புதன், 9 நவம்பர், 2016

உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...

வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...   


ஹிலரி மட்டும் என்ன LEFTISTஆ என கேட்கலாம்.. ஆனால் நம்மவூர் காங்கிரஸ் மாதிரி.... அதிரடியாக இருக்காது என்று சற்றே நம்பலாம்...இந்தப் பிரச்சனையில் ANTI INCUMBENCY கடுமையாக வேலை செய்திருக்கிறது என்பதே உண்மை... காரணம் இருவரும் ஓட்டு விகிதாசாரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை..    சமீபத்தில் நடந்து முடிந்த திமுக அதிமுக தேர்தல் போலத்தான் இருந்திருக்கிறது... ஹிலரி திராவிடப் பெண்ணாக இருந்தால் கலைஞர் இதை வைத்து ”அந்தோ...” என்று கவிதையே பாடியிருப்பார்.. எப்படியோ போர் பற்றி ட்ரம்ப் பேசாமல் இருந்தால் நலம்...
                                 
வலது சாரிகள் அதிரடி அரசியல் செய்யக் கூடியவர்கள்தான்........  500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் ஒரே நாட்களில் செல்லாது என்று சாதாரண சாமானிய மக்களை அலைக்கழித்துவிட்டது அரசு... துயரங்கள் சொல்லி மாளாது... 

நேற்று அமெரிக்க தேர்தல் பற்றி விவாதம் வைத்த புதிய தலைமுறை விவாதப் பொருளையே மாற்றி 500 ரூபாய் 1000 ரூபாய் பற்றி பேச வைத்துவிட்டது மோடியின் அதிரடிப் பாணி செயல் திட்டம்... நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கனகராஜ் கூறுகிறார்..”கருப்புப் பணம் வைத்திருப்பவர் டாலராகவும் சொத்தாகவும் வேறு செக்யூரிட்டியாகவும்தான் வைத்திருப்பார்கள்..ஆகவே இது முட்டாள்தனமானது ..” என்றார்..

இது ஒரு வகையில் உண்மைதான்.. மறுபுறம் மக்கள் துயரங்களும் சொல்லி மாளாதவைதான்...

ஆனால் அதே சமயம் 
இது வரை ஒன்றேகால் கோடிக்கு மேல் கருப்புப் பணம் ஒழிக்க கண்டறியப் பட்டுள்ளது .. இந்த நடவடிக்கையால் மேலும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கடும் நெருக்கடிக்கு    ஆளாக நேரும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .. மேலும் நமது அண்டை நாடுகள் மூலமாக கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வருவது உண்மையா இல்லையா என்பது பற்றி    தோழர்  கனக ராஜ் கருத்தென்ன ...?   

அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிரடி நடவடிக்கையாக இருந்தாலும்... ஏற்றக் கொள்ளவே தோன்றுகிறது....


கருத்துகள் இல்லை :