வெள்ளி, 25 டிசம்பர், 2015

மருத்துவ உலகமும் சமூகமும்.....

மருத்துவ உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மிடில் கிளாஸ் மூளைக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்பது என்னவோ உண்மைதான்… ஆனால் இந்த INTERNET உலகத்தில் உலகம் முழுவதும் கம்ப்யூட்டரைத் திறந்ததும் சென்னை மழைப் போல கொட்டித் தீர்க்கிறதே….  நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது..

அப்படி ஒரு ப்ளாக்கைப் படிக்க நேரிட்டது… அவர் பெயர் ஜோர்டன் க்ரூமெட் (jordan grumet) ஒரு அமெரிக்கர்.. மருத்துவர்.. இல்லியனாய்ஸ் மகாணத்தில் இருக்கிறார்…

ஒரு ப்ளாக் வைத்திருக்கிறார்.. அதில் மருத்துவ விஷயங்களை  நிறைய எழுதுகிறார்.  டிசம்பர் 23 அன்று அவர் எழுதிய ஒரு கட்டுரை ” நோயாளிகள் தங்கள் மருத்துவரைப் பற்றி  தெரிந்து வைத்திருக்க வேண்டிய 7 ஆச்சரிய விஷயங்கள்” என்ற கட்டுரையின் முதல் விஷயத்தைப் பற்றிப் படிக்கும் போதே அரண்டு போக நேர்கிறது… அவர் கூறுவது… ( கட்டுரை முழுவதும் படிக்க சுட்டி ::  http://www.kevinmd.com/blog/2015/12/7-surprising-things-patients-know-physicians.html)
1)People die, for the most part, because they are sick.  Yes medical errors occur (even to healthy people).  But medical errors happen more often in deathly ill, hospitalized patients, with poor prognoses to start with.  The more ill the patient, the more complicated the care.  More medicines.  More tests.  More risky procedures.  More errors. ‘’
என்கிறார்…

சரி நான் என்னுடைய விஷயத்திற்கு வருகிறேன்… எனது தந்தையார் 15 வருடத்திற்கு முன்பு இறந்து போனார்.. 10 நாட்களுக்கு முன்னர் எனது மாமானார் இறந்து போனார்.   எனது தந்தை இறக்கும் போது வயது 71. என் மாமானருக்கு வயது 74,

என் தந்தையார் ஒரு சராசரி சென்னை வாசி…. அவருக்கு நாற்பது வயதிற்கு மேல் வரும் சுகர் பிபி இருந்தது..  இறக்கும் தருவாயில் அவருக்கு மூட்டு வலி இருந்தது.. அதற்கு மருந்து வேண்டும் என்று அடம் பிடித்தார்.. அதனால் அவருக்கு ஊசியின் மூலம் வலி நிவாரணி செலுத்துப்பட்டது…  சில மாதங்களில் சிறுநீரகம் பழுதாகி குணப்படத்த முடியாமல் இறந்து போனார்.  

எனது மாமானர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இதய நோய் உள்ளவர். கூடவே சர்க்கரை வியாதியும் உள்ளவர்.. 20 வருடங்களாக இதய நோய்க்கு அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகளால் உயிர் வாழ்ந்து வந்தார்.. இந்த மாத துவக்கத்தில் மீண்டும் இதயத்தில் வலி இருந்ததால் மருத்துவமனையில் சேர்ந்தார்..  ஆஞ்சியோ பண்ணப் பட்டது.. இதயத்தில் அடைப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்பட்டது… அதனால் மருந்துகள் தரப்பட்டது… சில தினங்களில் சிறுநீரகம் பழுதாகி டயாலிசிஸ் செய்து முடித்ததும் பலனின்றி இறந்து போனார்…

ஒரு சாதாரணனாக எனக்கு உள்ள சந்தேகம் என்ன வென்றால் அலோபதி மருந்துகளில் அதிக அளவு பக்க விளைவுகள் உள்ளனவா….? அது சிறுநீரகத்தைப் பாதிக்குமா..? அப்படியானால் அதற்கு தீர்வு என்ன…? ஆகியவை மருத்துவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.. மருத்துவர் ஜோர்டன் கூற்றின் படி மிக அதிகமாக பாதிப்புள்ள நோயாளிகளை குணமாக்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றிக் கூறுகிறார்.. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே மெடிக்கல் எர்ரர் (மருத்துவ தவறுகள்) இருக்கும் போது நம்மைப் போன்ற நாடுகளில் அதுவும் வசதி வாய்ப்புகள் குறைவாக நோயாளிகளின் நிலையை நினைத்தால் சற்று குலை நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது…

நம்மில்  அதிகமாகனவர்கள்  அலோபதி மருந்துகளை நாடுவது அதில்தான் மேலதிகமாக RESEARCH AND DEVELOPMENT விஷயங்கள் நடக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே….  அப்படி நம்பி வருபவர்களை நமது மருத்துவ உலகத்தினர் சற்று புரிய வைத்து பரிவுடன் அணுகினால் நலம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது…


ஒரு சாதாரணனால் வேறு என்ன செய்ய இயலும்….?

கருத்துகள் இல்லை :