வெள்ளி, 25 டிசம்பர், 2015

மருத்துவ உலகமும் சமூகமும்.....

மருத்துவ உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மிடில் கிளாஸ் மூளைக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்பது என்னவோ உண்மைதான்… ஆனால் இந்த INTERNET உலகத்தில் உலகம் முழுவதும் கம்ப்யூட்டரைத் திறந்ததும் சென்னை மழைப் போல கொட்டித் தீர்க்கிறதே….  நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது..

வியாழன், 17 டிசம்பர், 2015

தீர்ப்பு....

2006 ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஓர் அரசாணையை கொண்டு வந்தார்... அதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. அதையொட்டி உச்ச நீதி மன்றம் தற்போது தீர்ப்பளித்திருக்கிறது,,

சனி, 5 டிசம்பர், 2015

whatsAppம் facebookக்கும்.....

பெரிதாக எள்ளி நகையாடப்பட்ட  இரண்டு சமூக பிணையங்கள் அதாவது social network  நமது காலத்தில் whatsapp facebook ஆகியவை... 

“எப்ப பாரு whatsappல எதாவது நோண்டிக்கிட்டே இருக்கா ...”என்கிற புலம்பல்கள் அவ்வவ்போது கேட்க நேரும்... பல பெரியவர்கள் தங்களால் இயலவில்லை என்ற நோக்கில்கூட அலுத்துக் கொள்ளவதை பார்க்க நேர்ந்திருக்கிறது...

ஆனால் சென்னை பெருவெள்ளத்தில் பலரை ஒரே மேடையின் கீழ் கூட வைத்து அனைவரையும் பின்னிப் பிணைந்து தனி ராஜாங்கமே நடத்திக் காட்டியிருக்கிறது  அதன் மூலம் பலரை  காத்திருக்கிறது whatsapp மற்றும் facebook...

எத்தனை  தேவைகள் பரிமாறப் பட்டிருக்கின்றன.. எத்தனை உதவிகள் கேட்கப் பட்டிருக்கின்றன.. எத்தனை பேரிடர் செய்திகள் அதை களையும் செய்திகள் உடனுடக்குடன் அனைவரும் காணும் வண்ணம் பகிரப் பட்டிருக்கின்றன...

அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய ஒரு விஞ்ஞான வளர்ச்சி...
விஞ்ஞானத்தின் இந்த  வளர்ச்சியை நாம் போற்றுவோம்..

வாழ்க whatsapp...

வாழ்க facebook....

புதன், 25 நவம்பர், 2015

அன்று கமலஹாசன் சொன்னது சரிதானே...?

விஸ்வரூபம் பிரச்சனையை ஒட்டி கமலஹாசன் மனம் நொந்து “நான் ஏதாவது வெளிநாட்டில் குடியேறப் போகிறேன்..“ என்று சொன்னார்.. அதையொட்டி எத்தனை கேலிகள் கிண்டல்கள் சமூக வலைதளங்களில் வலதுகள் மட்டுமன்றி SO CALLED புர்ச்சி  இடதுகள் முர்ற்போக்காளர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்வர்கள் வெளியிட்டுத் தீர்த்தார்கள்...


ஞாயிறு, 15 நவம்பர், 2015

யாரை குறைகூறுவது...?

Image result for chennai rain imagesImage result for chennai rain imagesImage result for chennai rain images
ஊரிலுள்ள ஏரிகளையும் குட்டைகளையும் பிளாட் போட்டார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்... ஆற்றையே ஆக்கிரமித்து வீடு கட்டினார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.. ஆற்று மணலை கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. தடுத்தவரை கொலை செய்தார்கள்..... அதையும் பார்த்துக் கொண்டிருந்தோம்... மழை நீர் எங்கே போவேன் என்று ஊருக்குள் வந்து மிரட்டுகிறது...

பிளாஸ்டிக் பைகளை பாவித்தோம்.. அதை பூமியில் அப்படியே போட்டோம்...புவியை மாசு படுத்தினோம்.. வெப்பமடைய வைத்தோம்... கடலிலிருந்து  வானம் செல்லும் நீர்த் துளிகளை அதிகமாக்கினோம்... அதனால் வெப்ப மண்டலத்தில் மாற்றம் வரக் காரணமானோம்... பொய்த்தும் கெடுத்தது தற்போது பெய்தும் கெடுக்கிறது என்று இயற்கையை குறை சொல்கிறோம் ... வெள்ளத்தைக் குறைகூறுகிறோம்... 

எந்த ஆள் பவர்களை குறை சொல்வது...
 நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டால்....

புதன், 11 நவம்பர், 2015

தூங்காவனம்....

Image result for thoongavanam images


ஒரு வரிக் கதைக்கு ஒரு வரி விமர்சனம்....


 just super.....

தமிழில் ஒரு நல்ல திரைப்படம்... தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்...

வரவேற்பார்களா என்பது படத்தின் வெற்றியில்தான் தெரியும்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

மீண்டும் ஒரு உதாரணம் …

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மார்கண்டேய கட்ஜூ  கோவன் கைதை கடுமையாக சாடி   தமிழக முதல்வர் ஜெ க்கு எச்சரிக்கை விட்டுள்ளார்.   அரசியல் சாசனத்திற்கு  முரணான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.. 

மேலும் ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசர்கள்... மன்னாராட்சி காலம் போல நடந்து கொள்ள முடியாது என்றிருக்கிறார். மேலும் கோவன் கைதில் ஈடுபட்ட காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.. 

நல்ல வேளை அதிமுகவின் அதிருஷ்டம் கட்ஜூ  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசராக இல்லை..  அவன் சொன்னதை போல நடந்து கொண்டிருந்தால் என்னவாகும்.. பெரும் சட்டச் சிக்கலில் இந்த விஷயம் சென்றிருக்கும்...

யாரை மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று மகஇக போன்றவர்கள் கிண்டலடிக்கிறார்களோ அதே இந்து நாளேடு கைதை கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது..

இது ஒரு புறம் ...ஒரு பாடல் பாடினார் என்பதால் தேசத் துரோக வழக்கு தொடுக்கப் பட்டதா என்பதை நம்ப முடியவில்லை... ரசனைக் குறைவாக பாடினார் அவதூறாக முதல்வரை பற்றிப் பாடினார் என்பதும் நம்ப முடியவில்லை...  காரணம் அதிமுக திமுக கேப்டன் ராமதாஸ் வைகோ என்று (கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து) ஒருவரையொருவர் மேடையில் பேசாத பேச்சுக்களா.. இதற்காகவே தனியாக சில நபர்களை அமர்த்திக் கொண்டு அவரவர் மேடைகளில் நாகூசும் வகையில் வசைபாடுவதை நாடே அறியும்…

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  IAS அதிகாரி ஒருவரும் மகஇகவின் பொதுச் செயலர் மருதையன் அவர்களும் தெளிவாக கூறிவிட்டார்கள்… கைதின் எதிரொலி இவர்கள் ஒரு ANTI-ESTABLISHMENT என்பதற்காகத்தான்…
ஆக அது மட்டுமே உண்மை…

ஆனால் இந்த விஷயங்களை தொகுத்துப் பார்க்கும் போது நாம் புரிந்து கொள்வது இவைதான்… 

கைது என்பதும் தேசத் துரோக வழக்கு என்பதும் தேவையற்றது.. 

மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவும் பாஜக வும் அவர்கள் மீதான  விமர்சனத்தை சற்றும் சகிக்காத தன்மை உடைய கட்சிகளாக இருக்கிறது. 

என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் மகஇக கூறும் புதிய ஜனநாயகத்தைக் காட்டிலும் கட்ஜூ   இந்து நாளேட்டு ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட பன்முக இந்திய ஜனநாயகமே சிறப்பாக இருக்கிறது.. 

மேலும் ஒரு உதாரணம் தற்போது கோவனை  போலீஸ் காவலில் விசாரிப்பதை தடை செய்து உத்தரவிட்ட நீதியரசர் சி,டி செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவை ஒரு எடுத்துக் காட்டாக நாம் காணலாம்..

புதன், 28 அக்டோபர், 2015

டாக்டர் ஜோனஸ் சால்க் என்கிற கடவுள்.....

தேசிய தொலைத் தொடர்பு சங்கம் (NFTE) காஞ்சிபுரம்  தோழர்கள் நடத்தும் வலை தளத்தில் இந்தச் செய்தியைப் படித்தேன்... கண்கள் பனிக்காமல் முடிக்க முடியவில்லை...

இதோ அந்தச் செய்தி
--------
இன்று போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் பிறந்த தினம். அமெரிக்காவின் நியுயார்க் நகரில் யூத பெற்றோர்களுக்கு 1924 ல அக்டோபர் 28ம் நாள் பிறந்தவர். இவர் வைராலஜி, தொற்று நோயியல் போன்றவற்றில் உயரிய பட்டம் பெற்றிருக்கிறார். உலகம் முழுவது இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய் பரவியிருந்த சமயம். இந்த நோய் ஒருமுறை தாக்கினால் பின்னர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அச்சமும் மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் டாக்டர் ஜோனஸ் சால்க் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் கண்டுபிடித்த மருந்தை தங்களுக்கு தாங்களே செலுத்தி பார்த்து, தீங்கு எதுவுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது. டாக்டர் ஜோனஸ் சால்க் தான் கண்டு பிடித்த அற்புதமான மருந்துக்கு காப்புரிமை பெறவில்லை. அதற்கான விருப்பமே அவரிடம் இருந்தது இல்லை. பேட்டி ஒன்றில், ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கும் குறைந்த சுமார் 15 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து இடப்பட்டு வருகிறது. சுமார் 150 நாடுகளில் போலியோ நோய் முற்றிலுமாக தடுக்கப்பட்டுவிடதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முழு மூல காரணம் டாக்டர் ஜோனஸ் சால்க் தான். இன்று பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...!

வியாழன், 22 அக்டோபர், 2015

அஞ்சலி

Image result for venkat swaminathan images

விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அக்டோபர் 21 அன்று காலமானார் என்ற தகவல் வந்துள்ளது.  

 பல வாசல்கள் திறப்பதைப் போன்ற அவரின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்... மறக்க முடியவில்லை....

அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

திங்கள், 19 அக்டோபர், 2015

எதுக்கு வம்பு....

ஒரு வழியாக நடிகர் சங்க அமர்க்களம் முடிந்து விட்டது.. விஷால் அணி வெற்றி... 

சந்தோஷம்.... 

ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொண்டையை கவ்விவிட்டது... 
எத்தனை பேட்டிகள்...

எத்தனை குற்றச் சாட்டுகள்...

இந்த உலகில் நடிகர் பிரச்சனைகள் தவிர வேறு எதுவும் இல்லையோ என்று தோன்ற வைத்து விட்டது...

ஒரு நாள் முழுதும் கவரேஜ்....

இந்த அணி வெற்றி பெற்றதால் இனி உலகமே மாறிவிட்டதோ என்கிற பிரமை... சுஜாதா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊரையே அலம்பிவிட்டது போல் பிரமை...

சரி... நாமும் வாழ்த்தி வைப்போம்... ஏனெனில் நாளை அரசியல் தலைமையே இவர்களிலிடமிருந்துதான் வரலாம்... அதுதானே  தமிழ்நாட்டு நிலைமை...

எதுக்கு வம்பு....

திங்கள், 12 அக்டோபர், 2015

எழுத்தாளர்களின் அறச் சீற்றம்....

(இந்திய) வரலாறு காணாத வகையில் எழுத்தாளர்களின் எழுச்சியைப் பார்க்க நேர்கிறது... நயன்தாராசேகல் கவிஞர் அசோக் வாஜ்பேயியை தொடர்ந்து, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.     பரிசுகளை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் தொடரும் போலத் தெரிகிறது.. 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பிறவிக் கலைஞர்


Image result for manorama photos

எத்தனையோ கலைஞர்களைப் பார்த்தாலும் ஒரு சிலர் பிறவிக் கலைஞராகத் திகழ்வார்கள்....
அந்த வகையில் மனோரமா ஒருவர்....
அன்னாருக்கு அஞ்சலிகள்.....

வெள்ளி, 2 அக்டோபர், 2015

போகுமிடம் வெகு தூரம்......

இலங்கை அரசின் போர்க்  குற்றம் பற்றிய வரைவுத் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியிருக்கிறது...

வியாழன், 10 செப்டம்பர், 2015

இரண்டு லட்சம் கோடி.....

 உலக முதலீட்டார்கள் மாநாட்டின் பயனாக இரண்டு லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது... உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான்...

சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

Image result for kaaka muttai

முதலில் காக்கா முட்டை படம் வெளியாகி வெகுநாட்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுவதற்கு மன்னிக்கவும். ...ஏதோ விஜய் டிவியின் தயவில் பார்க்க நேரிட்டது... வாழ்க விஜய் டிவி....அசிங்கமாக தைய்யா தக்கா என்று குதிக்கும் நமது  செந்தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு ரத்தினம் எப்போதோ வந்து திக்குமுக்காட வைக்கிறது...

யார் அந்தப் பையன்கள் மற்றும் படத்தை எழுதி இயக்கிய மணிகண்டன் அவர்கள்.. ???

ஈரானியப் படம் offbeat மேற்குலக செதுக்கிய சிற்பப்படங்கள் என்று சிலாகிப்பது தேவையற்றது என்று நான் உணர்ந்த தினம் இது...  

நிச்சயமாக நம்மிடம் உள்ள படைப்பாளிகள் உலகத் தரத்திற்கு சற்றும் சளைக்காதவர்கள்தான் என்பதை அந்த ஆண்டவன் மீது சத்தியமாக கூறுகிறேன்...

ஆனால் அவர்களை எப்படி இனம் காண்பது...

காக்கா முட்டை.....

நமது contemporary வாழ்க்கையை சமகால சமூகத்தை அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை  அழுத்தம் திருத்தமாக முகத்தில் அறைந்தாற் போல் தோலுரித்துக் காட்டும் வன்மையாக படம்... 

குப்பத்து வாழ்க்கை... தீப்பெட்டி போன்ற இடத்தில் அவர்கள் வசிக்கும் அல்லது அண்டும் வீடு போன்ற ஒரு இடத்தைக் காண்பிப்பதாகட்டும்

சிறு பிரச்சனையை கிடைத்தாலும் அதை எப்படி அரசிலாக்கி சம்பாதிக்கலாம் என்று துடிக்கும்  பிழைப்புவாத கட்சிகளாகட்டும்

டிவியின் TRP RATING கிற்காக அதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் பெரும் பசியாகட்டும்

அதை வைத்து காசு பார்க்கும் ரவுடிகளாகட்டும்

நடுவில் போலீஸ் தனது வேலையை காட்டுவதாகட்டும்

எத்தனை நடந்தாலும் எதுவும் தெரியாத அந்தப் பையன்களின் அப்பாவி தாயாகட்டும்

இறுதியில் லாபதிற்காக ஒரு தேர்ந்த முதலாளி என்ன செய்வானோ அதை செய்து விஷயத்தை முடித்துவைத்ததாகட்டும்...

உண்மையாக சினிமா ரசிகர்கள் தமிழ்ச் சினிமா மேலும் மேன்மையுற வேண்டும் என்று உண்மையாக நம்பும் ரசனை மிக்கவர்கள்  மணிகண்டன்களை உயர்த்த வேண்டும்... 

இதோ... இதோ.... தமிழில் ஒரு ஈரானிய சினிமா....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

சுந்தர் பிச்சை.......


  1. Image result for sundar pichai

  2. மைக்ரோசாஃப்டின் தலைவராக சத்ய நாராயண நாதெள்ள வந்த போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,,,

ஆனால் தற்போது சுந்தர் பிச்சை கூகிளின் தலைராக வரும் போது அது இரட்டிப்பு மகிழ்ச்சியாகிறது,,

அது வேறு ஒன்றுமில்லை... தமிழர் என்பதால்.....

நான் மொழிப்பித்தனல்லன்...

இருப்பினும் ,,,,,

தனி மகிழ்ச்சி,,,,

வாழ்க சுந்தர்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள்- மதுவிலக்கு- ராஜாஜி

புரட்சியும் போராட்டக்களமும் தமிழக சூழலில் கேலிப் பொருளாகத்தான் இருக்கிறது... இருப்பினும் நாம் அவ்வப்போது சில உண்மையான மகாத்மாக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... நம் கண் முன் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்..... அப்துல்கலாம் மறைவை ஒட்டி  மிக வேதனையான தருணம் சசிபெருமாள் என்கிற காந்தியவாதியின் மறைவு...

வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம்...

கடையடைப்பு செய்யச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லை....ஆனால் பெரும்பான்மை கடைகள் மூடப்பட்டிருந்தன.....மக்கள் நடமாட்டம் நகரில் காணப் படவில்லை....ஒரு “பந்தைப்“ போல தெருக்கள் காட்சியளித்தது இன்று....

படித்தவர்கள் மட்டுமல்ல பாமரர்களும்கூட உண்மையில் வருந்திய ஒரே இழப்பு....

ஆட்டோ ஓட்டுனர்கள, கூலித் தொழிலாளிகள் முதல் மாணவர்கள் அரசு தனியார் ஊழியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாக எந்த அரசும் கேட்டுக் கொள்ளாமல்  அஞ்சலிக் கூட்டம்  செலுத்துகிறார்கள்... போஸ்டர் ஒட்டுகிறார்கள் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள்...

ஆக மொத்தம் மக்கள் ஒரு தன்னெழுச்சியாக நாடெங்கும் திரண்டார்கள்..
இந்த மகா மனிதனுக்கு... 

வரலாற்றில் மகாத்மா காந்திக்குப் பிறகு உண்மையில் மக்கள் அஞ்சலி நடந்தது இன்றுதான்...
Image result for abdul kalam stills

அப்துல் கலாம்.... வாழ்க நீ எம்மான்....
என்றும் உன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்....