வியாழன், 28 ஜூலை, 2016

ஞானக் கூத்தன் மறைவு...



Image result for ஞானக் கூத்தன் படம்


கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது... 
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும்  சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...

அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"


புதன், 20 ஜூலை, 2016

நிஜக் கபாலி....

Image result for piyush manush images


சமீபத்தில் சூழலியலாளர் ப்யூஷ் மனுஷ் கைதைப் பற்றி தொலைக் காட்சியில் காட்டினார்கள்.  நீதியரசரே ப்யூஷ் அவர்களின் சேவையைப் பற்றி பாராட்டி வேறு தனது    கருத்தாகக்        கூறினார்.... 

அவரைப் பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன்...  ARM CHAIR CRITICS நமது நாட்டில் அதிகம்... உண்மையில் இவர் ஒரு ஹீரோதான்... 

நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றி அக்கரை இருப்பவர்கள் இவரின் சேவையை பாராட்டமல் ஆதரவளிக்காமல் இருக்க முடியாது...

இவரைப் பற்றி பாராட்டு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது திரு ஜெயமோகன் மற்றும் நண்பர் திரு முத்து நிலவன்... அவர்கள் எழுதிய சுட்டியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு ஜெயமோகன் சுட்டி http://www.jeyamohan.in/89042#.V470ZNK7iko
திரு முத்துநிலவன் சுட்டி http://valarumkavithai.blogspot.com/2016/07/blog-post_20.html

தொண்டுகென்றே அலைவான்.....
கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை
ஞான தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞான தங்கமே...

என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மீண்டும் கடவுளை கண்டேன்.....

சுவாதியின் படுகொலையின் தாக்கம் இன்னமும் தீரவில்லை… நானும் ஒரு தகப்பன் என்பதால் இருக்கும்.. இந்தச் சோகம் முழுமையாக மறைய எத்தனை ஆண்டுகள் எனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை….  ஆனால் நடுநடுவே சிலவற்றை பார்க்கவும் பேசவும் எழுதவும் தோன்றுகிறது…

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….

இந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..

ஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..

ஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா..? என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…

LET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…?

பொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..

சம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…

ஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால்  இவர்களின் போகப் பொருள் என்றா  நினைக்கிறார்களா..?

அண்ணா காலத்திலேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது

..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது  வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..


சமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…