வெள்ளி, 20 மே, 2016

தமிழக மக்கள் நடத்திய பாடம்....

பண்டிட்டுகள் வேறு மக்கள் வேறு என்பது எப்போதுமே நிறுவப்பட்டு வரும் உண்மை என்பதைத்தான் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நமக்கு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது..


ஆனால் இந்தக் களேபரத்தின் மத்தியில் சிலர் சரியாகவே கணித்தார்கள்.. உதாரணமாக 18ந் தேதி அன்று தந்தி டிவியில் மாலனும் பாண்டேயும் கலந்து கொண்ட தேர்தல் நிகழ்ச்சியில், பாண்டே கேட்டார் 2014 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெ.யின் வாக்கு 2016 தீடிரென்று சரிந்து விடுமா என்றார். இரண்டு வருடம்தானே ஆகிறது என்றார் .  மாலனும் அதிமுகவுக்குத்தான் ஒரு சாதக அம்சம் என்றார்.  மேலும் அவர் தன்னுடைய டிவிட்டரில் AIADMK WILLWIN BY A WHISKER என்று சொல்லியிருந்தார்.  

இதற்காகவே வினவு உள்ளிட்ட பல முற்போக்காளர்கள் பார்ப்னீயம் என்று குதித்தார்கள்... ஆனால் நடந்தது என்ன ...?

பல தனியார் சேனல்கள் இழுபறி என்றே கணித்திருந்தன.. அதாவது அதிமுக 5 ஆண்டுகள் ஆண்டபிறகு பாதக அம்சத்தை அதற்கும் சாதக அம்சத்தை திமுகவுக்கும் கொடுத்து இந்தத் தேர்தல் ஒரு NECK TO NECK BATTLE என்று தங்கள் தீர்ப்பை தந்திருக்கின்றன..  நடந்தது நேர் எதிர்....

பத்திரிகையாளர் மணி சொல்வதைப் போல “அதிமுக எப்படியோ எந்தவிதத்திலோ சாமான்ய மக்களோடு கனெக்ட் ஆகியிருக்கிறது..“ என்றார்,

மனோவியல் நிபுணர் ருத்ரன் சொல்வதைப் போல சென்னையில் இத்தனை வெள்ளக்காடு ... முதல்வர் இரண்டாண்டு சிறையில் இருந்த போது ஸ்தம்பித்த அரசு இயந்திரம்  அனைவரும் வெறுப்படையும் செயல்பாடுகள் என்று பல இருந்தும் மக்கள் திமுகவைவிட  அதிமுகவைத்தான் நம்புகிறார்கள் என்கிறார்..  பணம் கொடுத்தார்கள் என்கிறார்கள்...... ஆனால் அவர்கள் தோற்ற 90 க்கும் மேற்பட்ட தொகுதியில் அந்தப் பணம் வேலை செய்யவில்லையா என்றும் கேட்கிறார்...  இதற்கெல்லாம் பண்டிட்டுகள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்..

சுபவீ சொல்வார் (நேற்று நடந்த நிகழ்ச்சியிலும் சொன்னார்) “  நான்        அதிமுக- வை திராவிடக் கட்சியாகப் பார்க்கவில்லை..“ என்பார்.. அதற்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு என்றாலும், சுருக்கமாக ஒரே அர்த்தம்தான் அதாவது அதிமுக என்பது மறைமுக பிஜேபி என்பதுதான்... என்னைப் பொருத்த வரை அது  ஜெ தலைமையில் இருக்கும் அதிமுக என்பதல்ல . எம்ஜியார் தலைமையில் இருந்த போதே அது அப்படித்தான்... ஆக 1977 பிறகு மறைமுக பிஜேபி தலைமைதான் தமிழகம் ஆளப்பட்டு வந்திருக்கிறது என்றும் கூறலாம்..

இந்தச் சூழலில் ஜெயமோகன் திராவிட இயக்கத்தைப் பற்றியும் பெரியாரியத்தைப் பற்றியும் தீவிரமான அய்யங்களை எழுப்பும் போது அது சரிதான் என்றே தோன்றுகிறது..

5 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின்னர் அதிமுகவும் திமுகவும் பெற்றிருக்கும் VOTE SHARE என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது..
அதிமுக  41
திமுக       31
காங்கிரஸ் 6
என்று சொல்கிறது Zee NEWS...  திமுக வுக்கு கிடைத்திருக்கும் ஓட்டில் காங்கிரஸ் VOTE SHAREயை எப்படி பிரிப்பார்கள் என்பது தெரியவில்லை... திமுக மட்டும் 31 என்றால் அதை எப்படி கணக்கிட்டார்கள் என்பதும் தெரியவில்லை .. அதிமுகவோ எந்தவித கூட்டணி இல்லாமல் வெறும் ஜெ யின் பிரச்சாரத்தால் இந்தளவு இமாலய வெற்றி பெற்றிருக்குமா என்பது மிகவும் ஆச்சரியகரமான விஷயம்... உலக அதிசயம் என்றுகூட கூறலாம்..


ஆனால் தற்போது திமுக பெற்றிருக்கும் 98 சீட்டுகள் அதன் முழு காரணகர்த்தா ஸ்டாலின்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... எந்த வித சோர்வுமில்லாமல் பம்பரமாக சுழன்ற ஸ்டாலினின் வெற்றிதான் அந்த 98 சீட்டுக்கள் என்பதை நேர்மையாளர்கள் ஏற்றுக் கொள்ளார்கள்..

நிற்க..

தற்போது மக்கள் நலக் கூட்டணிக்கு வருவோம்... 
இந்தத் தோல்வியால் கேப்டன் நிச்சயமாக உடைந்து போயிருக்கலாம்... அவர் மட்டுமல்ல நாட்டின் பிரதமராக கனவு காணும் - நடிகர் சங்கத் தேர்தலிலேயே தோற்ற சரத்குமார் போன்றவர்கள் அந்த CM பதவியில் அமர வெறியாக இருப்பவர்கள்... ஆனால் இடது சாரிகளோ திருமாவோ அப்படிப்பட்டவர்கள் கிடையாது...... இடதுசாரிகளும் திருமாவும் மீண்டும் தங்களது முயற்சியைத் தொடர வேண்டும் .  அவர்கள் கூறவதைப் போல மக்கள் நலக் கூட்டணி என்று ஆரம்பித்தவுடன் தேர்தல் வந்துவிட்டது.. CONSOLIDATE செய்து கொள்ள அவர்களுக்கு நேரமும் இல்லை.. ஆனால் வருங்காலங்களில் அத்தனை பொறுப்பும் இடது சாரிகள் மற்றும் திருமாவின் தோள்களில்தான் உள்ளன.. அவர்கள் தொடர்ச்சியாக  செயல்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் வேண்டுகோளாக இருக்கும்... 

ஆகவே இந்தத் தேர்தல் என்பது என்ன தவறு என்பதை மட்டுமல்ல எவர் சரியானவர்கள் என்பதையும் சேர்த்து தமிழக மக்கள் நடத்திய பாடம் என்றே கூறவேண்டும்.2 கருத்துகள் :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பாமக பற்றிஒன்றும் சொல்ல வில்லையே

Badri Nath சொன்னது…

நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சார்.....
சொல்ற மாதிரி இல்லை....
பாமக ஒரு பயமுறுத்தம் (மக்களை) கட்சி..
ஆனால் அன்பு மணியால் சற்றே மாற்றம் தெரிகிறது என்பது சரியே...பார்ப்போம்