சனி, 19 அக்டோபர், 2013

சாமி சொன்னா சர்தான்....

உத்திர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில்  சிவன் கோவில் உள்ளது.. அதை தற்போது அகழ்வாராய்ச்சிக்காரர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம்
ஒரு சாமியார் சொன்னாராம்... அவரது கனவில்  அந்தப் பிரதேசத்தை 17ம் நூற்றாண்டில் ஆண்ட ராஜாராம் பக்ஸ் சிங் வெள்ளையர்களுக்கு பயந்து 1000 டன் தங்கத்தை அங்கே புதைத்திருப்பதாகவும் அதை தோண்டியெடுத்து இந்தியா தன்னுடைய கடனை (?) தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னாராம்..” 
உடனே மாநில மற்றும் மத்திய அரசு கூட்டாக அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்து விட்டது...  சந்தோசம்.....

நமக்குள்ள கேள்விகள்
(1) ஏன் அந்தச் சாமியாருக்கு அதே உபியில் நடந்த மதக் கலவரத்தில் பல உயிர்கள் கொல்லப் பட்டபோது     அதை தவிர்க்க கனவில் யாரும் வந்து சொல்லவில்லையா?
(2) அவருக்குப் பக்கத்து மாநிலமான உத்தரகாண்டில் பெரும் மேக வெடிப்பு நிகழ்ந்து பல்லாயிரக்கணக்கான   உயிர்கள் மாண்டு போன போது அந்த மாதிரி கனவு வரவில்லை..? அப்படி வந்திருந்து  சொல்லியிருந்தால். உயிர் தேசம் தவிர்த்திருக்கலாமே?..

இப்படிச் சொல்லிக் கொண்டே செல்லலாம்...

நேற்று(18.10.13) இரவு 10 மணிக்கு நடந்த TIMESNOW விவாதத்தில் அர்னாப்பும் அந்தக் கோர்ட்சூட் அணிந்த (அரசியல்வாதி நடிகர் பெயர் தெரியவில்லை) நபரும் சிரித்து சிரித்து பேட்டியையே நடத்த முடியாமல் சீக்கிரம் முடித்துக் கொண்டார்கள்

கருத்துகள் இல்லை :