சனி, 29 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் - PART II : ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் ...

முதலில் இந்த சுட்டியை படிக்கவும் 
https://www.thenewsminute.com/article/stalked-trapped-hotel-us-travel-blogger-recounts-sexual-harassment-india-88186

முதல் முறையாக ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
இது என்ன ஒரு கொடுமை இப்படி சிங்கப்பூரில் நடந்துவிடுமா
நடந்தால் என்ன எதிர் விளைவுகள் உண்டு என்பதை சொல்லித்
தெரியவேண்டியதில்லை நாம் இன்னமும் பயணிக்க வேண்டியதூரம் அதிகம்..

 சரி .இது ஒரு புறம் தற்போது சில விடுபட்ட சிங்கப்பூர் செய்திகள் 

-நான் இருந்த நாட்கள் வரை ஒரு தெரு நாயையோ சுற்றி திரியும் மாடுகளையோ பார்க்கவில்லை

* Signalக்கு   பாதசாரிகளும் வண்டிகளும் அத்தனை மரியாதை தருகிறார்கள் 

*பேருந்துக்கு நடத்துனர் கிடையாது ஓட்டுநர் மட்டுமே 

* பேருந்தில் ஏதாவது மாற்றுத்திறனாளி ஏறினால் அவர்களுக்கு பெரிய கதவை திறந்து அவர் ஏறுவதற்க்காக தன் இருக்கையை விட்டு வந்து உதவுகிறார் ஓட்டுநர்

* அனைத்தும் பேருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க முன்பக்க கதவுகள் வழியாக அனைவரும் ஏறவேண்டும் நடுவில் உள்ள பெரிய கதவு மாற்று திறனாளி ஏறுவதற்கும் அனைத்து பயணிகள் இறங்க மட்டுமே .. யாரும் அதை மீறுவதில்லை ..

* அங்கங்கு மிதிவண்டிகள் கிடக்கின்றன .. அவற்றை தேவைப்பட்டவர்கள் எடுத்து உபயோகம் செய்துகொள்ளலாம் (நம் ஊரில் அவ்வாறு இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் )

* அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் தருகிறார்கள்  .. CYCLING SWIMMING, JOGGING WALKING போன்றவை ...

சென்ற பதிவில் ஒரு நண்பர் சிங்கப்பூரில் காவல் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்றார்..  இருக்கலாம் ... நான் லிட்டில் இந்தியாவில் மட்டுமே பார்த்தேன் மேலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூர் வாழ் நிரந்தர குடிமகன் என் நண்பர் அவ்வாறு சொன்னதால் அதை பதிவிட்டேன் ..

சரி.. சரி... இவையெல்லாம் நம் நாட்டில் இல்லையா இருக்கிறதுதான்.... சட்டம் இருக்கிறது ...ஆனால் நாம் மதிப்பதில்லை அவ்வளவே ....எனவேதான் சிங்கப்பூர் ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் 



புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இறைவன் இருக்கிறானா .....

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

 இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது. 

இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY) 

Image result for ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்கார

இத்தனை பக்தி பழங்கள்  நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல 

புதன், 5 செப்டம்பர், 2018

அறிவுள்ள பெண்...

  விமான நிலயத்தில்  இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறைமை அதாவது புரோட்டோகால் இருக்கிறது . அதை மீறுவது சரியில்லை என்பது என்னைப் பொறுத்த வரை சரியானதே.

 ஆனால் அதற்கான எதிர்வினை அந்தப் பெண் செய்த செயலைக் காட்டிலும் மோசமானதாகவே படுகிறது.  தமிழக முதல்வரை  சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.

 எஸ் வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்தார் என்று வழக்கும் பதியப் பட்டது.

 ஆனால் காவல்துறை என்ன செய்தது என்பது அனைவரும் அறிந்தததே.   இவ்வாறு நடப்பதுதான் உண்மையில் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு அச்சறுத்தல் என கருதுகிறேன்.

தன்னை நோக்கி சிறு முனகல் கூட தேச விரோதம் என்பேன் அதே சமயம் நான் என்ன அத்துமீறல் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது என்கிற மனோபாவம்  பெரும் ஆபத்தானது.  இதுதான் பெரும் கவலையளிக்கின்ற அச்சுறுத்தல்.