சனி, 13 பிப்ரவரி, 2016

விசாரணை......

பீரியட் (PERIOD) படம்  என்பார்கள்...  அதைத்தான்  கூறுத் தோன்றுகிறது... விசாரணை  படம் பார்த்த பிறகு...


வெற்றிமாறன் கலைத்தாயின் தவப்புதல்வன் என்றால் அது மிகையாகாது...

சிலர் போலீஸ் மீதான நம்பிக்கையை குறைப்பது போன்று உள்ளது என்று சொல்லலாம்... தந்தி டிவியில் விவாதமே நடத்தினார்கள்...  ஆனால் சமூகத்தில் இப்படி நடப்பதைப் நாம் பார்க்கவில்லையா...? 

சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் என்பார்களே... அது இந்தப் படத்தைப் பார்த்தால் புரியும்... தமிழ்த்  திரைப்பட ரசனையை  மேம்படுத்த  இப்படி சில மாறன்கள் இருந்தாலே போதும்... 

தமிழ் சினிமாவின் முட்டாள்த்தனமான  ஹீரோயிசத்தை எள்ளி நகையாடுகிறது படம்... சில வருடங்கள் முன்பு இத்தாலியின் BICYCLE THIEF என்கிற படத்தைப் பார்க்க நேர்ந்தது... உலகில் சிறந்த திரைப்பட வரிசையில் உள்ள படம்...

நிச்சயம் விசாரணை அதில் இடம் பெறும்....

கருத்துகள் இல்லை :