வியாழன், 30 ஜூன், 2016

மனவலியை பொறுக்க முடியவில்லை....

உயிர் வலியைவிட மன வலி பொறுக்க முடியவில்லையே.....

அந்தச் சின்னப் பெண் சுவாதி ரத்த ஆற்றில் விழுந்து கிடந்தது முதல் நடைபெறும் விஷயங்களால் நிச்சயமாக அனைவரும் கடும் மன அழுத்தத்திற்கும் மன  வலிக்கும் ஆளாயிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.. ஏன்... எதற்கு.. எப்படி... என்று பல விவாதங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.. 

இதில் சாதி மதச் சாயங்கள்,  சாய்வுகள் என்று ஒரு பக்கம் விவாதம் களைக் கட்டியிருக்கிறது... இந்த நாட்டில் ஏதோவொரு சாதியில் , ஒரு மதத்தில்  பிறந்துதான் தீரவேண்டும் ... அது யார் செய்த விதி... யாரை நொந்து கொள்வது ...? 

நடிகர் மகேந்திரன் முகநூலில் தனக்கு வந்ததை பகிரப் போய் அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது... 

கொலை செய்யப்பட்டவள் ஒரு சாதி  ஒரு மதம்.. கொன்றவன் ஒரு சாதி அல்லது மதம்.. அதற்கு யார் என்ன செய்ய முடியும்... நீ அதுவானால் அதைப் பற்றிப் பேசாதே என்பது ஒரு கலாச்சார போலீசிங் தனம்தான்... அவரவர் கோபத்தை அவரவருக்குத் தோன்றுவதைப் போல தெரிவிப்பார்கள்தான்... மகேந்திரன் கிட்டத்தட்ட பிஜேபி என்கிற முத்திரையே குத்திவிட்டார்கள்...

முதுகின் குறுக்கே நூல் இருந்தால் பேசக் கூடாது என்றால் சிரிப்புதான் வருகிறது.. அப்படி தடை போட இவர்கள் யார்...?  விஞ்ஞான ரீதியில் அப்படி நிரூபிக்க முடியுமா..?  யார் முன்னே நிரூபிப்பது.....?  நிருபித்தாலும் அதை சரியென்று யார் சொல்ல முடியும்...? உண்மையில் ஆதிக்க சாதி என்பது இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் இருக்கும்தான்.. ஜெயமோகன் சொல்வதைப் போல பிராமணர்கள்,  ஜனநாயகத்திற்குத் தர வேண்டிய விலைதான் இட ஓதுக்கீடு மற்றும் ஆதிக்க சாதி பட்டம் என்பார்.. தொழிற்சங்கத் தலைவர்  டேவிட் ஞானைய்யாவிடம் நான் இதைப் பற்றி கேட்டதற்கு புராண காலத்தில் இருந்ததுதான் ரிசர்வேஷன் தற்போது இருப்பது DE-RESERVATION என்று கூறினார் .  அவர் கூறுவதும் ஜெயமோகன் சொல்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.. அதாவது வெவ்வேறான பாஷையில் .....
சுவாதி பிரச்சனையில் அவள் பிண்ணனிதான் முற்போக்கு மற்றும் மாதர் இயக்கங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்கிற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது..

என்ன செய்ய முடியும்.. அவளை குற்றுயிராக வெட்டி வீழ்த்தியவனைக் கூட யாரும் பிடிக்க முயலவில்லை .. நிழல் கமல்கள் ரஜினிகள்  முஷ்டியை உயர்த்தவில்லை.. விஜய்கள் ஆள்காட்டி விரலை மடக்கவில்லை.. சிக்லெட் சாப்பிட்டுக் கொண்டு அஜித்கள் நடந்து வந்து காப்பாற்றவில்லை... அதை நிழலில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள் அவர் ரசிகப் பெருமக்கள்...

உடுமலை சங்கர் படுகொலை காட்சியே போட்டுக் காட்டினார்கள் அப்போதும் யாரும் அந்தக் கொலையாளிகளை பிடிக்க முயலவில்லை... 

இது ஒரு பொதுப் புத்தியாகத்தான் இருக்கிறது..

நமக்கேன் வம்பு என்பது ஒரு புறம்... போலீஸ் கேஸ் என்று வந்தால் பிரச்சனை என்று மறு புறம்.. பாதிக்கப் பட்டவர் சாதி என்ன மதம் என்ன அதன் மூலம் இயக்கங்கள் நடத்தலாம் என்பது மறுபுறம் என்ன அனுகூலம் பெறலாம் என்பது இன்னொரு புறம்..

நாம் போகவேண்டியது வெகு தூரம் என்பது தெரிகிறது....

திங்கள், 27 ஜூன், 2016

தூக்கும் தண்டனை

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் சில சமூக விஞ்ஞானிகள்.

அவர்கள் பெரியவர்கள்...  அவர்கள் வாதம் சரியாக  இருந்தாலும் இந்தக் காட்சியைப் பார்த்தால் ......................................


Image result for swathi murder

சரி.. பெரியவர்கள் சொல்லட்டும்... தூக்குத் தண்டனையை ஒழிக்கட்டும்..
ஆனால் என்கவுண்டர் இருக்கிறதல்லவா...

வெள்ளி, 24 ஜூன், 2016

பிஜேபிக்குப் பிடிக்காத ராமன்....

ரகுராம்ராஜன் பற்றி பாராட்டுக்களும் விமர்சனங்களும் மாறி மாறி பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் எழுதிக் குவித்து விட்டன..