சனி, 19 அக்டோபர், 2013

அருள்....

இன்சூரன்ஸ் அலுவலகத் தொழிற்சங்க தோழர் ராமன் அவர்கள் தன்னுடைய ப்ளாக்கில் ஒரு பதிவு வெளிட்டிருந்தார் அதற்கான சுட்டிhttp://ramaniecuvellore.blogspot.in/2013/10/blog-post_14.html 

அதைப் பார்த்ததும எனக்கு பழைய நினைவுகள் தோன்றின.. பத்து வருடங்களுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நானும் என் நண்பரும் சேர்ந்து அலுவலகம் செல்வோம்.     பழைய கேளம்பாக்கம் பஸ் நிலையத்தின் அருகில் ஒரு சாராயக்கடை இருந்தது.  அதில் பல கடவுளர்களின் படங்களை அந்தக் கடைக்காரர் வைத்திருந்தார்.. அதற்கான மரியாதைகளுடன்..ஊதுபத்தி பூ etc etc .
நான் என் நண்பரிடன் அதைக் காட்டிக் கேட்டேன். அந்தக் கடைக்காரர் என்ன வேண்டிக் கொள்வார்? என்று.. “கடவுளே எனக்கு நன்றாக வியாபாரம் ஆக வேண்டும்..” என்றுதானே.. ”ஆம் உண்மை” என்றார் என் நண்பர். அப்போது நான் கேட்டேன்.  ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்.. அந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமராக திகழும் ஒரு குடிகாரன் வீட்டில் இதே கடவுள் படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்... அந்தக் குடிகாரனின் மனைவி என்ன வேண்டிக் கொண்டிருப்பாள்
”சாமி.. என் புருசன் குடிய நிப்பாட்டனும்” என்று தானே என்றேன்... என் நண்பரும் ”அப்படித்தான்” என்றார்.
”அப்போது கடவுள் யாருக்கு செவி சாய்பார்...?
அந்தக் குடிகாரன் மனைவிக்கா...? அல்லது சாராயக் கடை ஓனருக்கா..?”
”சிக்கலான கேள்வி” என்றார் என் நண்பர்.
 நான் சொன்னேன்..  ”ஆனால் எளிமையான பதில் ஒன்றுதான்...கடவுள் நிச்சயமாக அந்த சாராயக்கடைகாரனுக்குத் தான் தன் அருளை வாரி வழங்குகிறார்” என்றேன்.  ”ஏனெனில் அவர்தான் கார் பங்களா என்று கடையில் வரும் லாபத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கிறான்.. அந்த ரெகுலர் கஸ்டமர் மேலும் குடித்து குடல் வெந்து செத்துத்தான் போகிறான்...” 
என் நண்பர் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.. 
 அதைப் போல இன்னொன்று கேள்வி... சரஸ்வதி பூசையை என் வீட்டில் என் மனைவி கொண்டாடினாள். அவளிடம் கேட்டேன்..”கல்விக்கு கடவுள் இருக்கும் நம் நாட்டில் ஒரு பல்கலைகழகம்கூட 200 ரேங்கில் இல்லை..” என்று.. அவள் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.
நீங்களாவது சொல்லுங்களேன்..

கருத்துகள் இல்லை :