திங்கள், 29 மே, 2017

ரஜினி அரசியல் ....

ரஜினியை பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் கேட்டு விட்டார்கள் .. எல்லோரும் எழுதி விட்ட பிறகு நான் சொல்ல விரும்புவது இதுதான்..
Image result for rajini stills


 ரஜினி அரசியலுக்கு வருவாரா?  அல்லது  வெறும் ஸ்டண்ட்டா …?
1   (1) போர் வரும்போது என்றது..
 (2) ஸ்டாலின் இருக்கும்போது இன்னபிற அரசியல் தலைவர் இருக்கும்போது சிஸ்டம் சரியில்லை என்றது…
3  (3)   நான் நல்லா இருக்கேன் என் ரசிகர்  நல்லா  இருக்கணும் என்றது…
4      (4)   நான் பச்சை தமிழன் என்றது …

ஆகியவை  ரஜினி அரசியலுக்கு வருகிறார்  என்பதையே காட்டுகிறது…. 

அவர் போணி ஆவாரா என்பது அடுத்த விஷயம்… ஆனால் பணம் சம்பாதிக்க நினைக்கிறவர்கள் என்னுடன் வரவேண்டாம் என்பது நல்ல நகைச் சுவை….. ரஜினியின் ரசிகர்கள் என்ன மஹாத்மா காந்தியா..? விவேகானந்தரா? பதவி அதிகாரம் பணம் சம்பாதிக்க நினைக்கும் வேலையற்றோர்  சாதாரண உதிரி பாட்டாளிகள் மிக அதிகம்…. அவர்கள் வருவதே பணம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றை அனுபவிக்கவே…. அப்படி இருக்கும்போது எதை வைத்து ரஜினி அப்படி கூறுகிறார் என்பது தெரியவில்லை …மேலும் “என் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டாமா…”  என்பதும் பெரும் முரண்பாடு…. ஆக ஆரம்பமே பெரும் முரணாக தொடங்குகிறது ரஜினியின் அரசியல் பயணம்…..



செவ்வாய், 23 மே, 2017

ராேஜர் மூர்......

ரோஜர் மூர் .....என் கல்லூரி காலத்து நாயகன்..


என்னைப் பொருத்தவரை ஷான் கானரி ப்யிர்ஸ் பிரான்சன் டேனியல் க்ரைக் என எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எனக்கு அன்னார்தான்எம்ஜியார்....

கம்பீரம்..மிடுக்கு...ரோஜர்தான்... தற்போதுபாண்ட் படங்கள் எதைப் பார்த்தாலும் வேடிக்கையாக இருந்தாலும்... ரோஜர் கம்பீரம் "மறக்க மனம்கூடுதில்லையே......"

அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 9 மே, 2017

நீட் தேர்வு - சில பொய்களும் உண்மைகளும் ....

நீட் (NEET) தேர்வும் தமிழகமும் என்கிற விவாதம் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்றது.  உண்மையில் அற்புதமான நிகழ்ச்சி .. அறிவார்ந்த விவாதம் .. குறிப்பாக நீட் ஆதரவாக பேசிய ஒரு கல்வியாளர் பெயர் தெரியவில்லை… மிகவும் தெளிவாக பொறுமையாக பதிலளித்தார்…

நீட் எதிர்ப்பாளர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு இவைதான்
1.    தமிழக பாடத்திட்டம் CBSE விட குறைவானது
2.   தீடிரென்று தேர்வு என்றால் எப்படி எதிர்கொள்வது
3.   CBSE சமமான தேர்வை எப்படி கிராமிய மாணவர்கள் எதிர்கொள்வார்கள்
4.   இது வடவர்கள் பார்ப்பனர்கள் அரசு கல்லூரியில் நுழைய ஒரு யுக்தி
5.   நுழைவு தேர்வே மேல் சாதியினர் சதி

இது அத்தனையும் தவறானவை என்று அவர் நேற்று நிரூபித்தார்

முதல் கேள்வி நம் மாணவர்கள் குறைவானவர்கள் என்பதே, நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதை போன்றது….. நீதிபதி கிருபாகரன் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இப்படி சொல்வதே தமிழக மாணவர்களை கீழ்மை படுத்துவதை போல என்கிறார்…

இது திடீரென்று வந்தது கிடையாது.. 2010 ஆண்டிலிருந்து வந்ததை சிலர் வழக்கு போட்டு நிறுத்தியிருந்தார்கள்.. மேலும் சில மாதங்கள் முன்னர் வந்த கல்வி துறை தலைவர் நட்டா, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டு என்றே பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்னார்…

CBSE நிகரானது என்பது உண்மை இல்லை மாறாக நம் பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை தானே

எப்போதும் எதை செய்தாலும் வடவர் பார்ப்பனர் சதி என்பது சௌகரியமானது… ஆனால் உண்மையில் தமிழக அரசு கல்லூரியில், ALL INDIA 15% போக 85 சதம் நமக்குள்ளது… தான் அதை யாரும் பறிக்க முடியாது…. மேலும் அப்படி சுட் ஆப் குறைவானாலும், அதற்கு தக்கவாறு நாம் PASSING PERCENTAGE மாற்றிக்கொள்ள முடியும் என்றபொது,  இந்த குற்றச்சட்டு எதனை பெரிய பொய் என்பது விளங்கும்..

காமராஜ் சொன்னது, பெரியார் சொன்னது, மார்ஸ் சொன்னது அத்தனையும் வெறும் வறட்டு சூத்திரமல்ல… காலத்திற்கு ஏற்ற மாறிவரும் விஷயம் என்று வசனம் பேசிவிட்டு, இது மட்டும் மாறாது… என்றால் சிரிப்பதை தவிர என்ன செய்வது…. உண்மையில் இதற்கு பின்னல் கல்வி கொள்ளையர்கள் உள்ளனர் என்பதே நிதர்சனம்..

உண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ MINIMUM CUT OFF மதிப்பெண் 97%வும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் MINIMUM CUT OFF மதிப்பெண் 98.5% ஆகவும் பொதுப்பிரிவு 99 ஆகவும் சில வருடம் முன்பே சென்று விட்டது (இந்த பிரிவு மாணவர்களிடம் வித்தியாயாசமே இல்லை) அப்படி இருக்க 60 சதம் என்று எப்படி பேச முடியும்

அதிலும் மேலாக அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 30000 இடத்திற்கு போட்டி போட்ட கிராமிய மாணவர்கள் வெறும் 297 பேர் மட்டுமே …

அதுமட்டுமில்லாது 50 மார்க்கும் 60 மார்க்கும் வாங்கும் ஒரு பணக்கார மேல் சாதி மாணவன் ஒரு கோடி கொடுத்தால், சீட் அவர் வீட்டை தேடி வரும் எதை நாமே அன்றாடம் பார்க்கிறோம்… அப்படி படித்த ஒரு மேல் சாதி மாணவன் வைத்தியம் பார்க்கும் லக்ஷணம் ஒரு புறம் இருக்கட்டும் அவன் எத்தனை CONSULTATION FEES வாங்குவான் வெறும் 100/- ரூபாயா அல்லது 1000/- ரூபாயா..?

இந்த பணம் வாங்கி படிக்கும் முறையை குறைத்து, நீட் எழுதி தகுதி பெற்றால்தான் உள்ளே செல்ல முடியும் என்பது சரிதானே

11 வகுப்பு பாடம் படிக்காமல் நேராக 12 வகுப்பு சொல்லித்தரும் நாமக்கல் போன்று பிராய்லர் கல்வி கூடத்தை குறைந்த பட்சம் நீட் மாற்றும் 

புதன், 3 மே, 2017

மலரும் தாமரை ...?


அதிமுக வில் நடக்கும் கூத்தை பார்த்தால், CHARISMATIC தலைவர் இல்லாத வெறும் தனி நபர் கவர்ச்சியை மட்டும் நம்பி உள்ள அரசியல்   எந்த லக்ஷணத்தில் இருக்கும் என்பது தெரிகிறது

நீட் தேர்வு நிலைப்பாடின்மை.... மணல் கொள்ளை..... டாஸ்மாக் பிரச்சனை....... பஞ்சாயத்து அப்ரூவ்ட் நிலங்கள் பதிவு செய்வதில் தமிழக அரசு முறை படுத்தாததால் நீதி மன்ற தடை நீடிப்பு இதனால் சாதாரண மக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் திண்டாடுவது... RERA சட்டம் அமுலுக்கு வந்தாலும் அதற்கான ஆணையம் தமிழகத்தில் மட்டும் அமைக்காத அவலம் ... இதனால் மக்கள் படும் அவதி....

இவர்கள் இரு அணிகள் பஞ்சாயத்துக்கே பெரும் நேரம் செலவிட படுவதால் ஒரு குழப்பமான நிலையே திகழ்கிறது ஒட்டு மொத்தமாக நாம் இதற்கு பிஜேபியை குறை குறை முடியாது ...

தற்போது தி மு க மட்டுமே ஸ்டாலின் தலைமையில் நிமிர்ந்து நிற்கிறது... அடுத்ததாக உள்ள கட்சிகள் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது..... விஜயகாந்த் தலைமை எந்த முன்னேற்றமும் காட்டவில்லை..... ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே...... வைகோ ஒரு வேடிக்கையாக  முடங்கிப்போனது...... கம்யூனிஸ்ட் அடுத்த ஜென்மத்தில்தான் தலை தூக்குவார்கள்......    

 ஆக  பிஜேபி என்னை பொறுத்தவரை தமிழகத்தில் காத்திருக்கும் ஒரு சக்தியாகத்தான் பார்க்க முடிகிறது ..... தமிழகத்தில் பிஜேபி வர முடியாது என்று கூறுபவர்கள் தற்போது புதிய தலை முறை இளைஞர்களை கணக்கில் கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றே தோன்றுகிறது  .... 60களில் தி மு க அப்படித்தானே இருந்தது   .. அரசியலில் எதுவும்  நடக்கலாம்...  அதனால் தான் நாளை தமிழகத்தில் பெரிய சக்தியாக வர வாய்ப்புண்டு என கருதுகிறேன் ..

திங்கள், 1 மே, 2017

மாற்றான் தோட்டத்து மல்லிகை....

இந்த படத்தில் முதல் பாகம் வந்த பொது நான் பார்க்கவே இல்லை... ''அட போயா..... இந்த காலத்துல நல்ல சமூக படம் எதார்த்த படம் குடுக்காம சில தெலுங்கு காரங்க நம்ம தமிழ் நடிகரை வெச்சு என்னமோ பேண்டஸி பண்றங்க ..'' என்று என் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு  படம் வந்து பல நாட்களை பார்க்காமல் இருந்தேன்.... ஆனால் ஆனால் பார்த்தபிறகு தான் நான் தவறு செய்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன் .....
Image result for BAAHUBALI 2 STILLS

நிச்சயமாக ராஜ் மௌலி வித்தியாசமான படைப்பாளி தான் சந்தேகமே இல்லை...... தெலுங்கர்கள் என்று வேண்டுமானாலும் நாம் வெற்று வெறுப்பு காட்டலாம் ஆனால் இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கவே செய்கிறது