திங்கள், 25 டிசம்பர், 2017

TTV வெற்றியின் காரணம் ...

தினகரனின் வெற்றி பற்றி பல காரணங்கள் எதிர் கட்சிகள் முதல் அரசியல் விமர்சகர்கள் வரை பல தகவல்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்....

 OPS EPS திமுக தன்  வாக்கை TTV   மாற்றியது  என்று கூக்குரலிடுகிறது ....

 திமுகவோ இருபது ருபாய் என்ற ஹவாலா கதை சொல்கிறது... ராஜ் தீப் சர் தேசாய் மத்திய அரசை எதிர்ப்பவர்கள்  தென்இந்தியர்கள்தான்... இதில்  TTVதான் சரியாக எதிர்ப்பவர் என மக்கள் நினைக்கிறார்கள் என்கிறார் ..

மத்திய அரசு இவரை முன் வைத்து மெகா ரைடுகள் நடத்தியபோது   TTV எந்த எதிர்ப்பும்   செய்யாமல் கோ பூஜை செய்து கொண்டிருந்தார் ...இதுதான் அவர் எதிர்பரசியல் ...

இவை அனைத்தும் என்னால் ஏற்க முடியவில்லை ....நான் நினைப்பது இதுதான் ...

தமிழக அரசியல் பற்றி ஜெயமோகன் ஒருமுறை எழுதியிருந்தார் திமுக என்பது அண்ணா காலத்திலேயே வாக்கு வங்கிக்காக M.G.R-ஐ  நம்பி வளர்ந்த கட்சிதான்...  வெகு காலமாக திமுக இருப்பதால் அதற்கென்றே ஒரு வாக்கு வாங்கி வைத்திருக்கிறது... ஆனால்  திமுக எதிர்ப்பு மற்றும் M.G.R ஆதரவு என்கிற வாக்கு வாங்கி தமிழகத்தில் மிக அதிகம்... அது எந்தப்பக்கம் மாறுகிறதோ பிரிகிறதோ  அதை வைத்துதான் ...இங்கு அ திமுக திமுக ஆட்சிகள் நடக்கிறது ....மேலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வருகின்ற போது  பெரும்பான்மை பெற்று வருவதில்லை என்கிற ரீதியில் எழுதியிருந்தார் ..

அதை நான் ஏற்கிறேன்...

 மேலும் TTVயின் வெற்றி என்பது ஜெ மறைவுக்கு பின் புதிய தலைவரை தேடும் தமிழக மக்கள் மன நிலை என்று நான் பார்க்கிறேன் ....TTVன் வெற்றி என்று நான் பார்க்கவில்லை... மேலும் சில புதிய  இளைஞர்களிடம் தேர்தலுக்கு முன் பேசிக்கொண்டிருந்த பொது அவர்கள் கூறுவது   ''எல்லா பயலும் மோசம் சார்... கமல் வந்தால் நாம் ஓட்டு போடலாம்... அவர் வரலை என்றால் TTVஒரு வாய்ப்பு தரலாமே ..'' என்கிறார்கள் இதை போன்ற விஷயங்கள்தான் மனநிலைதான் ஆர் கே நகர் மக்களை இப்படி வோட்டு போட வைத்திருக்கிறது ....

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

THE BUSINESS OF LIVING........

இப்படி ஒரு ஆங்கிலத் தலைப்பு தருவதற்கு மன்னிக்கவும்.. அதன் காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.. வேண்டுமானால் தினசரி வாழும் வாழ்க்கை வியாபாரம் என்று சொல்லலாம்.. வாழ்க்கை என்பது வியாபாரம் என்று கவிஞரே சொல்லியிருக்கிறாரே...

சரி விஷயத்துக்கு வருகிறேன்...

எனது குடும்ப நண்பர் இந்தியாவை மிகவும் நேசிப்பவர். எந்த  காரணம் கொண்டும் நம்நாட்டை குறை சொல்வதை அவர் ஏற்கமாட்டார். அவர் எந்தவித குறிப்பிட்ட அரசியல் கட்சியும் ஆதரிப்பவர் இல்லைதான்.. அது ஒரு வித இந்திய பக்தி..

இந்தியாவில் ஊழல் என்று கூறினால்  எந்த நாட்டில்தான் இல்லை என்பார். அரசியல்வாதியை குறைசொன்னால் வேறு எங்கு ஒழுங்காக இருக்கிறது என்பார்..  ரோடு மோசம் என்றால் “ஆமாம்.. மத்த நாட்ல..“ என்று தொடங்கிவிடுவார்..  எனக்கும் கிட்டத்தட்ட அவர் தேசபக்தியில் பெரும்பான்மை சதவிகிதம் உண்டுதான்..  ஆனால் வேறு சில விஷயங்களைக் கேள்விப்படும் போதும் படிக்கும் போதும் சற்றே நெருடும்..  நாம்  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஒப்பிட்டுப் பேச முடியும்.. நம்மைவிட மோசமான நிலைமைகள் கொண்டுள்ள மூன்றாம் உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிட்டு பேச முடியாது.  காரணம் நாம் நம்மை விட அதிக மார்க் வாங்கும் மாணவர்களை ஒப்பிட்டு பேசுவது போலத்தான் இதுவும்..

நமது நாட்டு போலீஸ் துறையை பற்றி அரசியல்வாதிகளைப்  பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டன...  புதிதாய் சொல்ல வேண்டியதில்லை..  ஜாஸ் என்கிற பழைய பிரபல திரைப்படம்... அந்தப்படத்தில் ஒரு பெண்மணி சுறாவால் கொல்லப்பட்ட தன் மகளை காக்கத் தவறிய அந்தப் போலீஸ் அதிகாரியின் (Martin Brody) கன்னத்தில் அனைவர் முன்பாக அறைவார்... நம்மால் இங்கு அப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாது..

மேலே சொல்லப்பட்ட நாடுகளில் குற்றமே இல்லை என்று வாதாட வில்லை.. அதன் அளவு ரீதியாக குணம்சரீதியாக மாறுபட்டவை.. இங்கே சராசரியாக சாதாரண பிரச்சனைகளுக்கே ஊழல் என்று அங்கிருப்பதாகத் தெரியவில்லை.. ஒரு ரேசன் கார்ட் வாங்குவதில் தொடங்கி ஒரு டூவீலர் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுவரை எதிலும்  அனைவற்றையும் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது..

சாலைகள் பராமரிப்பு மக்களின் கல்வியறிவு  மக்களின் சிவில் அறிவு சட்டப்படி நடக்கும் காவல்துறை விரைவாக நீதி வழங்கும் நீதித்துறை போன்றவை மேலே சொன்ன நாடுகளில் உள்ளதைப் போல நம் நாட்டில் உண்டு என்று மார்த்தட்ட முடியுமா....?  சமீபத்தில் பாரீசுக்கு சென்ற எனது உறவினர் சொன்னார் .. அங்கு  மெயின் சிட்டிப் பகுதியில் க்ரைம் ரேட், ஜீரோ சதவிகிதம் என்று.. இதைத்தானே நாம் நம் நாட்டில்  கனவு காண்கிறோம்..

பொதுவாக அமெரிக்கா அல்லது முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் குடிபெயரும் நம்மூர்காரர்கள் இந்தியா திரும்பிவருவது மிக மிகக் குறைவு.. 

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்...

சமீபத்தில் முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனராக இருந்த திரு கோபால்சாமி ஒரு கூட்டத்தில் பேசினார்.  அவருடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் பெற்றோர் பல முறை இந்தியாவிற்கு வரச் சொல்லியும் காலந்தாழ்த்தியதாகவும்  அதனால் திரு கோபால்சாமி அவர்களே ஏன் அப்படி செய்கிறாய் என்று கேட்டதாகவும் அதற்கு அவர் இப்படித்தான் பதிலளித்தாராம். .  . “the business of living is easy there...’’

அது உண்மைதானே...  நாமும் நம் நாட்டில் ஒரு சராசரி வாழ்க்கையை எளிதாக்கிவிட்டால்கூட நம் நாடு சொர்க்கலோகம்தான் எனக் கூறுவேன்..