ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

எது உண்மையான இடம்...?

15 ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த பாலியில் புகார்.. 
ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டு வேறு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது...


தண்டனையை அறிவிக்க நீதிபதி சிறைக்கே செல்லவேண்டிய நிலை..
எத்தனை பேர் பலி எத்தனை வாகனம் தீக்கிரை எத்தனை நாசம்

எல்லாம் மனிதக் கடவுளுக்காக..  தேரா சச்சா சௌதா...  உண்மையான இடமாம்..    என்ன உண்மையோ.....

தமிழகத்தில் பிரேமானாந்தா கைது செய்யப்பட்டுள்ளார்...

நித்தியானந்தா புகார் போது அவரது ஆசிரமமே அடித்து நொறுக்கப்பட்டது.

அவ்வளவு ஏன் ஒரு தீபாவளியின் போது சங்கராச்சாரியே கைது செய்யப் பட்டார்..

இங்கே எந்த கலவரமும் இல்லை...  காரணம் பகுத்தறிவு பேசியதால்.. 

அதை நினைத்துப் பெருமையடைவோம்.. பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்...

வட இந்தியா எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது...




2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

சாமியாருக்காக இவ்வளவு கொடுமைகள் இங்கே இது வரை நடை பெறவில்லையே என்பதிற்காக மட்டும் திருப்தி அடைந்து கொள்ளலாம்.
//பகுத்தறிவு பேசியதால்.. அதை நினைத்துப் பெருமையடைவோம்.. பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்.//
என்பதெல்லாம் உங்க அளவுக்கதிகமான ஆசை கற்பனைகள்,அளவுக்கதிகமான fantasy மட்டுமே.
ஜெயலலிதா ஊழல் செய்த குற்றத்திற்காக அவருக்கு வழங்கபட்ட தண்டணைக்கு எதிராக மாணவிகள் பயணித்த பஸ்ஸை அதிமுகவினர் வழி மறித்து தீக்கிரையாக்கினர். இரு மாணவிகள் எரிந்து சாம்பலாகினர் பலர் காயமுற்றனர்.இங்கே தமிழகத்தில் தான் நடை பெற்றது.
ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக மண் சோறு உண்டு தங்களை வருத்திய மக்களை கொண்ட ஒரு பகுத்தறிவு.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி வேகநரி ....நீங்கள் சொல்வது பாதி அளவு சரி ஜெ காலம் என்பதே வேறு ஆனால் இங்கு இருப்பதை போல பகுத்தறிவு பேசிய மாநிலம் வேறு இல்லை என்பதும் உண்மைதானே