வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஆப்பு வைத்த ஆப்

Image result for kejriwal

67 தொகுதிகள்... நம்பவே முடியவில்லை... நிச்சயமாக கெஜ்ரி முன்பு இருந்ததை விட சற்று அதிகமாக இடங்கள்  வெற்றி பெறுவார் என்றுதான் நினைத்தேன்...... ஆனால் மக்கள் இத்தனை அள்ளிக் கொடுப்பார்களா என்பதைப் பார்க்க நேரும் போது வியக்க வைக்கிறது... மேலும் NOTA  என்கிற யாருக்கும் வாக்களிக்க வில்லை என்ற ஆப்ஷன் மிகக் குறைவாக அதாவது கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது... டெல்லி என்பது ஒரு COSMOPOLITAN நகரம் என்பது அனைவரும் அறிந்ததுதான்... வட இந்தியர்கள் மத்திய பகுதிவாழ் மக்கள் தென்னிந்தியர்கள் என்று கொண்ட ஒரு குட்டி இந்தியா... ஆக அவர்கள் மனநிலை என்பதை இப்படி வரையறுக்கலாம்
1) மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.. அரசியலில் அதிகாரத்தில்  தூய்மை நேர்மை ஆகிய வற்றை யாராவது தர மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள்
2) NOTA விட வாக்களிப்பதில் பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்

டெல்லிவாசிகள் பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தினர்.. படிப்பாளிகள்..  இவர்கள் மனநிலை மற்ற இந்தியர்களுடம் பெரிதும் ஒத்துப் போக வாய்ப்பதிகம் என்றே தோன்றுகிறது,,

கருத்துகள் இல்லை :