திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள்- மதுவிலக்கு- ராஜாஜி

புரட்சியும் போராட்டக்களமும் தமிழக சூழலில் கேலிப் பொருளாகத்தான் இருக்கிறது... இருப்பினும் நாம் அவ்வப்போது சில உண்மையான மகாத்மாக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... நம் கண் முன் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்..... அப்துல்கலாம் மறைவை ஒட்டி  மிக வேதனையான தருணம் சசிபெருமாள் என்கிற காந்தியவாதியின் மறைவு...

 Image result for sasiperumal
நம்பவே முடியவில்லை... என்ன நடந்தது எப்படி என்கிற ஆராய்ச்சி வேறு நடக்கிறது...

ஆனால் சசிபெருமாள் தன்னை உயிரை விட்டிருக்க வேண்டாம்... நாட்டில் இவரைப் போன்றோரின் தேவை அதிகமாக உள்ளது... 

அய்யாவிற்கு எனது அஞ்சலி....

ஆனால் அவரின் ஒரே குறிக்கோள் பூரண மதுவிலக்கு....

மதுவிலக்கு அரசியல் தமிழகத்தில் பல நூற்றாண்டாய் நடக்கிறது.... மதுவினால் எத்தனை தீமைகள் ... கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் தற்போது கல்வி பயிலும் மாணவிகள்(?) குடித்து விட்டு ஆட்டம் போடுவதைப் பற்றிய செய்திகள் அன்றாடம் செய்தித்தாளில் வருகிறது... நேற்றுகூட ஒரு செய்தி வந்திருக்கிறது...

மதுவை எதிர்த்து பல தலைவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்... அவற்றுள் முக்கியமானவர் பெரியவர் ராஜாஜி ஆவார்.  தன் ஆட்சி காலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தியர் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கள்.... 
Image result for rajaji

பொதுவாக தமிழக அரசியல் உலகில் மோசமாக முறையில் விமர்சிக்கப் பட்ட தலைவர் அவர்.. விமர்சனம் மட்டுமல்ல அர்ச்சிக்கப்பட்டவரும் அவர்தான்.... குலலூகப் பட்டர் குள்ள நரி பார்ப்பன வெறியர் என்றெல்லாம்.... அவர் முதல்வராக இருந்த போது குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்பது அதில் முதல் காரணமாகச் சொல்லப்பட்டது....

நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன்.. ஜெயமோகன் கட்டுரை ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தது.. குலக்கல்வி என்பது என்ன என்பதே அவர் கட்டுரையைப் படித்த பிறகுதான் புரிந்து கொள்ளவே முடிந்தது... அதன் பிறகுதான் ராஜாஜியின் மேல் மதிப்பே ஏற்பட்டது... எத்தனை பெரிய வரலாற்று இருட்டடிப்பு இது...

ராஜாஜி அவர்களின் மதுவிலக்கு கொள்கையையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்... 

குடிகாரர்கள் 99 சதம் பார்ப்பனர்களா...?

பிறகு ஏன் அந்தக் கொட்டும் மழையில் முதல்வர் கலைஞர் வீட்டுக்குச் சென்று தயவு செய்து மதுவிலக்கை அமல் படுத்துங்கள் என்று கெஞ்சியிருப்பார்...

மனசாட்சியுடையவர்கள் மட்டும் சரியாக சிந்திப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது...

5 கருத்துகள் :

Unknown சொன்னது…

முதன் முதலில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தவர் ஓமந்தூர் இராமசாமி இரட்டியார்!
,பிரிக்கப் படாத சென்னை மாகணத்தின் முதல்,முதலமைச்சராக அவர் வந்தபோது கொண்டு வந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!!? சதிகாரர்கள், சதியால் வெளியேறிய அவர் இன்றுவரை மறக்கப் பட்டவராக,இல்லை! இல்லை! மறைக்கப் பட்டவராகத் தானே ஆனார்!

kkk சொன்னது…

It was Omandur.P.RAMASAMY as the Chief Minister of Tamilnadu introduced Total Prohibition throughout the state of Tamilnadu at one go . Rajaji introduced prohibition in 3 towns, each town in one year. And he introduced the Sales Tax system to compensate the revenue loss due to prohibition in 3 towns. The Rajaji s swatantra party which was ruling Orissa state, did not implement Prohibition at all.
The credit of implementing Prohibition in the entire state of Tamilnadu at one signature, shall be with Omandur P.Ramasamy.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி பெரியவர் புலவர் அவர்களே மற்றும் KKK அவர்களே..
தகவல் பிழையைச் சுட்டியதற்கு நன்றி... ஆனால் நான் சொல்ல வந்ததே அதுவல்ல...
யார் முதல் என்பதல்ல... கலைஞர் ஆட்சியின் போது தள்ளாத வயதில் கொட்டும்
மழையில் அவர் சென்று வேண்டிக் கொண்டவரைப் பற்றி அவதூறு பேசுவதை
பற்றி சுட்டிக் காட்டியுள்ளேன்...அதுதான் மையக் கருத்து... நன்றி...

நம்பள்கி சொன்னது…

ராஜாஜி அய்யா சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்தபோது ஏன் பூரண மதுவிலக்கை அமல் படுத்தவில்லை என்ற கேள்வி முகவிற்கு இருந்திருக்கும். ராஜாஜி தான் (பூரண மதுவிலக்கு) செய்யாததை மற்றவர் செய்யணும் என்றது அரசியல் மட்டுமே...இதற்கும் நான் மற்றுமொரு பதிவு போடுகிறேன்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

ராஜாஜி அவர்களின் நோக்கத்தை -ஜெயமோகன் கருத்தைப் படித்த பிறகு -சந்தேகப்படவில்லை...... மேலும் அவர் கட்சி திமுக காலத்தில் ஒரு சிறிய பிரஷர் குருப் மட்டுமே..... கலைஞர் அதனால்தான் முக்கியத்துமளிக்கவில்லை என்று நினைக்கிறேன் ....