ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஓட்(டு)டைகள்.....


சுமார் 1996 ஆண்டு வாக்கில் என்னுடைய சிறுகதை விஷயமாக தினமணிக் கதிர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது மறைந்த கவிஞர் ராஜமார்த்தாண்டன் ’இவருதான் பெருமாள் முருகன்..’ என்று எனக்கு அறிமுகப் படுத்தினார்.   சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்படியே காயிதே மில்லத் பேருந்து நிலையம்  வரை நடந்து பேசிக் கொண்டே வந்தோம்...அவர் பேராசிரியர் என்பதும் தெரிந்தது..  அவர் பேச்சிலே அவர் ஒரு பெரியாரியவாதி போலவும் தெரிந்தது... ஆனால் தற்போது அவர் நிலைபாடு என்ன என்பது சரியாக தெரியவில்லை.. 

என்னைப் பற்றி விசாரித்தார்... அவர் உயரத்திற்கு என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் சொல்ல சற்று complex ஆக இருந்தது...  கலைஞானியிடம் நேற்று வந்த ஒரு உதிரி நடிகர் பேசுவதைப் போன்று தோன்றியது..

அன்பாகச் சிரித்தார்... அந்த ’குழந்தை’ சிரிப்பு இன்னமும் என் மனத்தில் இருக்கிறது....

என்ன வென்று சொல்வது... கருத்துரிமையா ஓட்டா என்று நமது சமூகம் பலவாறு தடுமாறிக் கொண்டுதான் செல்கிறது... இதன் ஊடேதான் அனைத்தும் நிகழ்கிறது...

நமது ஜனநாயகம் சிறந்ததுதான்... ஆனால் இதைப் போன்ற ஓட்(டு)டைகள் அவற்றை எப்படி அடைக்கப் போகிறோம் என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி.....


2 கருத்துகள் :

Aero Plane சொன்னது…

பெருமாள் முருகன் அவரை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. மீடியாக்களில் வந்த தகவல் வைத்து கூறுகிறேன்.
ஒரு பெரியவர் சொன்னது-- நீர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் உனது சுதந்திரத்தில் யாரேனும் குறுக்கிட்டால் அதை எதிர்த்து உனக்காக நான் குரலில் கொடுப்பேன்--என்றாராம். அதுபோல்
பெருமாள் முருகன் சொல்வது குற்றம் என்றால் எதிர்த்து எழுத்து போர் தொடுக்கலாம். ஆனால்
பெருமாள் முருகனையே அழிப்பேன் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Badri Nath சொன்னது…

Karuthukkum varugaikkum nandri nanbare... enathu karuththum kittathatta athethaan...nandri meendum