புதன், 28 ஆகஸ்ட், 2013

சட்டத்தின் முன்......?

ஆசாராம் பாபு என்கிற சன்யாசி அல்லது godman பற்றிய செய்திகள் தெரியுமா...?
ராஜஸ்தானில் உள்ள தன்னுடைய ஆஸ்ரமத்தில் அருள்பாலிக்கும் ஆள்தான் ஆசாராம்... ரொம்ப ஆசாராமான ஆள் போலும்... அவர் மீது 15 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.. அதுவும் டெல்லியில் வந்து புகார் கொடுத்துள்ளார். ஏன் அப்படி..? அந்த ஆள் மிகவும் அரசியல் செல்வாக்கு உடையவராம். அதனால்.

நேற்று நடந்து timesnow விவாதத்தில் பங்கேற்ற மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த  பிஜேபி எம்எல்ஏ ஆசாராம் ஒரு சாமியார். அவர் காங்கிரஸ்சை அடிக்கடி விமர்சித்தார். அதனால் இது ஒரு அரசியல் காழ்பு காரணமானது என்றவரை அர்னாப் தன் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கினார். அந்த ஆள் நிகழ்ச்சியை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டார்.. காங்கிரசை கேட்டால் பிஜேபி மீது புகார் சொல்கிறார்கள்.. பிஜேபியை கேட்டால் காங்கிரஸ் மீது புகார் சொல்கிறார். ஒரு வழியாக  FIR பதியப் பட்டு அவரிடம் விளக்கம்(?) கேட்கப் பட்டிருக்கிறது.. அந்த (ஆ)சாமியும் நான்கு நாட்களுக்குப் பிறகு விளக்கம் சொல்வாராம்...  

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நம்புவோம்...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மிருகங்கள்

மும்பையில் ஒரு பெண் நிருபருக்கு நேர்ந்த கொடுமை, நம் நாட்டின் ஒட்டு மொத்த மானமும் பறி போகச் செய்து விட்டது.   பாலியல் வன் கொடுமை என்பது என்னவென்றால் அது ஒட்டு மொத்த மனித இனத்தின் மேல் தொடுக்கப் படும் கொலை பாதக செயல். சுருக்கமாக


என்றுதான் சொல்ல வேண்டும்.. பெண் என்று நாமே ஒரு வட்டத்துக்குள் அடைப்பது மிகப் பெரிய அவலம் என்றே கூற வேண்டும்.  இதனால் மனித இனம் மேலே உயர தடுக்கப் படும் தீவிரவாதச் செயல்.

இதை வேரோடும் வேரடி மண்ணோடும் களைய என்ன செய்யப் போகிறோம்?

புதன், 14 ஆகஸ்ட், 2013

தலைவா.....

சமீப்த்தில் தலைவா படத்தைப் பற்றி செய்திகள் இணையத்தில் ஏராளாமாக உலவி வருகின்றன.... அந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டும் இன்னமும் வெளியாகவில்லை

அதன் காரணங்கள் பற்றி ஏராளமான செய்திகள் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் வந்தாலும்  இன்சூரன்ஸ் சங்கத் தோழர் நடத்தும் இணைய பக்கம் பார்க்க நேர்ந்தது அதன் முகவரி http://ramaniecuvellore.blogspot.in/2013/08/blog-post_13.html அதில் ஒரு போஸ்டர் அகில இந்திய தலைமை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டதை தோழர் போட்டிருந்தார்.. அந்தப் படம் என்ன பிரச்சனையில் உள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக போஸ்டர்  சொல்லிவிட்டது.