செவ்வாய், 25 நவம்பர், 2014

இரண்டு விஷயங்கள்...

சில நேரங்கள் இணையத்தில்  உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத்  தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..  


மனித இன்னல்கள் களைபவரா அல்லது தமிழ் உணர்வாளாரா என்று  பார்க்க நேரும் போது மனித இன்னல்களை களைபவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தோன்றுகிறது.. அவரைத்தான் போற்றத் தோன்றுகிறது...

ஏதோ ஒரு வெளி நாட்டில் பிறந்த ஒரு பெண் மணி  அல்லல் பட்டோரை அரவணைத்த அன்னை தெரசா, பிறப்பால் துளு/கன்னடராக இருந்த போதும்  தஞ்சையின் ஏழை விவசாய  மக்களுக்கு தன் உடல்பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த சீனுவாசராவ், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றிய கான்ச்டன்டைன் ஜொசஃப்பெச்கி என்கிற வீரமாமுனிவர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்..

தமிழனாய் பிறந்தான் என்பதற்காக எட்டபனையோ சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் பிஞ்சுக் குழந்தையை  கசக்கிக் கொண்ற அந்த ஈனப் பிறவியையோ நாம் ஏற்க வில்லை....

நான் அப்படித்தான் அனைத்தையும் பார்க்கின்றேன்...

இன்னொரு செய்தி...

இன்று நாளேட்டில் ஒரு செய்தி...
நான்கில் ஒரு பெண் ஏதாவது செக்ஸ் தொல்லைக்கு ஆளாகிறாராம்.. 

அதாவது 25 சதவிகிதத்தினர் அப்படிப்பட்ட தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றால் என்னய்யா உலகில் இருக்கிறோம் என்று நொந்து போக்த் தோன்றுகிறது... இந்தியர்கள் செக்ஸ் விஷயத்தில் அத்தனை வீக்காக இருக்கிறார்களா... பெண் உடல் என்றால் அதை அனுபவிக்கும் பொருள் என்று நினைக்கிறார்களா..? அவள் ஒரு மனித இனம் என்பதையோ மறந்து போகிறார்களா....? நினைக்கவே கூசுகிறது...“பரந்து கெடுக உலகியற்றி யான்” என்று உரத்து கூவத் தோன்றுகிறது...

நாம் மாற வேண்டாமா...?

கருத்துகள் இல்லை :