாக வளர்த்து வந்தார்... அது எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ...

தமிழக அரசியல் என்றுதான் சரியான கொள்கை உடைய கட்சிகளால் வழிநடத்தப்படுமோ என்று ஏக்கமாக இருக்கிறது 

சனி, 9 செப்டம்பர், 2017

இந்தியாவிற்கு எதிரானது எது...



 சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான்                     சாெல்லியிருந்தார்.... கெளரி லங்கேஷ்  படுகாெலையை ஒட்டி....
This is not my India..
ஆம்... வேறு என்ன  சாெல்வது.

திங்கள், 4 செப்டம்பர், 2017

NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...

 NEET பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன் என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது..

இதுவரை படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??

அணு உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும் பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??

ஏற்கனவே தமிழக அரசு மசோதாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதாம்அதை செய்யாமல்  விட்டது ஏன்??

அனிதா படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE  சிலபஸ் மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது  என்பது உண்மையா...

தமிழ்நாட்டு கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS பிலானியில் ஒருவர் கூட சேர முடியவில்லை என்பது உண்மையா..

தமிழ்நாட்டு கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள் பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…

அனிதா டெல்லி சென்று வர விமான கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..


கல்வியாளர்கள் என்ற பெயரில் பல NGO-க்கள் இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது உண்மையா..

இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம்