செவ்வாய், 14 அக்டோபர், 2014

மைனாவும் மெட்ராசும்

ஆங்கில M என்கிற எழுத்தில் தொடங்கும் இந்த இரு படங்களின் ஒற்றுமை
இன்னொரு விஷய்த்திலும் இருக்கிறது.. அதுதான் விளம்பு நிலை மக்கள்
வாழ்க்கைப் பற்றிப் பேசியது...எத்தனையோ குப்பைப் படங்கள் வரும் போது ஒரு படத்தைப் பார்த்த                 பின்னரும்  மனதை ஏதோ நெருடும் என்றால் அதுதான் சிறந்த படைப்பு என்பது எனது துணிபு...

மைனாவின் படைப்பாளி பிரபு சாலமனின் கும்கி படத்தையும் பார்த்தேன்..
படம் நன்றுதான்... ஆனால் மைனாவின் crafty tourch அதில் இல்லை என்பது என் எண்ணம்..

சரி.. நாம் மெட்ராசுக்கு வருவோம்... அட்டைக்கத்தி படைப்பாளி ரஞ்சித்தின் படம்...   மைனாவின் தமிழ் மதுரை ஸ்லாங்கில் என்றால் இது சென்னைத் தமிழ்...

மெட்ராஸ் ஒரு முக்கியமான படைப்புதான்..  மறுக்க முடியாது என்றாலும்
ரஞ்சித் இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது...
அழகான காதலன் காதலியைக் காட்ட வேண்டியிருந்ததால் அவ்ர்களுக்கு
சில காட்சிகள் சில பாடல்கள் .. கார்த்தி என்பதால் ஹீரோயிசத்தைக் காட்ட வேண்டிய காட்சிகள் போன்றவை ஒரு திரைப்படம்  கிளாசிக் படைப்பை நோக்கிச் செல்வதைத் தடுக்கிறது...

விளம்புநிலை மக்களின் அவலங்கள் துயரங்களை   வழமையான சினிமாத்தனம்  இழுத்துக் கொண்டுவிட்டதோ என்று தோன்றியது.. சுருக்கமாக ஒரு நல்ல சாப்பாட்டில் கற்கள்  கிடப்பதைப் போல... ஆனாலும்.... ரஞ்சித் முதல் சுற்றில் கவனிக்கப் படவேண்டிய  படைப்பாளியாகியிருக்கிறார்.. இவர் நிச்சயம் பெரிய ரவுண்டு வருவார் என்பதை  இவர் படைப்பின் சில காட்சிகள் கட்டியம் கூறுகின்றன...

கிட்டத்தட்ட இதே போல மைனாவும் மெல்லிய காதல் கதையைச் சொல்லிக் கொண்டே அந்த மக்களின் துயரங்களை அல்லல்களை எத்தனை நேர்த்தியாக சொல்லியது... இறுதிக் காட்சியில் பார்ப்பவர் இதயங்களை அறுத்துப் போட்டது... அந்தப் படத்தைப்  பார்த்து விட்டு  ”கண்ணுக்குள்ள ஈரம் கசிவதை”  தவிர்க்க முடியவில்லை...

ஆனால் இந்த இரண்டு படைப்பாளிகளை நம்பி தமிழ் சினிமா வெகு உயரத்தில்  நிச்சயம் செல்லும் என்பது திண்ணம்...

கருத்துகள் இல்லை :