வெள்ளி, 26 ஜூலை, 2019

ஒரு மாதிரி இருப்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை...


கீழ்க்கண்ட படங்கள் அத்தனை ஊடகங்களில் கிடைக்கிறது.





இவர்கள் நாளைய மாணவச் செல்வங்கள்


என்ன . . ? பேனாவுக்கு பதில் பட்டாக்கத்தி வைத்திருப்பதால் போலீஸ் கவனித்திருக்கிறது.    அட. . அதிசயம் பாருங்கள் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக பாத்ரூமில் "வழுக்கி " விழுந்துள்ளதால், ஒரே மாதிரி இடத்தில் ஒரே மாதிரி கட்டு போட வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.



சமூக ஆர்வலர்கள் தரப்பும் அதன் எதிர்த்தரப்பும் நிறைய விவாதங்கள் செய்கிறார்கள்.



இதை சமூக விஞ்ஞான பார்வையில் அணுக வேண்டும் என்று வாதிடுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்...



இந்த ஜல்லியடியெல்லாம் வேண்டாம் இவர்களையெல்லாம் கழுவில் ஏற்றுங்கள் என்கிறார்கள் சுஜாதா பாணியில் எதிர்த்தரப்பு .



சரி அடியேனும் சுஜாதா பாணியில் இதைப் பார்க்கிறேன்.



சுஜாதாவின் பிரபல சிறுகதை  நினைவுக்கு வருகிறது.( மூன்று கடிதங்கள்)



ஒர் இளம் தம்பதி.   வேலைக்குச் செல்லும் பெண் .  அவள் அலுவலகத்தில்  ஒரு முறை ''காசுவல்'' பணியாளர்களால்

(இளைஞர்கள்) பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீஸ் அந்த
 இளைஞர்களை கைது செய்து அந்த யுவதியை அடையாளம்
காட்டச் சொல்கிறார்கள்

அந்தச் சிறுகதையின் ஒரு பகுதி::

அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச்
சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்  நேரம்' எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலைபோலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை     

தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு  இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.

அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்

நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது


விதியையா? சமூகத்தையா?

சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை 


இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.




என முடித்ததிருப்பார்


இந்த ரீதியிலும் பார்த்தால் எதிர்த்தரப்பினர் (சமூக ஆர்வலர்) கூற்று விளங்கும்


புதன், 24 ஜூலை, 2019

இது உலக மகா விசித்திரம்..

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஓட்டுக்கு விடப்பட்டது.. இது ஓட்டுக்கு விடப்பட்டதற்கு காரணம் ஓவெசி AIMIN கட்சியின் தலைவர்.. 

 இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சண்டமாருதம் செய்கிறது திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..

 திமுக சொல்லும் காரணம் இதுதான்…

 ‘’ சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக  பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை காணவேண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு  திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.’’

கம்யூனிஸ்டுக்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்தார்கள்…  அதைப்போல ஓட்டுக்கு வந்தபோது அதை எதிர்த்தும் வாக்களித்தார்கள் ..

ஆனால் இத்தனை காரணங்கள் சொல்லி இதனால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள்  திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..


இது உலக மகா விசித்திரம்..

திங்கள், 15 ஜூலை, 2019

உலகக் கோப்பையும் ஞானப்பழமும் ..

கிரிக்கெட் பார்த்து பல காலமாயிற்று. எப்போது இந்த            "பெட்டிங்" வந்ததோ அப்போதே அடியேன் பார்ப்பதை கைவிட்டு விட்டேன்.

உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.

50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.

ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -

அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.

ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !

நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...