வியாழன், 14 ஏப்ரல், 2016

திருமாவளவன்....

பல தலித் கட்சிகளின் தலைவர்களில் திருமாவளவன்  முக்கியமானவர் என்பதை மீண்டும் இன்றை தமிழ் இந்து நாளேட்டில் வந்துள்ள அவரின் பேட்டி நிரூபிக்கிறது..

இந்திய சமுகத்தையும் குறிப்பாக தமிழ் சமூக அமைப்பை பற்றிய சரியான புரிதலோடு மிகச்   சிறப்பான ஜனநாயகவாதியாக அவர் பேட்டி அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை..

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும்  கேப்டன் தலைமையில் ஆட்சியா என்கிற பயம்  இருந்தாலும் ம.ந.கூ இந்த முறைகள் வர வேண்டும் என விரும்புவதே திருமா அவர்கள் கூறுவதைப் போல அனைவருக்குமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது... ஒரு கட்சி ஆட்சி என்பது தற்போதுள்ள பல்முனை நெருக்கடிகளும் பிரச்சனைகளும் சுற்றியுள்ள உலக ஒழுங்கில் வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது... கம்யூனிஸ்ட்டுகளும் திருமாவும் சூழப் பட்டிருக்கும் கேப்டன்  தலைமையில் உள்ள ஆட்சி சரியான பாதையில்தான் செல்ல முடியும் என்றே தோன்றுகிறது..   ம,ந, கூட்டணியைப் போன்ற ஒரு கூட்டணியில்  கலைஞரோ ஜெ--யோ  ,  தலைமையில் இருந்தாலும் அதுவும் ஏற்புடையதே... ஆனால் இருவரும் அதை விரும்புவதில்லை அதிலும் குறிப்பாக ஜெ அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்

இனி திருமா அவர்களின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால்..“ஒரு கட்சி ஆட்சி முறையில் பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பில்லை. அரசின் கொள்கைகளை, ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கிற இடத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கூட்டாட்சி என்றால், ஒவ்வொரு முறையும் அரசு தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது, ஆட்சி தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது அமைச்சரவைக் கூட்டத்தில் பேச வேண்டும். அமைச்சரவையில் பேசுகின்றபோது மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அங்கே இருப்பார்கள். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை அத்தனை எளிதாக நிறைவேற்ற முடியுமா?

செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது முதலாளித்துவம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால் அது எதேச்சாதிகாரம். இந்த அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறபோது எல்லோருமே ஹிட்லர்களாகத்தான் மாறுவார்கள். நாளை திருமாவளவனிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்தாலும் அவனும் அப்படி மாறக்கூடும். அது நடக்கக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதற்குக் கூட்டாட்சி முறை உதவும். இது பன்மைத்துவத்தையும் பிரதிபலிக்கும்...“ என்கிற ரீதியில் அவர் இன்று அளித்த பேட்டி எத்தனை காத்திரமான சிந்தனை...

நாளை நல்ல தலைவர்களை இப்படித்தான் நாம் இனம் காண வேண்டும்...

அதற்காகவே ஜனநாயகம் வளர  மக்கள் நலக் கூட்டணி இந்த முறை வந்தால் மக்களுக்கு நல்லது என்றே தோன்றுகிறது... தமிழகம் என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்துப் பார்க்க வேண்டும்...

கருத்துகள் இல்லை :