வியாழன், 17 டிசம்பர், 2015

தீர்ப்பு....

2006 ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஓர் அரசாணையை கொண்டு வந்தார்... அதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. அதையொட்டி உச்ச நீதி மன்றம் தற்போது தீர்ப்பளித்திருக்கிறது,,

ஆனால் அந்தத் தீர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்பதை இன்றய இந்துவில் வந்திருக்கிறது… அதாகப்பட்டது
”held that appointment of archakas (priests) in Tamil Nadu temples as per the restrictions prescribed by the age-old Agamas (treatises) is not a violation of the right to equality.

However, the apex court held that these treatises should necessarily conform to constitutional mandate

முதல் பத்தியில் ஆகமத்தை மீறக் கூடாது என்கிறார்கள்… அப்படி ஆகமப் படி நடப்பது சம நீதியை மீறியதாய் ஆகாது என்கிறார்கள்… (கலைஞர் பிறப்பித்த அந்த G.O. வை உச்ச நீதி மன்றம் ரத்து செய்ய வில்லை என்பது முக்கியமானது)

அதே சமயம் இரண்டாவது பத்தியில் அந்த ஆகமங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாய் இருக்கக் கூடாது என்கிறார்கள்..

ஆனால் பிரச்சனையே அதுதானே…

ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கு சிரமப்படத் தேவையில்லை… வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் நீதிமன்றம் பேசித் தீர்த்துக் கொள்ளச் சொல்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.. அல்லது அனைத்து தரப்பையும் திருப்தி படுத்திவிட்டுப் போகலாம் என்றும் நினைத்துக் கொள்ளலாம்… ஆளும் பிஜேபி அரசும் இந்துக்கள் என்று பேசுவதால் அவர்களையும் திருப்தி படுத்த வேண்டும் என்றும் புரிந்து கொள்ளலாம்…

எனக்குத் தெரிந்த பிராமண சங்க நிர்வாகி நண்பரிடம் பேசினேன்.  அவர் கூறுவது என்ன வென்றால்.
1) முதலில் தமிழகத்தில் உள்ள 36000 கோவில்களில் ( லட்சக் கணக்கில் இருக்கலாம் ) சில ஆயிரம்தான் ஆகமப் படி நடக்கிறது
2)   அவற்றில் பல கோவில்களில் (சில கோவில்கள் தவிர) வருமானம்  நூறு ரூபாய் கூட வருவதில்லை..
3)   இந்த வித கோவில்களை நம்பி எவரும் தொழிலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்..
4)   அதிகப் படியாக தட்டில் விழும் பணம் என்பது சில கோவில்களில் உள்ளது… இதுகாறும் அங்கு பணியாற்றிய குருக்கள் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்து கொள்வது  என்பது எப்படி நியாயம்  
5)   பிராமணர்களில் சிவாச்சாரியர்கள் மட்டுமே குருக்கள் ஆக முடியும் அனைத்து பிராமணர்களும் ஆக முடியாது
6)   தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப் பட்ட பிரச்சனையை யாரும் கிளப்பியதில்லை… மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் விவரம் அறியாதவர்களா…?
என்பதை அடுக்குகிறார்….

ஆனால் தமிழ் நாட்டின் பிரத்யோகமான நிலைமை நாம் அறிந்ததுதான் பெரியாரின் வழித் தோன்றல்கள் அதிகமுள்ள ஒரு மாநிலத்தில் அப்படித்தானே சிந்திப்பார்கள் என்பது இயல்பான விஷயம்தான்…அதே சமயம் உச்ச நீதிமன்றம் தமிழகம் என்பதை அனைவரும் மறந்து விடுவோம்… கம்ப்யூட்டர் காலம் என்கிறோம்.. விஞ்ஞான உலகம் என்கிறோம்… எதையும் பிறப்பை வைத்து முடிவு செய்வது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டும்தான் தற்போது சொல்ல முடியும்…


கருத்துகள் இல்லை :