வெள்ளி, 24 ஜூன், 2016

பிஜேபிக்குப் பிடிக்காத ராமன்....

ரகுராம்ராஜன் பற்றி பாராட்டுக்களும் விமர்சனங்களும் மாறி மாறி பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் எழுதிக் குவித்து விட்டன..


 Image result for raghuram rajan images
இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் ஜெனரல் பதவி பெற்றாலும் அவர் அமெரிக்க குடியேற்ற உரிமை ரத்து செய்யாமல் வைத்திருக்கிறார் அது சரியான செயலா என்றும் 

அவரால்தான் இந்திய பொருளாதாராமே தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது மாயை என்றும் 

இதற்கு முன்னர் இருந்தவர்களை கேவலப்படுத்துதல் போன்றது என்றும்
ரகுராம் ராஜனை  எதிர்ப்பவர்கள் கூறுவது. 

 சுவன்னா சாமி ரகுராம்ராஜன் ஒரு அமெரிக்க நலம் விரும்பி என்று பெரிய புகார் பட்டியலே கொடுத்தார். ( ஆனால் இவரைப் பற்றியே அப்படியொரு புகார் இருப்பது தெரிந்துதான் பேசுகிறார் என்பது வியப்பு)

*மறுபுறம் ரகுராம் பண வீக்கத்தை அவருடைய காலத்தில் வெகுவாகக் குறைத்தார். 

*அமெர்த்தியா சென் ராஜனின் நீக்கத்தை எதிர்க்கிறார். 

*2016 ஆண்டின் மிக முக்கிய 100 நபர்களில் ரகுராம் ராஜனும் வருகிறார் போன்றவை எதிர் தரப்பினர் வாதம்..

ஆனால் காரணம் இவைதான்
• வங்கிகளில் வாராக் கடன்களை வசூலிக்க அழுத்தம் கொடுத்தது
• MAKE IN INDIA வில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியது
• தொழில் அதிபர்கள் கடன் பெற வங்கி வட்டியை குறைக்கச் சொன்னபோது அது விலைவாசியை உயர்த்தும் அதனால் ஏழை நடுத்தர வர்க்கம் பாதிக்கப் படுவார்கள் என்று எதிர்த்து
• எல்லாவற்றுக்கும் மேலாக சாமான்யர்கள் செலுத்தும் வரிப் பணத்தை வைத்து இந்திய கார்ப்பரேட்களின் 1,6 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிற மத்திய அரசு இது இந்தியாவின் மொத்த GDP 1.27% ஆகும் அதன் மூலம் இந்தியாவின் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சம் மாணவர்களை இலவசமாக பள்ளி முதல் தனியார் பல்கலைக் கழகங்களின் பட்டபடிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்கலாம்
என்று போட்டாரே ஒரு போடு…

இவைத் தவிர காரணங்கள் தேவையா ரகுராமனை காட்டுக் அனுப்ப….

=

கருத்துகள் இல்லை :