ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

எது உண்மையான இடம்...?

15 ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த பாலியில் புகார்.. 
ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டு வேறு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது...


தண்டனையை அறிவிக்க நீதிபதி சிறைக்கே செல்லவேண்டிய நிலை..
எத்தனை பேர் பலி எத்தனை வாகனம் தீக்கிரை எத்தனை நாசம்

எல்லாம் மனிதக் கடவுளுக்காக..  தேரா சச்சா சௌதா...  உண்மையான இடமாம்..    என்ன உண்மையோ.....

தமிழகத்தில் பிரேமானாந்தா கைது செய்யப்பட்டுள்ளார்...

நித்தியானந்தா புகார் போது அவரது ஆசிரமமே அடித்து நொறுக்கப்பட்டது.

அவ்வளவு ஏன் ஒரு தீபாவளியின் போது சங்கராச்சாரியே கைது செய்யப் பட்டார்..

இங்கே எந்த கலவரமும் இல்லை...  காரணம் பகுத்தறிவு பேசியதால்.. 

அதை நினைத்துப் பெருமையடைவோம்.. பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்...

வட இந்தியா எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது...