சனி, 11 அக்டோபர், 2014

கடவுளில் பாதி.....

தொண்டுக்கு என்றே அலைவான்... கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே....

உலக நாயகன் கமல் சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்ரீம் ஸ்டார் சரத் தல அஜீத் இளைய தளபதி விஜய் பவர் ஸ்டார் சீனுவாசன்  லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு  சூர்யா ஜெயம் ரவி விசால் ஆர்யா தனுஷ் (இவர்களுக்கு அடைமொழி தெரியவில்லை) 

எனக்குத் தெரிந்த பெயர்களை எழுதிவிட்டேன்... இத்தனை பெயர்கள் எனக்குத்
தெரியும்... ஆனால் இவரை தெரியுமா....?
Image result for kailash satyarthi

இவர்தான் கைலாஷ் சத்யார்த்தி... ஏழை கைவிடப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்காக 1983 ஆண்டு முதல் பாடு பட்டு வருபவர். கிட்டத்தட்ட
80000 குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்திருக்கிறார்.  டெல்லியில் ஒரு சாதாரண  பிளாட்டில் குடியிருக்கிறார்.. எந்தவித ஊடக வெளிச்சத்தை விரும்பாத எளிய மனிதராக வாழ்த்திருக்கிறார்.  

அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்தவுடன்தான் இவரைப் பற்றியே தெரிந்திருக்கிறது..நமது ஊடகங்கள் நடிகர் நடிகைகள் தும்மினால்கூட செய்தியாக்குவதால் இத்தனை பெரிய மாமனிதன் நம்மிடையே சேவை செய்து வருகிறான் அவரைப் பற்றிய அவ்வளவு ஏன் அவர் பெயர்கூடத் தெரியாது என்பது எத்தனை பெரிய சோகம்....

அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்... உங்களை வாழ்த்தக் கூடத் தகுதியில்லை..

வாழ்க நீ எம்மான்.....

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

paaraattukkuriya mandharai patriya padhivittamaikku nandr, surendran guntur

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேந்தர் அவர்களே...

இராம ஞான மூர்த்தி சொன்னது…

நிறைகுடம் தளும்பாது

இராம ஞான மூர்த்தி சொன்னது…

< நிறைகுடம் தளும்பாது >

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராம ஞான மூர்த்தி அவர்களே.. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.