வியாழன், 28 பிப்ரவரி, 2019

அமைதிக்கு ஒரு வாய்ப்பு தரலாம்..

இரு நாடுகளின் இடையே போர்ப் பதட்டம் மிக மிகக் கவலையளிக்கிறது.  போர் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்தான் . ஆனால் அதற்கான விலை .?

 இந்நேரத்தில் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவோம். எல்லாவற்றுக்கும் அரசியல் காரணம் இருக்கத்தான் செய்யும்.  நமக்கு இல்லையென சொல்ல இயலுமா ?

முகமெங்கும் ரத்தம் தோய்ந்த அந்த படைவீரனை காணும் போது நெஞ்சு விம்முகிறது

. ஆனால் முதல் குரலாக ஒலித்த அந்த மனிதனுடன் கைகுலுக்குவோம்.
தீவிரவாதம் பாக் மக்களுக்கும் எதிரானது என்பதை பேச்சு வார்த்தை மூலம் உணர்த்துவோம்.

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

3 கருத்துகள் :

Unknown சொன்னது…

உங்கள் கருத்து முழுவதும் சரி என்று கூற மாட்டேன். அதற்காக் போரை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இம்ரான்கானின் நல்லெண்ண நடவடிக்கை என்று கூற மாட்டேன். அப்படியானால், நல்லெண்ண நடவடிக்கையாக
கந்தகார் நடவடிக்கையில் வெளியேறி, பாக்கிஸ்தானில் தங்கியுள்ள தீவிரவாதி மஸூத் அசாரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கலாமே !

silanerangalil sila karuththukkal சொன்னது…

கருத்துக்கு நன்றி பாலா ....இம்ரான் செய்கையை இரண்டு விதமாக பார்க்கலாம் .....முதலாவது அவர் பொதுவாகவே லிபெரல் முஸ்லீம் ...வாஹபி டைப் இல்லை... இரண்டாவது உள்ளூரில் தீவிரவாத ஆதரவு ஆட்கள் பாக் ராணுவத்தில் உண்டு... அவர்களையும் அவர் சமாளிக்க வேண்டும் ...அதை போல பலோசிஸ்தானில் இதைப்போன்ற ஆட்களையும் சமாளிக்கவேண்டும்... இத்தனையும் சமாளித்து அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்... அதற்காகவே இந்த பாராட்டு ....அவர் ஒரேயடியாய் மசூர் மேல் கை வைத்தால் முன்பு பாக் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் ...அதுதான் அவர் தயக்கத்திற்கு காரணம்

வேகநரி சொன்னது…

தீவிரவாதிகளை ஆதரித்து ஊக்குவிப்பதன் மூலம் தாங்களும் பாகிஸ்தானும் பயனடைய முடியும், இந்தியாவுக்கு நிறைய தொல்லைகள் கொடுக்கலாம் என்று ஆட்சியாளர்கள் - இம்ரான்கான் வரை நம்புகிறார்கள். இம்ரான்கானின் நடவடிக்கை உண்மையில் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக இருக்க வேண்டும்.

//போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்//
ஈழ வீர போர் ரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட போர் என்று உசுப்போத்தி போரை நாடாத்தி இலங்கையில் அழிவை சந்திக்க வைத்த வைகோ, சீமான், தமிழக அரசியல்வாதிகள் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்கின்ற கருத்து பற்றி என்ன சொல்கிறார்கள்?