புதன், 25 நவம்பர், 2015

அன்று கமலஹாசன் சொன்னது சரிதானே...?

விஸ்வரூபம் பிரச்சனையை ஒட்டி கமலஹாசன் மனம் நொந்து “நான் ஏதாவது வெளிநாட்டில் குடியேறப் போகிறேன்..“ என்று சொன்னார்.. அதையொட்டி எத்தனை கேலிகள் கிண்டல்கள் சமூக வலைதளங்களில் வலதுகள் மட்டுமன்றி SO CALLED புர்ச்சி  இடதுகள் முர்ற்போக்காளர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்வர்கள் வெளியிட்டுத் தீர்த்தார்கள்...


தற்போது  INCREDIBLE INDIA வின் தலைவராக இருக்கும் அமீர்கான் தன்னுடைய துணைவியார் இந்தியாவில் இருப்பதே பயமாக இருப்பதாகவும் ஒரு பாதுகாப்பின்மை இருப்பதாக உணருவதாக ஒரு பேட்டியைக் கொடுத்தார்.. ஏதாவது  வெளிநாட்டுக்கு குடியேறலாமா என்று யோசிப்பதாகவும்  சொன்னார்... 

அதையொட்டி இசைப்புயல்  A R ரஹ்மானும் தனக்கும் அப்படியொரு நிலை இருப்பதாகவும் தான் இசையமைத்த படத்திற்காக முஸ்லிம் அமைப்புகள் ‘பத்வா’ தனக்கு விதித்திருப்பதால் அமீர்கான் போல தானும் நினைப்பதாக கூறுகிறார்..

கமலை கேலி பேசியவர்கள் தற்போது இதைப் பற்றி ஏதும் கூறுவதில்லை....இவர்களின் Conspicuous by their silence சற்று விசித்திரமாகத்தான் உள்ளது...

இந்த மதவாதிகளை நினைத்தால் .... அய்யா மதவாதிகளே..  கமலோ அமீர்கானோ ரஹ்மானோ பெரும் பணம் படைத்தவர்கள்..... பிரச்சனை என்றால் ப்ளைட் பிடித்து தப்பித்துவிடுவார்கள்..  ஆனால் எங்களைப் போன்றவர்களோ மழையிலும் வெள்ளத்திலும் புயலிலும் சமூகப் பிரச்சனைகள் என்ற புயல்களிலும் மாட்டிக் கொண்டு தினம் அல்லல்படுபவர்கள்... மேலும் உங்கள் மதவெறியினால் குழப்பம் உண்டாக்காதீர்....மட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்...

ப்ளீஸ்....

கருத்துகள் இல்லை :