புதன், 12 ஜூன், 2019

ராஜராஜசோழன் .....

ராஜ ராஜ சோழன் இப்படி செய்யவில்லை அப்படி செய்யவில்லை என்று இன்றும் பட்டியல் செய்யலாம் தான் ..

ஆனால் பயன் என்ன...?

 ராஜ ராஜ சோழன் காலகட்டம் என்பது 10 நூற்றாண்டாகும் ... அப்போது உள்ள நிலை என்ன..? அப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சி என்ன ..? என்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த விடை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் பேசுவது என்பது ஏற்புடையது அன்று...

காலத்தை கடந்து வந்த அந்த பெரும் படைப்பு... பெருவுடையார் கோயில் ....அதன் கம்பீரம்....  அந்த ஒன்று நமது கட்டிடக்கலையை பறைசாற்றவில்லையா ....?

குறைதானே  கண்டுபிடிக்கவேண்டும் .....

  ராஜராஜசோழன் சோசலிசம் கொண்டுவர முயற்சி செய்யவில்லை என்று கூட சொல்லலாம்...

 கால தேச வர்த்தமானம் என்று ஒன்று தேவை இல்லை போலும்....


 அது சரி புத்தர் புலால் உண்பதை எதிர்த்தார் அல்லவா..?  பழைய சனாதன கொள்கையில் எருதை கொள்வது பாவம் என்று தானே பௌத்தம் சொன்னது ...

ஒரே குழப்பம் போங்கள் 

வியாழன், 6 ஜூன், 2019

புரிந்து கொள்ள முடியவில்லை.........

  இந்தி பாடல்களை     ரசித்துக்கொண்டிருந்த தமிழர்களை,  தமிழ் பாடல்கள் பக்கம் மீண்டும் திரும்ப வைத்தவர்த்தான்   இசைஞானி ..

தமிழ் இசைக்கு மீண்டும் புத்துயிர் அளித்த இசை இசைஞானியின் இசை என்பதில் இரு வேறு கருதில்லைதான் ..

ஆனால் என் பாடல்களை பாட ராயல்டி தரவேண்டும் என்கிற ஞானியின் கண்டிப்பு சற்று புருவத்தை உயரவைக்கிறது ..

புரிந்து கொள்ள முடியவில்லை...