புதன், 29 நவம்பர், 2017

அன்பு நடமாடும் கலைக்கூடம்...

கந்து வட்டிக்கொடுமை சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை..

 சாதாரண மனிதர்களுக்கு அவசர தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது ஆயிரம் நிபந்தனைகள் போடுவார்கள்.  அதனால் அவர்களால் வங்கிகளை அணுக முடிவதில்லை. சினிமா போன்ற கானல் நீர் துறைக்கும் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை ..

 அதே சமயம் சினிமா பிரபலங்கள் கமல்கள்  முதல் கண்களில் ஆயிரம் கனவுகளுடன் வரும் கடைக்கோடி படைப்பாளியும் தம்மை  நிலை நாட்டிக்கொள்ள இப்படித்தான் கந்தில் மாட்டி தவிக்கிறார்கள்..  கமல் போன்றோர் தன் மார்க்கெட மதிப்பால்  தப்பிவிடுகிறார்... ஆனால் சாதாரணமாக எங்கோ தமிழகத்தின் மூலையிலிருந்து எந்த பின்புலமின்றி கனவுகளுடன் வரும் இளைஞனின் நிலை அவன் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாது.... புதியவனான அவனை நம்பி பெரிய தயாரிப்பாளரும் முதலீடு செய்ய மாட்டார்... பிறகு அவன் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறான்...

  இந்த இடத்தில் நாம் மெகா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஒரு படம் தயாரிக்க 2 கோடி என்றால் இவர்கள் சம்பளம் 50 கோடி என்றாகும் போது ஒரு படம் எடுப்பதே கேலிக்கூத்தாகி விடுகிறது (இதில் 50 கோடியை தாண்டி சம்பளம் வாங்குபவரை பற்றி கேட்கவே வேண்டாம்  ) இறுதியில் இவர்கள் நாயகர்களாக மக்கள் மனதில் வலம் வர இவரை வைத்து சூதாடிய அல்லது தயாரித்தவர்கள் கதி அதோ கதியாகிறது ...

 ஆக  இது ஒரு விஷச் சக்கரம் போல ...

இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா  ..

வியாழன், 23 நவம்பர், 2017

கடவுள் உண்டா அல்லது இல்லையா…?

எனது 30 வயதில் நாத்திகனாகத்தான் இருந்தேன்..  இறை என்பதே ஒரு ஏமாற்று வேலை என்றுதான் நினைத்திருந்தேன்..  20 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரேயடியாக சொல்ல முடியுமா என்று  தோன்றுகிறது.. சில விஷயங்களுக்கு பதில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம் 

எங்கோ படித்த ஞாபகம்.. கடவுள் உண்டு என்பதற்கும் ஆதாரம் இல்லை - இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று…

அது ஒரு புறம் இருக்கட்டும்…. ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சீன படைப்பாளி ஆங்கில திரைப்படத்தில் - நமது ஆன்மாவை தொடும் அதிசயத்தை  ஒரு காட்சியில் காட்டுகிறார் 

… உங்கள் அனைவருக்கும் தெரிந்த திரைப்படம்தான்…  பலர் இதற்கு விமர்சனம் எழுதி அலுத்திருக்கலாம் 

 .....“THE LIFE OF PI” என்கிற ஆங்கிலப் படம்…   MOVIES NOW, HBO, STAR MOVIES போன்ற சாட்டிலைட் டிவியில் எத்தனை முறைகள் போட்டாலும் பார்க்கத் தோன்றுகிறது......மக்களால் மீண்டும் மீண்டும் விரும்பப்படுகிறது ... ஒரு சீனர் இயக்கிய  ஆங்கிலப் படம்..    .நடித்தவர்கள் பெரும்பான்மை இந்திய நடிகர்கள் என்பது அதன் தனிச் சிறப்பில் ஒன்று .. தொடங்குவதும் நமது தமிழ்க்  கலாச்சாரத்திலிருந்து என்பது எத்தனை அழகு.... அந்த படமும் அதன் கதையும் அனைவர்க்கும் தெரிந்தது தான் ..    விபத்து நடந்த கப்பலிருந்து தப்பி ஒரு படகில் , பயங்கரமான வங்கப்புலியுடன் 227 நாட்கள் பசிபிக் கடலில் பயணித்து கரையடைவதுதான் கதை .. மருத்துவ மனையில் படுத்திருக்கும் PISCINE PATEL என்கிற பையை (கதாநாயகன்) வந்து பார்க்கும் அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்களை போல் அந்த கதையை நம்மாலும் நம்ப முடியவில்லை ..  "நம்பும்படியாக சொல்லுங்கள்..."' என்று அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்கள் கேட்கிறார்கள் .. அவர்களுக்காக மிருகங்களுக்கு பதிலாக மனிதர்கள் என்று அதே கதையை மாற்றி  சொல்கிறான் பை .. 

இறுதி காட்சியில் அவனுடைய   கதையை கேட்க வந்த அந்த நாத்திகரான வெள்ளைக்கார எழுத்தாளரிடம் பை சொல்கிறான் "நான் உங்களிடம் இரண்டு கதை சொன்னேன் அதில் எதை தேர்வு செய்கிறீர்கள்...'" என்கிறான் ..அவர் அந்த வங்கப்புலியுடன் படகில் 227 நாட்கள் பயணித்த இந்த "பை'" யின் கதை என்கிறார்... அதற்கு "பை'" அப்போது "அந்த கதை கடவுளுக்கு நெருக்கமானது..." என்கிறான்..

 அந்த நாத்திக எழுத்தாளர் சற்று கண்ணை மூடி யோசிக்கிறார் .  அந்தக் காட்சி ...  அந்தக் காட்சி ....LOVELY  என்று கத்த தோன்றுகிறது ....அந்த சில நிமிடம் என்  உடலில் பல வோல்ட் மின்சாரம் பாய்வதாக உணர்தேன்... கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் நம்மால் நம்ம முடியாத விஷயங்கள் நடக்கும் பொது தெய்வாதீனம் என்றுதான் கடக்க நேரிடுகிறது  ..

அந்த உணர்வை ஒரு படத்தில் ஒரு காட்சியில் உணர்த்திய  அந்த ஆங் லீ என்கிற சீன  இயக்குனரை வணங்கதோன்றுகிறது..

திங்கள், 13 நவம்பர், 2017

அறத்தாறு இதுவென வேண்டா ...அறம் திரைப்படம் ...

வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...

 பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....

 லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....


Image result for ARAM STILLS




இருந்தாலும் இந்தனை இல்லைகளை  தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...

வெல்லட்டும் உமது பணி ...