திங்கள், 16 மே, 2016

ஜனநாயகக் கடமை...

நான் உட்பட என் நண்பர்கள் சிலர் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியவில்லை என்பது காலத்தின் கோலம்தான்...


என் நண்பர் சொன்னார் ” கடந்த முறை தேர்தல்ல கமலே ஓட்டு போட முடியல.. பெயரே இல்லைன்னு சொன்னாங்களாம்... அவர் ஓட்ட யாரோ போட்டுட்டாங்கன்னு ஒரே பரபரப்பா இருந்தது .. அப்ப நம்மைப்  போன்றவர்கள் பற்றி எவன் கவலப் படுவான்...." என்றார்..

என்னைப் போன்று வெளியூரில் மாட்டிக் கொண்டவர்கள், கமலுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலைமைகள் ஆகியவை வர விடாமல் தடுக்க ஒரே வழி என்று எனக்குத் தோன்றுவது இதுதான்..

நமது வேட்பாளர்கள் வேண்டுமானாலும் மாறவில்லை... ஆனால் தொழில்நுட்பம் மாறிவிட்டதே.... ஆதார் கார்ட்டில் நமது கைரேகை  கருவிழி அடையாளங்கள் போன்ற டேட்டா பேஸ் (DATA BASE)  மத்திய அரசிடம் உள்ளது  தற்போது வளர்ந்து வந்துள்ள தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி அவற்றை பயோ மெட்ரிக் முறையில் இணைத்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இருந்து ஓட்டளிக்கச் செய்யலாமே... கள்ள ஓட்டும் இதனால் கட்டுப்படுத்தப்படும்... ஆனால் செலவு...?

என்ன.... அந்த மூன்று லாரியில் உள்ள 570 கோடி பணத்தைவிட குறைந்த செலவேதான் பிடிக்கும் ...

ஆட்சியாளர்கள் மனம் வைப்பார்களா...?

கருத்துகள் இல்லை :