வியாழன், 10 செப்டம்பர், 2015

இரண்டு லட்சம் கோடி.....

 உலக முதலீட்டார்கள் மாநாட்டின் பயனாக இரண்டு லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது... உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான்...


கலைஞர்,  தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் நாடகம் செய்கிறார்கள் என்கிறார்.... கேப்டன் இங்கே என்ன உள் கட்டமைப்பு இருக்கிறது இத்தனை கோடிகள் வந்து என்ன பயன் என்கிறார்... மருத்துவர் அய்யா இந்த நான்கு ஆண்டுகளில் வரும் என்று சொன்ன முதலீட்டில் நான்கில் ஒரு பங்குதான் வந்திருக்கிறது.. இதில் என்ன வந்துவிடப் போகிறது என்கிறார்..

உண்மைதான்... அதிமுக தேர்தலை ஒட்டித்தான் செய்கிறார்கள் என்றாலும் குறை சொல்லும் கட்சிகள் ஒரு வேளை ஆளும் கட்சியாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்கள்..  

உள்கட்டமைப்பு இல்லையே என்று வரும் முதலீட்டை வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா...?  இவ்வித முதலீடுகள் வருவதால் உள் கட்டமைப்பை மேம்படுத்த வாய்ப்பு வருகிறதே என்றுதான் பார்க்க வேண்டும்..

மருத்துவர் சொல்வது போல் நான்கில் ஒரு பங்குதான் வந்தது என்றாலும் முதலீடுகள் என்றாலே அப்படித்தான் இருக்கும்... இப்போது சொல்லப்படும் 2  லட்சம் கோடியில் நான்கில் ஒரு பங்கு என்றாலும் அதுவே மிகப் பெரிய தொகைதானே...

சரி... ஆளும் அதிமுக மற்றும் இன்னபிற எதிர்க் கட்சிகளின் நோக்கம் எதுவானால் என்ன... நம்மைப் போன்றவர்களுக்கு இதனால் என்ன பயன் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு...

அந்த வகையில் வேலை வாய்ப்பு பெருகுமா என்று பார்த்தால் பெருகும் என்பதுதான் உண்மை...  அந்த வகையில்  இந்த மாநாடு ஒரு வெற்றிதான்... அதனாலேயே இதை வரவேற்போம்....

கருத்துகள் இல்லை :