வியாழன், 25 ஜனவரி, 2018

எது நடந்ததோ....

 ஞாநி மறைவதற்கு முன் YOUTUBEல் ஒரு பதிவேற்றம் செய்திருந்தார் .. அதை பார்க்கும்போது பளிச்சென்று ஒரு விஷயம் சொல்லிருந்தார்.. அது மிக மிக முக்கியமானது என்றே நினைக்கின்றேன்..    

தமிழகத்தில் காலூன்ற  ஹிந்து ஓட்டுக்களை POLARIZE  செய்வது மிக முக்கியம் என்று பாஜக கருதுகிறது ....  அதற்கு  ஆண்டாள் பிரச்சனை மாட்டியது ...  அதை சரியாக பயன் படுத்தினார்கள்  ...

தற்போது ஜெயேந்திரர் பிரச்சனை வேறு...  அதையும் அவர்கள் பயன் படுத்தலாம் என்றே நடக்கும் நிகழ்வுகள் தோன்றுகிறது ...  பொதுவாக சங்கர மடம் மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகள் கூட   தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னிரிமை தருவதில்லை,  மாறாக தங்கள் மதமே அவர்களுக்கு பிரதானம் என்று கடந்து போவதே தற்போதைய சூழலில் சரி என்று படுகிறது..

   இந்து மதத்திற்கு எதிரான விஷயம் நடக்கிறது என்று சராசரி மனிதனுக்குள் தோன்றினாலே போதும், ''அவர்கள்'' நினைக்கும் அஜெண்டா நிறைவேறிவிடும் ..இது புரிகின்றவர்களுக்கு புரியும் .. .. எது    நடக்கவிருக்கிறதோ அது நன்றாக நடக்காமல் தடுக்கும்  ..

திங்கள், 15 ஜனவரி, 2018

ஞாநி.....Image result for GNANI STILLS


ஞாநி.. பல ஆண்டுகளாக ஞாநியின் கட்டுரைகள் வாசித்து வந்தாலும் இலங்கை தமிழ் போராளிகளை ஒட்டி அவர் எழுதிய ஒரு நாவல் முக்கியமானது .. அதனால் அவரை நேரில் பார்க்க ஆசை பட்டேன் .. அதற்கு ஒரு சந்தர்ப்பம் எனது நாவல் மூலம் வந்தது ..

எனது முதல் நாவலான ''நவீன கற்காலம் புத்தகத்திற்கு அவரின் அணிந்துரையை வேண்டி அவரை சந்தித்தித்தேன் .2003 ஆண்டில் அந்த நாவல் வெளி வந்தது அதற்கு வெளியீட்டுவிழா வைக்கச்சொன்னார் அதை நான் நிறைவேற்ற வில்லை .. ஒரு முறை புத்தக கண்காட்சியில் பழ நெடுமாறனிடம் என்னை அறிமுக படுத்தி வைத்தார் ''சார்.. நான் இப்பதான் எழுதிட்டு வர்றேன் ''  என்று நெளிந்தேன் ..

கடந்த சில காலம் அவர் நோயுற்ற பிறகு பார்க்க .. முடியவில்லை இடது சாரி விஷயங்கள் போன்று எத்தனையோ விஷயங்கள் பரிமாறிக்கொண்டோம் ..  பெரிய மேதாவி அவர்... ஆனால் என்னை போன்றவர்களிடமும் சரிசமமாக பேசுவார்... அத்தனை எளிமை     .. DOWN TO EARTH PERSONALITY... 

அன்னாருக்கு அஞ்சலி 

சனி, 13 ஜனவரி, 2018

ஆண்டாள் PART II தொடர்ச்சி...

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள்   கட்டுரையை 20 நிமிடத்தில் தோன்றியதை மட்டும் எழுதினேன்.. ஆராய்ந்து எழுதவில்லை.. நாட்டு நடப்பை பார்த்தவுடன் ஏற்பட்ட மனஎழுச்சி..

எனது கட்டுரைகள் பெரும்பாலும் ஜெயமோகன் அவர்களின் பார்வையை ஒட்டி இருக்கும் இது முன்னேற்பாடோடு நடப்பது இல்லை.. ஆனால் நான் அவர் கட்டுரையை படிக்கும் போது பெரும்பாலும் ஒத்து இருப்பதாய் கண்டு ஆச்சர்யமடைந்தேன்.. ஒரு சிலருக்கு ஜெயமோகன் அலர்ஜி இருக்கும் அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது

ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்கிற பதமே கண்ணதாசனிடம் நான் எடுத்தாண்டது நான் தமிழ் புலவர் அல்லன் . அவரே அந்த கட்டுரைக்கு அவர் வைத்த பெயர் ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் தற்போது கூகிளிட்டு பார்த்த போது இப்படி சொல்கிறார்

‘’ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.’’

நான் வாய் தவறி சொல்ல வில்லை கண்ணதாசன் வரிகள் நீங்கள் கண்ணதாசனை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் முடிவு
(விநாயகம்)

நான் குடந்தை அருகே சேர்ந்த நாச்சியார்கோயில் என்கிற ஊரை சேர்ந்தவன்.. என் சிறுவயதில் எங்கள் ஊர் (கல்கருடன்) ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு மாலை தோறும் செல்வேன்…  கோயிலின் சுவர்களில் எழுதியிருக்கும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்னவென்றே அறியாமல் படித்து கொண்டிருப்பேன்… எங்கள் கோயில் திருவிழாவில் ஆண்டாள் பாசுரம் நெற்று செய்து வெள்ளி காசு வாங்கியது மிக பாக்கியமாக கருதுகிறேன்…  ஆண்டாள் தமிழை என் போன்ற ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் என்று நான் சொல்ல வில்லை என்போன்ற பெருங்கூட்டத்திற்கு என்று திருத்தி சொல்கிறேன் காரணம் என்னை போன்ற சாதாரணர்கள் அதிகம்(விநாயகம்)

உங்கள் பின்னூட்டத்தில் சொலிருக்கும் இன்ன பிற கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் அவைகள் நான் கொண்ட கருத்தை மாற்றவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

நான் சொன்ன பேரரசுகள் தோன்றிய பிறகுதான் தேவதாசி முறை தோன்றி இருக்க வேண்டும் என்பது மார்க்சிய நோக்கு.. அதைத்தான் நான் சுட்டியிருக்கிறேன்..

வீர நாத்திகம் என்று சொல்வதை பற்றி சில விளக்கம் சொல்ல விரும்புகிறேன்..
இணையத்தில் ஒரு சில வீர நாத்திகர்களை பார்க்கிறேன்.. அவர்கள் பெரும்பாலும் ராஜராஜசோழன் காலத்தை பற்றி குறிப்பிட்டு பேசும் போது பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்தது சாதி கொடுமைகள் என்று கூக்குரலிடுகிறார்கள் அதை பற்றி நான் சொல்வதை விட ஜெயமோகன் கருத்தே எனது கருதும்… அவற்றை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்… ஆனால் நான் அவற்றை ஏற்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. ஆக இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு… வரலாற்று ரீதியில் நடந்த ஒரு நிகழ்வு ..அப்படி இருக்கும் போது தங்கள் ஒற்றை அடிப்படை அரசியலுக்காக அனைத்தும் பார்ப்பன சதி என்பதை ஏற்க முடியாது.. …மேலும் அந்த ஒற்றை கருத்தாக்க அரசியலை சில வீர நாத்திகர்கள் செய்வதை நான் மறுக்கிறேன் அதற்கும் ஏராளமான ஜெயமோகன் கட்டுரையை என்னால் மேற்கோள் காட்டமுடியும்..

ஆகவே எனது கட்டுரையை தனித்தனியாக படிப்பதை காட்டிலும் தொடர்ச்சியாக படித்தால் நான் சொல்ல வருவது விளங்கும் என நினைக்கிறன் நன்றி


வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் ...

இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு  என்பதை ஏற்காமல்    ஒற்றை குடையின் கீழ் அனைத்தும் இந்து  என்பதை,  குறிப்பாக H ராஜா உள்ளிட்ட மதவாதிகளும் வீர நாத்திகம் பேசுபவர்களும்   பேசுகிறார்கள் ..இது ஆச்சர்யகரமான ஒற்றுமை ...' இரு தரப்பினரும்  ஒரு வேளை  புரிந்து கொண்டாலும்  , அதை பற்றி கவலை படவில்லை .. வீர நாத்திகம் பேசும் சில குழுக்கள் ''பார்த்தீர்களா சோழ மன்னர் ஆட்சியில் சாதிய  கொடுமைகளை..'' என்று கூக்குரலிடுகிறார்கள்..  நேர் எதிர் ராஜா முகாமோ அனைத்தும் இந்து என்கிறது .. வரலாற்று பாதையை மறுக்கும் பார்வையாகவே பார்க்கிறேன் ...

இந்து மதம்  என்பதே தமிழ்நாட்டில் ஏழு வகையாக இருந்ததாக வரலாறு சொல்கிறது

1.சைவம்..
2.வைணவம்..
3.கெளமாரம்..
4.காணாபத்தியம்..
5.செளரம்..
6.சாக்தம்..
7.ஸ்மார்த்தம்..

சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன..

ஆகவே தமிழும் பக்தியும் இங்கே ஒன்றுடன் ஒன்று பிணைத்து வந்திருக்கிறது   .   ஆண்டாள் பெரியாழ்வார் போன்ற 12 ஆழ்வார்கள் முதல் 63 நாயன்மார்கள் வரை தமிழ் பக்தி இலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் .. அதனால் தமிழுக்கு அவர்கள் அளித்த கொடை மிக அதிகம் ..பக்தி  இலக்கியத்தை  தமிழிடமிருந்து பிரிப்பது , உயிரை பிரிந்த உடல் போலவே தோன்றுகிறது

வரலாற்றை நாம் பார்க்கின் பேரரசுகள் தோன்றியவுடன் அவைகள் மாறுவதை நாம் காணலாம் 

தேவதாசி முறை என்பதே பேரரசுகள் உருவான பிறகு     வந்த ஒன்று .. அதற்கு முன்பு சாத்தியமில்லை  .. தமிழகத்தின் ஆகச்சிறப்பு வாய்ந்த பேரரசு என்பதே சோழ பேரரசுதான் அதுவே ஆண்டாளுக்கு பிந்தியது அப்படி இருக்கும் சூழலில்  அதற்கு முன்பே  தேவதாசி என்கிற பதம் எப்படி சரியாகும்  .. அதாவது அக்பர்காலத்தில் ரயில் வண்டி ஓடியது என்று எழுதுவதற்கு சமம் இது 

இந்த குழப்பத்திற்காகவே  ஆண்டாள் ஒரு கற்பனை பாத்திரப்படைப்பு என்கிறார் ராஜாஜி ..   பிஜேபி குறிப்பாக H ராஜா தலைமையில் இதை ஒரு அரசியல் ஆதாயம் அடைய முயலுமா என்று பார்க்கிறார்கள்  . வைரமுத்துவோ தனக்கு ஞானபீடம் கைநழுவி போகுமோ என்கிற அய்யப்பாடுடன் இருப்பதாக இணையத்தில் சந்தி சிரிக்கிறது ..

அய்யா.. உங்கள் சண்டையில் எங்கள் ஆண்டாளை, எங்கள்தமிழை, தமிழை ஆண்டவளை விட்டுவிடுங்கள் என்று இறைஞ்சுவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது 

சனி, 6 ஜனவரி, 2018

போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை ...

பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் வேலை நிறுத்தத்தை தடை செய்துள்ளது..  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ESSENTIAL SERVICEல்  வருவதால் அவர்களுக்கு அப்படி செய்ய சட்ட அனுமதி  கிடையாது என்கிறது நீதிமன்றம் ..

நேற்றைய புதிய தலைமுறை விவாதத்தில் பங்கேற்ற அதிமுக பெண்மணி அட்டவணை 5 ன் படி அவர்கள் இவ்வாறு செய்வதே சட்ட விரோதம் என்றார் ...

எல்லாம் சரிதான்... ஆனால் சில அடிப்படையாக சந்தேகங்கள் உள்ளது அவற்றுக்கு பதில் தேவை ....

தொழிலாளர்கள் , அதுவும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் PF கிராஜுவிட்டி தொகை ரூ 5000 கோடியை பல ஆண்டுகளாக அரசு தரவில்லை அதை வேறு திட்டத்துக்கு திருப்பி விட்டார்களாம்...  இது  எந்தவகை அட்டவணையில் வரும் என்பது புரியவில்லை .....மேலும் நீதிமன்றம் அவற்றை மாதம் தவணை தொகையாக கொடுங்கள் என்கிறார்களாம் ...இவற்றை கேட்டபோது தலையே சுற்றுகிறது  (விவாதத்தில்  மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி இவ்வாறு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணத்தை பல காலமாய் பிடித்து வைத்திருப்பது கிரிமினல் குற்றம் என்றார் )

ஒரே அரசின் கீழ்  வேலை செய்யும் கார்பொரேஷன் ட்ரைவர்களுக்கு வேறு ஊதியம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வேறு ஊதியம் என்பதும் புரியவில்லை   ..     கார்பொரேஷன் ஊழியர்கள்   என்ன ஒரிசா அரசிடம் வேலை பார்ப்பவர்களா  ...?

M.G.R அரசு விழாவுக்காக ரூ700 கோடி, எம் எல் ஏ சம்பள உயர்வு பென்ஷன் உயர்வு என பல கோடிகளை காணும் போது அரசு உழைக்கும் தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதை எப்படி ஏற்றமுடியும் என்பதே புரியவில்லை ..

வெள்ளி, 5 ஜனவரி, 2018

வீசும் காற்றில் விஷம் ...

ஒரு சில நண்பர்கள் TTVன் வெற்றி  பற்றி நான் எழுதியதை கூறும்போது,   காசுக்கு ஓட்டு என்பதை குறிப்பிடவில்லை என்றார்கள் ..

கமல் ஜெயமோகன் முதல் பலரும் இதை பற்றியே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை...

 ஆனால் ஆளும் கட்சியை மீறி TTVயால் எவ்வாறு இப்படி பட்டுவாடா செய்யமுடிந்தது  என்பது ஆச்சரியம் ..  EPS-OPS முதல் மத்திய அரசு வரை எதிராக இருக்கும் சூழலில்   காவல்துறையும் உளவு துறையும் கோட்டை விடுமா என்பதும் கேள்விக்குறி .. 

அதனால்தான் நான் சென்ற முறை அப்படி எழுதினேன் ..ஆனால் பலரும் சொல்வதை வைத்து பார்க்கும்போது அனைத்து தரப்பும் காசுக்கு ஓட்டு என்கிற நிலையை எடுத்திருப்பது நிச்சயம் வீசும் காற்றில் விஷம் கலந்திருப்பதையே காட்டுகிறது ...மேலும்   TTV இப்படி செய்யமுடிந்தது நமது நிறுவனங்களின் இயலாமையை காட்டுகிறது 

மீண்டும் அனைத்தையும் மறு ஆய்வு செய்தலும் இந்த காசுக்கு ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்டவரை தான் பாயும் என நினைக்கிறேன் .. RK நகர் நமக்கு தரும் பாடம் -  திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் வீழ்ச்சி நிலையை காட்டுவதாகும்... ஒரு புதிய தலைமைக்கு மக்கள் தயாராக இருப்பதாகவும் இன்னமும் நம்புகிறேன் ..அதுதான் மக்கள் நமக்கு தரும் செய்தியாக பார்க்கிறேன் ...இந்த சமயத்தில் ரஜினியின் வரவு நிச்சயம் ஒரு மாற்றம் வரலாம்... இந்தப் பந்தயத்தில்  கமல் சற்றே பின் தங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது..


 .. அதே சமயம் ரஜினியை நான் ஆதரிக்க வில்லை என்றாலும் அவரின் பேச்சு உடல் மொழி போன்றவை வெள்ளேந்தியாய் உள்ளதாக தோன்றுகிறது ...அவர் ஆன்மிக அரசியல் என்றது அவரின் அப்பாவித்தனத்தை காட்டினாலும் அவரை பயன்படுத்து பிஜேபி முயல்வது தெளிவாக தெரிகிறது ..எவர் வலையில் வீழாமல் தனித்து இயங்கலாம் ..

இது ஒரு புறம் மறு புறம் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்ற கனவும் கை நழுவி வருவதும் ஒரு சோகமே ...