புதன், 3 பிப்ரவரி, 2016

பழ கருப்பையாவும் கரன்தப்பார் பாண்டேயும்


பழ கருப்பையாவுடனான தந்திடிவி பாண்டேயின் கேள்விக்கு என்ன பதில் பார்த்தேன் சற்று தாமதமாக… அதைப் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நிறையவே வந்து விட்டது…  பாண்டே அப்படி பேசினார் இப்படி பேசினார்… எதிராளிகளை காயப் படுத்தும்படி பேசுகிறார்.. உடல் மொழியால் அச்சுறுத்துகிறார்…. பழ கருப்பையா எப்படிப்பட்ட சுதந்திர சிந்தனையாளர் அவரைப் போய்… என்றெல்லாம் படிக்க நேர்கிறது…

பாண்டே உண்மையில் தமிழக டிவி உலகில் ஒரு கரன்தப்பாராக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்… அது ஒன்றும் தவறல்ல… மேலும் அப்படி DEVIL’S ADVOCATE ஆக இருப்பதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் பொதுக் கருத்துருவாக்கம் ஏற்பட காரணியாக இருக்கும்… ஆனால் பேட்டியில் பழ கருப்பையாவிடம் பெற வேண்டியதை பாண்டே பெற்றுத் தந்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது….

பழ கருப்பையா நிச்சயமாக ஒரு சிந்தனையாளர், அறிஞர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை…. அதிமுகவில் சேர்ந்ததற்கான ஆயிரம் காரணங்கள் பழ க அடுக்குகிறார்… அவர்  ஏன் சேர்ந்தார் என்பதைப் பற்றிய தெளிவாக ஏற்றுக் கொள்ளும் ஒரு காரணம் சொல்ல இயவில்லை… காரணம் ஜெ யோ அதிமுகவோ இன்று நேற்று வந்த கட்சியல்ல கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கட்சி… ஜெ பற்றித் தெரிந்துதான் அவர் சேர்ந்திருக்க வேண்டும்…. அதனால்தான் இன்று பேட்டியைவிட்டு வெளிநடப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிக்கிறது….


தமிழக அரசியல் நிலை இதுதான் என்பது தெரிகிறது….

2 கருத்துகள் :

Pararajasingham Balakumar சொன்னது…

எனக்கொரு விடயம் புரியவில்லை . கட்சி மாறி வரும் அரசியல் தலைவர்களை பேட்டி காண்பவர்கள் அதிமுக , திமுக போன்ற பெரிய கட்சிகளிருந்து வெளியேறும்போது மட்டுமே ஏன் பேட்டி காண வேண்டும் . அந்த கட்சிகளில் சேரும்போது ஏன் பேட்டி காண்பதில்லை.

கருப்பையா கடந்த தேர்தலின் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து தேர்தலில் நிற்பதற்கான டிக்கட்டையும் பெற்று அதிமுக அடிமை தொண்டர்களின் உழைப்பையும் பெற்று எம் எல் ஏவாகும்போது இந்த ஊடகங்களும் பாண்டேக்களும் எங்கே போனார்கள் ?

அதிமுகவை விட்டு விலகியது மட்டுமல்ல , தேர்தல்நேரத்தில் காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து எம் எல் ஏ ஆகியதே அறமற்ற செயல்தான்.அப்போது இந்த பண்டே கருப்பயாவிடம் கேட்பதை கேட்டு வாங்க வேண்டியதை ஏன் வாங்கவில்லை..

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி பாலகுமார் சார்....நீங்கள் சொல்வது point to reckon with அம்சம்தான்.. ஊடகங்கள் இயங்கும் விதம் அனைவரும் அறிந்தததே... அது TRB.. அதிமுக திமுக நோக்கி என்பதற்கு அதுதான் காரணம்....அறம் சார்ந்தது இயங்க வேண்டும் என்பது ஒரு கானல் நீர்.... மேலும் இவ்வித ஊடகங்கள் பற்றிய காத்திரமான விமர்சனங்கள் தற்போதுதான் வர ஆரம்பிக்கிறது... இதுவும் நல்ல முன்னேற்றம்..