புதன், 10 ஜூலை, 2013

THE OSAMA FILES

பாகிஸ்தானியர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தரமாட்டர்கள் போலிருக்கிறது.  அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்களே தவிர பிறரிடம் விட்டுத் தர மாட்டார்கள்.  எதை வைத்துச் சொல்கிறேன் என்கிறீர்களா… நேற்று நடந்த ஒரு தொலைக் காட்சி விவாதத்தைப் பார்த்துத்தான் சொல்கிறேன். TIMES NOW தொலைக்  காட்சியில் நேற்று (9.7.2013) ஒரு நிகழ்ச்சி.. அதில்  ஜி பார்த்தசாரதி முதல் மூன்று பாக்கிஸ்தானிய கர்னல்கள் வரை கலந்து கொண்டார்கள். விஷயம் இதுதான்...
ஓசாமா பின் லேடன் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். Abbottabad பகுதியில் அவர் அந்தப்  பெரிய வீட்டில் தங்கியிருந்து  அந்த வீட்டிற்கு  எந்த ஒரு வரி கட்டாமல்   வாழ்ந்திருப்பது முழுக்க முழுக்க ISI மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின்      சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்காது என்று தெளிவாக    பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட  நிபுணர் குழு 300 பக்கஅறிக்கையில்  புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.   

அதைப் பற்றி அர்னாப் அந்த மூன்று பாகிஸ்தானியரிடம் கேட்க,  அவர்களோ அந்த அறிக்கையை  தூக்கிப் போடுங்கள்.. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அதற்கு பல சால்சாப்புகளை அடுக்கிக்  கொண்டிருந்தார்கள்.  ஒரு பாகிஸ்தானி கர்னல் ”இந்தியரே இப்படித்தான்... நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள்...you are biased...“என்று அர்னாப் மீது பாய்ந்தார்..
அர்னாப் மீண்டும் மீண்டும் சொல்லிக்  கொண்டே இருந்தார்”அய்யா இது ஏதோ எனனுடைய ரிப்போர்ட் இல்லை..உங்கள் அரசாங்கம் அமைத்த குழுவின் ரிப்போர்ட்”, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்..
ம்ம்.. அந்த பாகிஸ்தானி  காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார்.. அதில் ஒரு பாகிஸ்தானியர் மைக்கை விட்டு எறிந்து விட்டு வெளிநடப்பே செய்து விட்டார்.

இப்போது  சொல்லுங்கள்.. நான் சொல்வது சரிதானே....

2 கருத்துகள் :

prasanth சொன்னது…

Please update the political issues involved in Middle east Asia by America...

silanerangalil sila karuththukkal சொன்னது…

அது பற்றி தனியாக வகுப்புதான் எடுக்க வேண்டும் .. என்னுடைய ப்ளாக்கில் மட்டும் செய்து காரிய சாத்தியமாகத் தெரியவில்லை.. மேலும் அதைப் பற்றி இருவேறு (வலது சாரி கருத்து இடது சாரி கருத்து) பார்வைகள் உள்ளன.