வெள்ளி, 2 அக்டோபர், 2015

போகுமிடம் வெகு தூரம்......

இலங்கை அரசின் போர்க்  குற்றம் பற்றிய வரைவுத் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியிருக்கிறது...


இந்தத் தீர்மானத்தை இலங்கையே (?) முன்மொழிய இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றதாக புதிய தலைமுறையில் சொன்னார்கள்... ஆனால் தற்போது அப்படியில்லை  ஒரு சில நல்ல அம்சங்களை மட்டும் வரவேற்றோம் மற்றபடி முழுமையாக வரவேற்க வில்லை என்று இந்துவில் செய்தி வந்துள்ளது..

நேற்று புதிய தலை முறை டிவியில் இதைப் பற்றி விவாதம் நடந்தது... வழக்கறிஞர் அருள்மொழி இதைப் பார்த்து அனைத்து தமிழர்கள் ரத்தமும் கொதிக்கிறது என்றார்... சுமன் ராமன் அவர்களோ இது ஒரு ” best out of bad deal...” என்றார்..

மரணித்த கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு  மேற்பட்ட உயிர்கள் தமிழர்களை மட்டுமன்றி மனசாட்சி உள்ள அனைத்து உலக மக்களையும் பாதித்திருப்பது உண்மைதான்... 

ஆனால் காய்தல் உவத்தில் அன்றி பார்த்தால், சுமன் ராமன் அவர்கள் சொல்வது போலத்தான் உலகம் தற்போது உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்..

இலங்கையில்  போர் நடந்த போது ஆயுத வியாபாரிகள்  காசு பார்த்தார்கள்...  ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் முற்றிலும் முடக்கப் பட்ட நிலையில் உள்ள நிலைமையயைப் பார்க்க வேண்டும்,,,  இலங்கையில் கிட்டத்தட்ட 70 மில்லியன் அளவிற்கு சீனா முதலீடு செய்திருக்கும் நிலையில் இந்தியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பல MNC நிறுவனங்கள் தங்களுடைய பெரும் சந்தையாக இலங்கையைப் பார்க்கும் ஒரு நிலையில்  இந்தத் தீர்மானம் இலங்கைக்கு எதிராக அல்லது இந்தியா ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்துவிடும் என்று எதிர்ப்பார்த்தால்  ஒன்று நம்மை நான் ஏமாற்றிக் கொள்வது போல்தான்.. அல்லது political browny point என்று சில அரசியல் அரங்கில் ஆதாயம் பெறலாம்... அவ்வளவே.. யதார்த்தம் வேறு மாதிரி திகழ்க்கிறது.... அதெல்லாம் இல்லை பச்சை துரோகம் என்பவர்கள் மாற்று வழி என்ன என்பதை சொல்ல வேண்டும்..

பனிப் போர் காலம் முடிந்து போய் அது பழங்கதையாகிவிட்டது...தற்போது நடப்பது உலக மயச் சூழல்... 

அதன்படித்தான் நமக்கான நீதியைப் பெற வேண்டும்... 

இனிதான் புது முயற்சியை நாம் கண்டடைய வேண்டும்..


கருத்துகள் இல்லை :