புதன், 3 மே, 2017

மலரும் தாமரை ...?


அதிமுக வில் நடக்கும் கூத்தை பார்த்தால், CHARISMATIC தலைவர் இல்லாத வெறும் தனி நபர் கவர்ச்சியை மட்டும் நம்பி உள்ள அரசியல்   எந்த லக்ஷணத்தில் இருக்கும் என்பது தெரிகிறது

நீட் தேர்வு நிலைப்பாடின்மை.... மணல் கொள்ளை..... டாஸ்மாக் பிரச்சனை....... பஞ்சாயத்து அப்ரூவ்ட் நிலங்கள் பதிவு செய்வதில் தமிழக அரசு முறை படுத்தாததால் நீதி மன்ற தடை நீடிப்பு இதனால் சாதாரண மக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் திண்டாடுவது... RERA சட்டம் அமுலுக்கு வந்தாலும் அதற்கான ஆணையம் தமிழகத்தில் மட்டும் அமைக்காத அவலம் ... இதனால் மக்கள் படும் அவதி....

இவர்கள் இரு அணிகள் பஞ்சாயத்துக்கே பெரும் நேரம் செலவிட படுவதால் ஒரு குழப்பமான நிலையே திகழ்கிறது ஒட்டு மொத்தமாக நாம் இதற்கு பிஜேபியை குறை குறை முடியாது ...

தற்போது தி மு க மட்டுமே ஸ்டாலின் தலைமையில் நிமிர்ந்து நிற்கிறது... அடுத்ததாக உள்ள கட்சிகள் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது..... விஜயகாந்த் தலைமை எந்த முன்னேற்றமும் காட்டவில்லை..... ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே...... வைகோ ஒரு வேடிக்கையாக  முடங்கிப்போனது...... கம்யூனிஸ்ட் அடுத்த ஜென்மத்தில்தான் தலை தூக்குவார்கள்......    

 ஆக  பிஜேபி என்னை பொறுத்தவரை தமிழகத்தில் காத்திருக்கும் ஒரு சக்தியாகத்தான் பார்க்க முடிகிறது ..... தமிழகத்தில் பிஜேபி வர முடியாது என்று கூறுபவர்கள் தற்போது புதிய தலை முறை இளைஞர்களை கணக்கில் கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றே தோன்றுகிறது  .... 60களில் தி மு க அப்படித்தானே இருந்தது   .. அரசியலில் எதுவும்  நடக்கலாம்...  அதனால் தான் நாளை தமிழகத்தில் பெரிய சக்தியாக வர வாய்ப்புண்டு என கருதுகிறேன் ..

கருத்துகள் இல்லை :