ஞாயிறு, 16 நவம்பர், 2014

இந்தியும் இந்தி பேசும் மக்களும்...

பீஹார் மாநிலத்தில் ஒரு டாக்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம்.. ஒரே நாளில் 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை புரிய   ஆசைப் பட்டு ஏழைப்பட்ட சனங்கள் 11 பேரை காவு வாங்கியிருக்கிறார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்..


26 வயதிலிருந்து 40  வரை உள்ள 83 பெண்கள்... அனைவரும் சாதாரண ஏழைக் கூலிகள்.. பிலாஸ்பூர் மாவட்டத்தில் பென்டாரி என்கிற கிராமம்...  6 மணி நேரத்தில் 83 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை.... அந்த மருத்துவமனையை டிவியில் காட்டினார்கள்..... நாய்கள் கூட வசிக்க இயலாத படு மட்டமான பராமரிப்பு.... அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலரை அப்படியே தரையில் படுக்க வைத்த கொடூரம்...

ஏனய்யா உங்களுக்கு பேர் வாங்கித்தர மனித உயிர்களுடன் விளையாடுவீர்களா...?  அத்தனை துச்சமா மனித உயிர்கள்... ஏழைகள் என்றால் அவ்வளவுதானா... அவர்கள் பரிசோதனைக் கூட எலிகளா...? 

கடந்த இரண்டு தினங்களாக இந்தச் செய்தி உலுக்கி எடுத்திருக்கிறது...

இது ஒரு புறம் என்றால்... ஹிந்தி மொழியை பரப்புவதற்கு 2009  ஒரு வருடத்திற்கு 117 கோடி ஒதுக்கியிருக்கிறார்களாம்... அது முந்தய அரசின் புள்ளி விவரம்... தற்போது திருவாளர் மோடிஜி அவர்கள் அரசு அதற்கு மேலும் ஒதுக்கியிருக்கிறதாம்....

சந்தோச்ம்... 2009 ஆண்டு 117 கோடி என்றால் தற்போது எப்படியும் அதற்கு மேல்தான் ஒதுக்கியிருப்பார்கள்...

சரிதான்.. இந்திக்கு ஜே போடுவோம்.... ஆனால் இந்தி பேசும் அந்த அப்பாவி மக்களுக்கு...? பட்டை நாமமா...?

சற்று அந்த நிதியை இந்தியை மட்டுமே பேசும் அந்த சனங்களுக்கும் ஒதுக்கலாமே...? அட்லீஸ்ட் சுகாதாரத்திற்கு மட்டும்...